அவருடைய மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் இயேசு எங்கே இருந்தார்?


கேள்வி: அவருடைய மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் இயேசு எங்கே இருந்தார்?

பதில்:
1 பேதுரு 3:18-19, “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.” என்று கூறுகிறது. “ஆவியிலே” என்று 18ஆம் வசனத்திலே வரும் சொல், “மாம்சத்திலே” என்று வரும் அதே அமைப்பையே கொண்டிருக்கிறது. எனவே “ஆவி” என்ற சொல்லை “மாம்சம்” என்ற சொல்லின் பொருள் வரையறைச் சூழலில் விவரிப்பதே சரியாகும். மாம்சமும் ஆவியும் கிறிஸ்துவின் ஆவியும் மாம்சமுமாகும். “ஆவியிலே உயிர்பிக்கப்பட்டார்” என்ற சொற்கள் கிறிஸ்து பாவம் சுமந்ததும் மரித்ததும் அவருடைய மனித ஆவியை பிதாவினடத்திலிருந்து பிரித்ததைக் காண்பிக்கிறது (மத்தேயு 27:46). மத்தேயு 27:46 மற்றும் ரோமர் 1:3-4ல் குறிப்பிட்டுள்ளதுபோலான மாம்சத்திற்கும் ஆவிக்கும் உள்ள் வேற்பாடே இது, கிறிஸ்துவின் மாம்சத்திற்கும் பரிசுத்த ஆவிக்கும் இடையேயான வேறுபாடு இல்லை. கிறிஸ்து பாவத்திற்கு பரிகாரத்தைச் செலுத்தி முடிந்தபின், அவரது ஆவி தான் பிரிந்திருந்த ஐக்கியத்தோடே இணைந்தது.

கிறிஸ்துவின் பாடுகளுக்கும் (18ஆம் வசனம்) அவரது மகிமைப்படுதலுக்கும் (22ஆம் வசனம்) இடையே இருக்கும் ஒரு முக்கியமான தொடர்பை ஒன்று பேதுரு 3:18-22 விவரிக்கிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே நடந்ததைப் பேதுரு மட்டுமே தெளிவாகத் தெரிவிக்கிறார். 19ஆம் வசனத்திலுள்ள “போதித்தார்” என்ற சொல் சுவிஷேத்தை போதிப்பதைக் குறிக்க புதிய ஏற்பாட்டில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சொல் இல்லை. இது ஒரு செய்தியை பிரகடணம் செய்வதை நேரடியாகக் குறிக்கும். இயேசு பாடு அனுபவித்துச் சிலுவையில் மரித்தார், இதில் அவர் உடல் மரணத்திற்கு உள்ளானது, அவர் பாவமானபோது அவர் ஆவி மரித்தது. ஆனால் அவர் ஆவி உயிர்பிக்கப்பட்டபோது அவர் அதைத் தன் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார். பேதுருவைப் பொருத்தவரையில், தன்னுடைய மரணத்துக்கும் உயிர்தெழுதலுக்கும் இடையே எப்போதோ “காவலிலுள்ள ஆவிகளுக்குப்” பகிரங்கமாக அறிவித்தார்.

தொடங்கும்போதே, பேதுரு மக்களுக்கு அறிவிக்கையில் “ஆத்மாக்கள்” என்றல்லாமல் “ஆவிகள்” (3:20) என்றே குறிப்பிடுகிறார். புதிய ஏற்பாட்டில், “ஆவிகள்” என்ற சொல் மனிதர்களையல்ல தேவதூதர்களையும் பிசாசுக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும், 22ஆம் வசனமும் இந்த பொருளைத்தான் குறிக்கிறது. மேலும், வேதாகமத்தில் எங்கேயுமே இயேசு நரகத்திற்கு சென்றுவந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. அப்போஸ்தலர் நடபடிகள் 2:31 அவர் பாதாளத்திற்குச் சென்று வந்ததாகவே குறிப்பிடுகிறது. பாதாளம் என்பது நரகம் இல்லை. “பாதாளம்” என்னும் சொல், மரித்தவர்கள் உயிர்தெழுதலுக்காக காத்திருக்கும் ஒரு தற்காலிகமான இடத்தைப் பற்றிய பொருளைக் குறிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் காண்பிக்கிறது. நரகம் என்பது தொலைந்து போனவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு கடைசியாக நிரந்தரமாக அனுப்பப்படுகிற இடம். பாதாளமோ தற்காலிகமான இடம்.

நம் ஆண்டவர் தன்னுடைய ஆவியை பிதாவினடத்தில் ஒப்புவித்தார்; மரித்தார்; மேலும் மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடையே உள்ள நேரத்தில் மரித்தவர்களின் இடம் என்னும் சுழலுக்குச் சென்றார். அங்கு அவர் ஆவி ஜீவன்களுக்குப் பிரசங்கித்தார் (விழுந்துபோன தூதர்களாக இருக்கலாம்: பார்க்க யூதா 6). அவர்கள் யாரென்றால் ஏதோ ஒரு வகையில் நோவாவின் காலத்தில் வந்த வெள்ளத்திற்கு முன் உள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள். வசனம் 20 இதைத் தெளிவுபடுத்துகிறது. அவர் காவலிலுள்ள ஆவிகளுக்கு என்ன பிரசங்கித்தார் என்று பேதுரு கூறவில்லை ஆனால் அது மீட்பு பற்றிய செய்தியாக இருக்க முடியாது ஏனெனில் தூதர்கள் இரட்சிக்கப்பட முடியாது (எபிரேயர் 2:16). இது பெரும்பாலும் சாத்தானின் மேலும் அவன் சேனையின் மேலும் வெற்றி அடைந்ததற்குரிய பிரகடணமாயிருந்திருக்கலாம் (1 பேதுரு 3:22; கொலோசேயர் 2:15). எபேசியர் 4:8-10 கூட கிறிஸ்து “பரதீசுக்கு” சென்று அவருடைய மரணத்திற்கு முன்பு தன்மேல் நம்பிக்கை வைத்தவர்களை பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார். என்ன நடந்தது என்று இந்தப் வேதாகமப் பகுதியில் அதிகமாக விவரிக்கப்படவில்லை, ஆனால், “சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி” என்பது குறிக்கும் பொருள் இதுதான் என பெரும்பாலான வேத ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.

ஆகையால் கிறிஸ்து அவருடைய மரணத்திற்கு உயிர்த்தெழுதலுக்கும் இடையே இருந்த மூன்று நாட்களில் என்ன செய்தார் என்று வேதாகமத்தில் முழுவதும் தெளிவாக இல்லை என்றே சொல்லமுடியும். ஆனால் அவர் விழுந்துபோன தூதர்கள் அல்லது அவிசுவாசிகளின் மேல் வெற்றியைப் பிரசங்கித்தார் என்பது மட்டும் புலனாகிறது. இயேசு மக்களுக்கு இரட்சிப்பிற்கான இரண்டாம் வாய்ப்பை அளிக்கவில்லை என்பது மட்டும் நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது. மரணத்திற்கு பின் நாம் நியாயத்தீர்ப்பை சந்திக்க வேண்டும், இரண்டாம் வாய்ப்பை அல்ல என்பதை வேதாகமம் நமக்குச் சொல்கிறது (எபிரேயர் 9:27). இயேசுவின் மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் என்ன செய்தார் என்பதற்கு ஒரு திட்டமும் தெளிவுமான விடையில்லை. ஒருவேளை, மகிமையை சென்றடையும்போது நாம் புரிந்துகொள்ளப்போகும் இரகசியந்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
அவருடைய மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் இயேசு எங்கே இருந்தார்?