settings icon
share icon
கேள்வி

இஸ்லாம் என்றால் என்ன, மற்றும் முஸ்லிம்கள் எதை நம்புகிறார்கள்?

பதில்


இஸ்லாமிய மதம் ஏழாம் நூற்றாண்டின் காலத்தில் முஹம்மது என்ற மனிதரால் தொடங்கப்பட்டது. காபிரியேல் என்னும் தூதன் தன்னை சந்தித்ததாக அவர் கூறினார். முஹம்மது இறக்கும் வரை அதாவது சுமார் 23 ஆண்டுகள் தொடர்ந்து இந்த தேவதூதர் வருகைகளின் போது, அல்லாவின் வார்த்தைகளை முஹம்மதுவுக்கு வெளிப்படுத்தினார் (இவர் அரபு மொழியில் முஸ்லிம்களால் “அல்லாஹ்” என்று அழைக்கப்படுகிறார்). இந்த ஆணையிடப்பட்ட வெளிப்பாடுகள் இஸ்லாமின் புனித நூலான குர்ஆனை உள்ளடக்கியது. குர்ஆன் அல்லாஹ்வின் இறுதி அதிகாரம் மற்றும் கடைசி வெளிப்பாடு என்று இஸ்லாம் கற்பிக்கிறது.

இஸ்லாமைப் பின்பற்றுபவர்களான முஸ்லிம்கள், குர்ஆனை அல்லாஹ்வின் முன்கூட்டிய இருக்கிறதான மற்றும் சரியான வார்த்தையாக நம்புகிறார்கள். மேலும், பல முஸ்லிம்கள் குர்ஆனின் அரபி மொழியில் அல்லாத மற்ற அனைத்து மொழி பதிப்புகளையும் நிராகரிக்கின்றனர். மொழிபெயர்ப்பு என்பது குர்ஆனின் சரியான பதிப்பு அல்ல, இது அரபியில் மட்டுமே உள்ளது என்பது அவர்களின் வாதமாகும். குர்ஆன் முஸ்லீம்களின் முக்கிய புனித நூலாக இருந்தாலும், மத போதனைகளின் இரண்டாவது ஆதாரமாக சுன்னா கருதப்படுகிறது. முஹம்மது கூறியது, செய்தது, ஒப்புதல் அளித்தது போன்றவைகளைப் பற்றி முஹம்மதுவின் தோழர்களால் சுன்னா எழுதப்பட்டது.

இஸ்லாமின் முக்கிய நம்பிக்கைகள் என்னவென்றால், அல்லாஹ் மட்டுமே உண்மையான கடவுள் என்றும், முஹம்மது அல்லாஹ்வின் தீர்க்கதரிசி என்பதுமாகும். இந்த நம்பிக்கைகளை வெறுமனே குறிப்பிடுவதன் மூலம், ஒரு நபர் இஸ்லாமிற்கு மாற முடியும். "முஸ்லீம்" என்ற வார்த்தையின் அர்த்தம் "அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்" என்பதாகும். மற்ற எல்லா மதங்களும் (யூத மதம் மற்றும் கிறிஸ்தவம் உட்பட) இதிலிருந்து பெறப்பட்ட ஒரு உண்மையான மதமாக இஸ்லாம் தன்னை கருதுகிறது.

முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையை ஐந்து தூண்களில் அடித்தளமாகக் கொண்டுள்ளனர்:

1. விசுவாசத்தின் சாட்சியம்: “அல்லாஹ் தவிர உண்மையான தேவன் வேறொருவரும் இல்லை, முஹம்மது தேவனுடைய தூதுவர் (தீர்க்கதரிசி).”

2. ஜெபம்: ஒவ்வொரு நாளும் ஐந்து ஜெபங்கள் செய்யப்பட வேண்டும்.

3. கொடுப்பது: அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வருகிறப்படியினால், ஒவ்வொருவரும் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்.

4. நோன்பு: அவ்வப்போது இருக்கின்ற நோன்பைத் தவிர, அனைத்து முஸ்லிம்களும் ரமலான் கொண்டாட்டத்தின் போது (இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம்) நோன்பு இருக்கவேண்டும்.

5. ஹஜ்: மெக்காவிற்கு (மக்கா) புனித யாத்திரை தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது (இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாம் மாதத்தில்) செல்ல வேண்டும்.

முஸ்லிம்களுக்குக் கீழ்ப்படிதலின் கட்டமைப்பான இந்த ஐந்து கொள்கைகளும் மிகவும் தீவிரமானதாகவும் எழுத்தியல் பிரகாரமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சொர்க்கத்தில் ஒரு முஸ்லீம் நுழைவு பெறுவதற்கு அவரது இந்த ஐந்து தூண்களுக்குக் கீழ்ப்படிவதைக் குறிக்கிறது.

கிறிஸ்தவம் தொடர்பாக, இஸ்லாம் பல ஒற்றுமைகள் மற்றும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளையும் கொண்டுள்ளது. கிறிஸ்தவத்தைப் போலவே, இஸ்லாம் ஒரே தேவன் என்கிறதான ஏகத்துவமான கொள்கையைக் கொண்டுள்ளது, ஆனால் கிறிஸ்தவத்திற்கு எதிராக இஸ்லாம் திரித்துவத்தின் கருத்தை முற்றிலுமாய் நிராகரிக்கிறது. நியாயப்பிரமாணம் மற்றும் நற்செய்திகள் போன்ற வேதாகமத்தின் சில பகுதிகளை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் அதில் பெரும்பகுதியை அவதூறாகவும் தேவனால் ஏவப்படாததுமாகவும் கருதி நிராகரிக்கிறது.

இயேசு வெறும் தீர்க்கதரிசி மட்டுமே என்றும், தேவனுடைய குமாரன் அல்ல (அல்லாஹ் மட்டுமே தேவன், அவருக்கு எப்படி ஒரு மகன் இருக்க முடியும்? என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்) இஸ்லாம் கூறுகிறது. மாறாக, இயேசு ஒரு கன்னிகை வழியாக பிறந்தாலும், ஆதாமைப் போலவே பூமியின் மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டார் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்; எனவே, அவர்கள் கிறிஸ்தவத்தின் மிகமுக்கியமான மையப் போதனைகளில் ஒன்றை மறுக்கிறார்கள்.

இறுதியாக, நல்ல செயல்களாலும், குர்ஆனுக்குக் கீழ்ப்படிதலினாலும் சொர்க்கம் பெறப்படுகிறது என்று இஸ்லாம் கற்பிக்கிறது. இதற்கு மாறாக, மனிதன் பரிசுத்த தேவனை அளவிட முடியாது என்பதை வேதாகமம் வெளிப்படுத்துகிறது. அவருடைய இரக்கம் மற்றும் அன்பின் காரணமாக கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே பாவிகள் இரட்சிக்கப்பட முடியும் (எபேசியர் 2:8-9).

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் இரண்டும் உண்மையாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. ஒன்று இயேசு மிகப் பெரிய தீர்க்கதரிசி, அல்லது முஹம்மது. ஒன்று வேதாகமம் தேவனுடைய வார்த்தை, அல்லது குர்ஆன். இயேசு கிறிஸ்துவை இரட்சகராகப் ஏற்றுக்கொள்வதன் மூலமோ அல்லது இஸ்லாமின் ஐந்து தூண்களைக் கடைபிடிப்பதன் மூலமோ இரட்சிப்பு அடையப்படுகிறது. மீண்டும், இரு மதங்களும் உண்மையாக இருக்க முடியாது. இந்த உண்மை, இரு மதங்களையும் முக்கியமான பகுதிகளில் பிரிந்திருப்பது நித்திய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

Englishமுகப்பு பக்கம்

இஸ்லாம் என்றால் என்ன, மற்றும் முஸ்லிம்கள் எதை நம்புகிறார்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries