settings icon
share icon
கேள்வி

நான் ஒரு யேகோவாவின் சாட்சியின் வகுப்பைச் சேர்ந்தவன், நான் ஏன் கிறிஸ்தவனாக மாற வேண்டும்?

பதில்


ஒருவேளை சுவிசேஷ கிறிஸ்தவர்களுக்கும் யேகோவாவின் சாட்சிகளுக்கும் இடையே உள்ள மிக முக்கியமான பொதுவானது, தேவன் மற்றும் அவர் நமக்கான எதிர்பார்ப்புகள் தொடர்பான பிரச்சினைகளில், தேவனால் ஈர்க்கப்பட்ட இறுதி அதிகாரமாக வேதாகமத்தை நம்புவதும் நம்பிக்கையும் ஆகும். நாம் காரியங்களை வித்தியாசமாகப் புரிந்துகொண்டாலும், யேகோவாவின் சாட்சிகள் தேவனையும் அவருடைய சித்தத்தையும் அறிந்துகொள்ள பரிசுத்த வேதாகமத்தைப் படிப்பதில் அவர்கள் சார்ந்திருப்பதற்கும் விடாமுயற்சியோடும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பெரோயா பட்டணத்தாரைப் போலவே, வாழ்வின் எல்லா விஷயங்களையும் வேதத்தின் வெளிச்சத்தில் ஆராய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். அதற்காக, சில பொதுவான தவறான புரிதல்களை நீக்க புதிய உலக மொழிபெயர்ப்பின் (அவர்களின் காவற்கோபுர சங்கத்தால் வெளியிடப்பட்ட வேதாகமத்தின் பதிப்பு) வசனங்களை ஆராய்வோம்.

தேவனுடைய நாமம்

பவுலின் ஊழியத்தின் போது அந்தியோகியாவில் முதன்முதலில் "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் மற்றும் வழிபாட்டாளர்களாக இருந்து கிறிஸ்தவர்கள் தங்கள் பெயரைப் பெற்றனர் (அப்போஸ்தலர் 11:26). ஒரு கிறிஸ்தவராக இருப்பது என்பது கிறிஸ்துவின் நபரைப் பற்றி மனிதர்களுக்கு சாட்சியாக இருப்பது, கிறிஸ்துவின் வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு சாட்சியாக இருப்பது என்று பவுல் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தினார். மறுபுறம், யேகோவாவின் சாட்சிகள், நாம் நம் ஆராதனையை பிதாவாகிய தேவனின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று நம்புகிறார்கள் (சில சமயங்களில் அவர் வேதாகமத்தில் "யேகோவா" என்று குறிப்பிடப்படுகிறார்). இருப்பினும், "யெகோவா" என்ற பெயர் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கலப்பினப் பெயராகும், இது “யாஹ்” (YHWH) என்ற டெட்ராகிராமாட்டோனில் (உயிரெழுத்துக்கள் இல்லாத வார்த்தை) உயிரெழுத்துக்களைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்பட்டதாகும், இது எபிரேய மொழியில் “யாவே” (Yahweh) என்றும் கிரேக்கத்தில் “யேகோவா" (Jehovah) என்றும் அறியப்படும் அசல் மொழிபெயர்ப்பாகும். சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் இயேசுவை அவருடைய முழுமையிலும் தேவனாகப் புரிந்துகொள்கிறார்கள், தெய்வீகத்தில் சமமானவர், ஆனால் செயல்பாட்டில் பிதாவாகிய தேவனிடமிருந்து வேறுபட்டவர். பிதாவாகிய தேவனுடைய பெயர்களில் ஒன்று யெகோவா என்பதை கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்; இருப்பினும், பிதாவாகிய தேவனைக் குறிப்பிடுவதற்கு வேதாகமம் பயன்படுத்தும் வேறு பல பெயர்கள் மற்றும் தலைப்புகள் உள்ளன.

யேகோவாவின் சாட்சிகள் இயேசுவை பிரதான தூதரான மைக்கேல் என்று புரிந்துகொள்கிறார்கள், மேலும் அவர்கள் அவருடைய தெய்வீகத்தை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். நாம் பார்க்கப்போவது போல, இயேசுவை தேவனைத் தவிர வேறு எதையும் நாம் புரிந்து கொண்டால், பல வசனங்கள் வெளிப்படையான முரண்பாடுகளை முன்வைக்கின்றன. இருப்பினும், தேவனுடைய வார்த்தை பிழையற்றது மற்றும் அது தன்னில்தானே முரண்படவில்லை என்பதை நாம் அறிவோம். எனவே, நாம் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், அது அவருடைய வெளிப்பாட்டிற்கு இசைவாகவும் உண்மையாகவும் இருக்கிறது. இயேசுவை தேவனுடைய குமாரன் என்று நாம் புரிந்து கொண்டால் இதே வசனங்களில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள் - அவர் சரீர வடிவத்தில் தேவனுடைய முழுமை - அவர் துன்பப்படுகிற ஊழியராகவும், நம் பாவத்திற்காக பலியாகவும் இருக்க வேண்டும். (எல்லா வசனங்களும் யேகோவாவின் சாட்சிகளின் புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டப்பட்டன. தடித்த வகை எழுத்துக்கள் மூலம் முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது.)

தேவனுடைய மகிமை

(பிதாவாகிய தேவனைப் பற்றிய வசனங்கள்)

ஏசாயா 42:8 “நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர். என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன். என்னுடைய புகழை எந்தச் சிலைக்கும் கொடுக்க மாட்டேன்.”

ஏசாயா 48:11 "... என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்."

(இயேசுவைப் பற்றிய வசனங்கள்)

யோவான் 8:54 "...என் தகப்பன் என்னை மகிமைப்படுத்துகிறார். அவரை உங்கள் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்."

யோவான் 16:14 "அவர் என்னை மகிமைப்படுத்துவார்...."

யோவான் 17:1 “...தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்…”

யோவான் 17:5 “தகப்பனே, உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் பக்கத்தில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து+ இப்போது உங்கள் பக்கத்தில் என்னை மகிமைப்படுத்துங்கள்.”

பிலிப்பியர் 2:10 "பரலோகத்திலும் பூமியிலும் மண்ணுக்குள்ளும் இருக்கிற எல்லாரும் இயேசுவின் பெயரில் மண்டிபோட வேண்டும் என்பதற்காகவும்"

எபிரெயர் 5:5 “அதேபோல், கிறிஸ்துவும் தன்னைத் தானே தலைமைக் குருவாக்கிக்கொள்வதன் மூலம் தன்னை மகிமைப்படுத்திக்கொள்ளவில்லை; “நீ என்னுடைய மகன்; இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்” என்று அவரிடம் சொன்னவர்தான் அவரை மகிமைப்படுத்தினார்.”

இரட்சகர்

(பிதாவைப் பற்றி)

ஏசாயா 43:3 "நான் உன் கடவுளாகிய யெகோவா, உன் மீட்பர். நான் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள்."

ஏசாயா 43:11 "நான் யெகோவா, என்னைத் தவிர வேறு மீட்பர் இல்லை.”

ஏசாயா 45:21 “யெகோவாவாகிய நான்தானே? என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. நீதியான கடவுளும் மீட்பரும் நான்தான்; என்னைப் போல வேறு யாரும் இல்லை."

(இயேசுவைப் பற்றி)

லூக்கா 2:11 "ஏனென்றால் உங்களுக்கு ஒரு மீட்பர் பிறந்திருக்கிறார், அவர்தான் எஜமானாகிய கிறிஸ்து..."

அப்போஸ்தலர் 13:23 “தான் கொடுத்த வாக்குறுதியின்படியே, தாவீதின் சந்ததியிலிருந்து இயேசுவை இஸ்ரவேலின் மீட்பராக வர வைத்தார்.”

தீத்து 1:4 "...பிதாவாகிய தேவனிடமிருந்தும் நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் தயவும் சமாதானமும் உண்டாவதாக."

நாம் யாருடைய நாமத்தில் விசுவாசம் வைப்பது?

(இயேசுவைப் பற்றி அல்லது இயேசுவால் கூறப்பட்டது)

யோவான் 14:12 "உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்மேல் விசுவாசம் வைக்கிறவன் நான் செய்கிற செயல்களைச் செய்வான்..."

அப்போஸ்தலர் 4:12 "அவரைத் தவிர வேறு யாராலும் மீட்பு இல்லை; ஏனென்றால், நாம் மீட்புப் பெறும்படி பூமியிலுள்ள மனுஷர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை."

அப்போஸ்தலர் 26:18 "...அவர்கள் என்மேல் விசுவாசம் வைத்து...புனிதமாக்கப்பட்டோருக்குரிய சொத்தையும் பெறுவார்கள்."

வெளிப்படுத்துதல் 2:13 " நீ எங்கே குடியிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்; அங்கேதான் சாத்தானின் சிம்மாசனம் இருக்கிறது. ஆனாலும், நீ எனக்கு உண்மையோடு இருக்கிறாய். என்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தை நீ விட்டுவிடவில்லை...."

யோவான் 20:28 "அதற்கு தோமா, “என் எஜமானே, என் கடவுளே!” என்று சொன்னார். அப்போது இயேசு, “என்னைப் பார்த்ததால்தான் நம்புகிறாயா?”

யோவான் 20:31 “ஆனால், இயேசுதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து என்று நீங்கள் நம்புவதற்காகவும், அப்படி நம்பிக்கை வைத்து அவருடைய பெயரில் வாழ்வு பெறுவதற்காகவும்தான் இவையெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன.”

அப்போஸ்தலர் 2:38 "பேதுரு அவர்களை நோக்கி: 'மனந்திரும்புங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறக்கடவர்கள்..."

1 யோவான் 3:23 “அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும் என்பதே அவருடைய கட்டளை.”

சிருஷ்டிக்கப்பட்டவரா அல்லது சிருஷ்டிகரா?

யேகோவா இயேசுவை ஒரு தேவதூதனாகப் படைத்தார் என்றும், மற்ற அனைத்தையும் இயேசு படைத்தார் என்றும் யெகோவாவின் சாட்சிகள் கற்பிக்கிறார்கள். வேதம் என்ன சொல்கிறது?

(பிதாவைப் பற்றி)

ஏசாயா 66:2 "இப்போது இவைகளையெல்லாம் என் கையே உண்டாக்கியது, இவைகளெல்லாம் உண்டாயின."

ஏசாயா 44:24 "...யேகோவாவாகிய நான் எல்லாவற்றையும் செய்கிறேன், நானாகவே வானத்தை விரித்தேன்..."

(இயேசுவைப் பற்றி)

யோவான் 1:3 "எல்லாம் அவர் மூலமாக உண்டானது, அவரையன்றி ஒன்று கூட உண்டானதில்லை." எல்லாமே இயேசுவின் மூலம் தோன்றியிருந்தால், அவர் "எல்லாவற்றிலும்" உள்ளடங்கியிருப்பதால் அவர் படைக்கப்பட்டிருக்க முடியாது.

இயேசு மற்றும் யேகோவாவின் நிலை, நாமங்கள் மற்றும் தலைப்புகள்

ஏசாயா 9:6 “நமக்காக ஒருவர் பிறந்திருக்கிறார். நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும். ஞானமுள்ள ஆலோசகர், வல்லமையுள்ள கடவுள், என்றென்றுமுள்ள தகப்பன், சமாதானத்தின் அதிபதி என்றெல்லாம் அவர் அழைக்கப்படுவார்.”

வெளிப்படுத்துதல் 1:8 “ஆல்பாவும் ஒமேகாவும் நானே; இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே” என்று கடவுளாகிய யெகோவா சொல்கிறார்..”

வெளிப்படுத்துதல் 1:17-18 “...முதலானவரும் கடைசியானவரும் உயிருள்ளவரும் நான்தான். மரணமடைந்தேன், ஆனால் இதோ! என்றென்றும் உயிரோடு இருக்கிறேன், மரணத்தின் சாவியும் கல்லறையின் சாவியும் என்னிடம் இருக்கின்றன.”

வெளிப்படுத்துதல் 2:8 “...முதலானவரும் கடைசியானவரும், மரணமடைந்து [மீண்டும்] உயிரோடு எழுந்தவரும் என்று அவர் கூறுகிறார்.”

வெளிப்படுத்துதல் 22:12-16 “இதோ! நான் சீக்கிரமாக வருகிறேன், ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலைக்குத் தக்க நான் கொடுக்கும் வெகுமதி என்னுடன் இருக்கிறது. நானே அல்பாவும் ஒமேகாவும், முதலும் கடைசியும், ஆரம்பமும், முடிவும்... சபைகளுக்காக இவைகளைக் குறித்து உங்களுக்குச் சாட்சிகொடுக்க இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறேன்."

வெளிப்படுத்துதல் 21:6-7 “நானே அல்பாவும் ஒமேகாவும், ஆரம்பமும் முடிவும். தாகமுள்ளவனுக்கு ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன். வெற்றிபெறும் எவரும் இவற்றைச் சுதந்தரித்துக்கொள்வார்கள், நான் அவனுடைய கடவுளாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.” யெகோவா என்பது ஆல்பா மற்றும் ஒமேகா (முதல் மற்றும் கடைசி கிரேக்க எழுத்துக்கள்) என்றால், “முதல் மற்றும் கடைசி” என்பது யெகோவாவைக் குறிக்க வேண்டும், அதையே சாட்சிகள் கூறுகின்றனர். ஆனால் யெகோவா எப்போது இறந்தார்? இறந்து மீண்டும் வாழ்ந்த ஒரே "முதல் மற்றும் கடைசி" இயேசு மட்டுமே.

எபிரேயர் 1:13 “அதோடு, தேவதூதர்களில் யாரிடமாவது, “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்று அவர் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா?”

சத்தியம் மற்றும் ஒற்றுமை

இயேசுவின் மாற்றுப் பரிகாரம் ஒரு காரணத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது: தேவன் அவருடைய சொந்த நீதியை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார். ஒரு மனிதனின் அல்லது ஒரு தேவதூதனின் நீதி போதாது. அது தேவனுடைய நீதியான நியாயப்பிரமாணத்தின் பரிசுத்த மற்றும் பரிபூரண தரத்தை சந்திக்க முடியாது. இயேசு மட்டுமே பொருத்தமான பலியாக இருந்தார், ஏனென்றால் அவர் தேவனுடைய நீதியாக இருந்தார், மேலும் தேவனுடைய நியாயப்பிரமாணம் சிந்திய இரத்தத்தை தேவைப்படுத்தியதால், இயேசு மாம்சத்தை எடுத்துக்கொண்டார், அதனால் அவர் தம்முடைய நாமத்தை விசுவாசிக்கிற அனைவருக்கும் மீட்கும் பொருளாக இருந்தார்.

இயேசுவை தேவன் அவதாரம் என்று நாம் புரிந்து கொண்டால், மேலே உள்ள அனைத்து வசனங்களும் உண்மையாகவும், அவைகளின் கூற்றுகளில் ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதாகவும் புரிந்து கொள்ள முடியும். முக மதிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட எளிய காரணத்துடன் அவற்றை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். எவ்வாறாயினும், இயேசு தேவனை விட குறைவானவர் - மிகாவேல் தூதன் - இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை மற்றும் அவற்றின் இயற்கையான சூழலில் எடுத்துக் கொள்ளும்போது அனைத்தும் உண்மையாக இருக்க முடியாது. எனவே, தேவனுடைய வார்த்தையின் உண்மை, வேதவாக்கியங்கள் அனைத்தும் ஒன்றுபட்டது, ஒன்றோடொன்று இணைந்திருப்பது, ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பது, பிழையற்றது மற்றும் உண்மையானது என்ற மற்றொரு புரிதலுக்கு நாம் வர வேண்டும். அந்த ஒருங்கிணைக்கும் உண்மையை இயேசு கிறிஸ்துவின் நபரிலும் தெய்வத்திலும் மட்டுமே காண முடியும். வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் இருக்க விரும்புவதைப் போல இல்லாமல், தேவன் எல்லா மகிமையையும் பெறுவாராக.

தேவனின் அவதாரமான இயேசுவைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களிடம் கேளுங்கள். இந்த தேவன் அவதாரமான இயேசுவில் உங்கள் நம்பிக்கையை வைக்க நீங்கள் தயாராக இருந்தால், பின்வரும் வார்த்தைகளை நீங்கள் தேவனிடத்தில் பேசலாம்: "பிதாவாகிய தேவனே, நான் ஒரு பாவி என்றும், உமது கோபத்திற்கு தகுதியானவன் என்றும் நான் அறிவேன். இயேசு மட்டுமே இரட்சகர் என்பதையும், தேவனாக இருப்பதன் மூலம் மட்டுமே இயேசு இரட்சகராக இருக்க முடியும் என்பதையும் நான் உணர்ந்து நம்புகிறேன். என்னைக் இரட்சிக்க நான் இயேசுவின் மேல் மட்டுமே நம்பிக்கை வைக்கிறேன். பிதாவாகிய தேவனே, தயவாய் என்னை மன்னித்து, என்னைச் சுத்தப்படுத்தி, என்னை மாற்றும். உம்முடைய அற்புதமான கிருபைக்கும் இரக்கத்திற்கும் நன்றி!”

English



முகப்பு பக்கம்

நான் ஒரு யேகோவாவின் சாட்சியின் வகுப்பைச் சேர்ந்தவன், நான் ஏன் கிறிஸ்தவனாக மாற வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries