settings icon
share icon
கேள்வி

இயேசு தேவ ஆட்டுக்குட்டி என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


யோவான் 1:29 மற்றும் யோவான் 1:36 ஆகிய வசனங்களில் இயேசு தேவ ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படுகையில், பாவத்திற்கான பரிபூரணமான மற்றும் இறுதியான பலி எனக் குறிப்பிடப்படுகிறார். கிறிஸ்து யார் என்பதையும் அவர் என்ன செய்தார் என்பதையும் புரிந்துகொள்வதற்கு, நாம் பழைய ஏற்பாட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும், இது கிறிஸ்துவின் வருகை குறித்த "குற்றநிவாரணபலியைப்" (ஏசாயா 53:10) பற்றிய தீர்க்கதரிசனங்களைக் கொண்டிருக்கிறது. உண்மையில், பழைய ஏற்பாட்டில் தேவனால் நிறுவப்பட்ட முழு பலிமுறையானது, அவருடைய ஜனங்கள் பாவங்களுக்காக பாவநிவிர்த்தி செய்யப்படும் பரிபூரண பலியை இயேசு கிறிஸ்துவின் வருகையில் நிலைநிறுத்தினார் (ரோமர் 8:3; எபிரெயர் 10).

ஆட்டுக்குட்டிகளின் பலி யூதமத வாழ்க்கை மற்றும் பலிசெலுத்தும் முறைகளில் மிகவும் முக்கிய பங்கு வகித்தது. யோவான்ஸ்நானன் இயேசுவை "உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:29) என்று குறிப்பிட்டபோது, அதைக் கேள்விப்பட்ட யூதர்கள் உடனடியாக பல முக்கிய புலிகளைக் குறித்து யோசித்திருக்கலாம். பஸ்கா பண்டிகையின் காலம் நெருங்கி வந்ததால், அவர்களது முதல் சிந்தனை பஸ்கா ஆட்டுக்குட்டியின் பலியாக இருந்திருக்கும். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்த தேவனுடைய விடுதலையை நினைவுகூரும் பண்டிகை அவர்களது கொண்டாட்டத்தில் மிகவும் முக்கியமாக பஸ்கா பண்டிகையாக இருந்தது. உண்மையில், பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு அதனுடைய இரத்தம் வீட்டினுடைய கதவுகளுக்கு தெளித்தல் (யாத்திராகமம் 12:11-13), கிறிஸ்துவின் பாவநிவாரண பலியை சிலுவையில் சுமந்து நிற்கும் ஒரு அழகிய சித்திரமாகும். அவர் யாருக்காக மரித்தாரோ அவர்களை அவருடைய இரத்தத்தால் மூடி மறைத்து, (ஆவிக்குரிய) மரணத்தின் தேவதூதனிலிருந்து நம்மை பாதுகாக்கிறார்.

ஆட்டுக்குட்டிகளின் பலி சம்பந்தப்பட்ட மற்றொரு முக்கிய பலி எருசலேமிலுள்ள ஆலயத்தில் பலியிடப்படும் தினசரி பலியாக இருந்தது. ஒவ்வொரு காலையிலும் மாலையிலும், ஜனங்களுடைய பாவங்களுக்காக ஒரு ஆட்டுக்குட்டியானது தேவாலயத்தில் பலியிடப்பட்டது (யாத்திராகமம் 29:38-42). மற்றவைகளைப் போலவே இந்த அன்றாட பலிகள், சிலுவையில் கிறிஸ்துவினுடைய பரிபூரண பலியை நோக்கியே சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில், சிலுவையில் இயேசுவின் மரணத்தின் காலம், தேவாலயத்தில் மாலை பலி செலுத்திய காலத்தில் இருந்தது. அக்காலத்திலிருந்த யூதர்கள் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளாகிய எரேமியாவையும் ஏசாயாவையும் நன்கு அறிந்திருந்தார்கள், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" இயேசு கொண்டுவரப்படுவார் என்கிற காரியத்தை முன்னறிவித்தார்கள் (எரேமியா 11:19; ஏசாயா 53:7). மேலும் யாருடைய பாடுகள் மற்றும் பலி இஸ்ரேலுக்கு மீட்புண்டாக்கும் என்றும் முன்னறிவித்தார்கள். நிச்சயமாக, அந்த "தேவ ஆட்டுக்குட்டி" இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எவரும் இல்லை.

பலி செலுத்தும் முறையானது இன்று நமக்கு விசித்திரமானதாகக் கருதினால், பணம் செலுத்துதல் அல்லது மீட்டெடுத்தல் என்கிற கருத்து நாம் புரிந்துகொள்வதற்கு இன்னமும் இருக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்று நாம் அறிந்திருக்கிறோம் (ரோமர் 6:23). நம்முடைய பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது. நாம் அனைவரும் பாவிகளாய் இருக்கிறோம் என்று வேதாகமம் கற்பிக்கிறதென்றும், நம்மில் ஒருவனும் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல என்றும் நாம் அறிந்திருக்கிறோம் (ரோமர் 3:23). நம்முடைய பாவத்தின் காரணமாக, நாம் தேவனிடமிருந்து பிரிக்கப்படுகிறோம், அவருக்கு முன்பாக நாம் குற்றவாளிகளாக நிற்கிறோம். ஆகையால், அவர் நம்மை அவரிடமாக ஒப்புரவாக்கிக்கொள்ள ஒரு வழியைக் கொடுக்கிறார் என்றால், அதற்காத்தான் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு அவர் அனுப்பிய ஒரே வழியாகும். அவரில் விசுவாசம் வைக்கிற அனைவரின் பாவத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்ய கிறிஸ்து சிலுவையில் பாவங்களின் தண்டனையை ஏற்றுக்கொண்டு மரித்தார்.

மரணம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல் மூலமாக தேவனுடைய பரிபூரண பலியாக சிலுவையில் அவருடைய மரணத்தின் மூலமாகவும், மூன்று நாட்களுக்குப் பின்னர் அவர் உயிர்த்தெழுந்ததாலும், நாம் அவரை விசுவாசித்தால் நித்திய ஜீவனை அடைய முடியும். 1 பேதுரு 1:18-21 வரையிலுள்ள வசனங்களில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ள சுவிசேஷத்தின் மகிமையான நற்செய்தியின் ஒரு பகுதியாக நம்முடைய பாவத்திற்கான பாவநிவாரணத்தை தேவன்தாமே வழங்கியிருக்கிறார் என்பதே உண்மை: “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.”

English



முகப்பு பக்கம்

இயேசு தேவ ஆட்டுக்குட்டி என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries