settings icon
share icon

யோவான் எழுதின சுவிசேஷம்

எழுத்தாளர்: யோவான் 21:20-24, எழுத்தாளர் தன்னை "இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்" என்று விவரிக்கிறார், வரலாற்று மற்றும் உள்ளான காரணங்களால் இது செபுதேயுவின் குமாரர்களில் ஒருவரான யோவான் அப்போஸ்தலன் என்று புரிந்து கொள்ளப்படுகிறது (லூக்கா 5:10).

எழுதப்பட்ட காலம்: கி.பி. 135-ல் தேதியிட்ட சில பாப்பிரஸ் துண்டுகளை கண்டுபிடித்ததன் அடிப்படையில், அதற்கு முன்னர் இந்த புத்தகம் எழுதப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அதே வேளையில் எருசலேம் அழிக்கப்படுவதற்கு (கி.பி. 70), முன்பு இது எழுதப்பட்டதாக சிலர் நினைக்கிறார்கள், ஆகவே கி.பி. 85-90 வரையிலுள்ள காலம் இதன் எழுத்துக்கு மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலமாக இருக்கிறது.

எழுதப்பட்டதன் நோக்கம்: யோவான் 20:31ல், பின்வருமாறு நோக்கத்தை யோவான் மேற்கோளிடுகிறார்: "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது." மூன்று ஒருங்கிணைந்த சுவிசேஷப் புத்தகங்களைப் போலல்லாமல், யோவானின் நோக்கம் கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிய காலவரிசைக் கதையை முன்வைப்பதல்ல, மாறாக அவருடைய தெய்வத்துவத்தைக் காண்பிப்பதாகும். யோவான் இரண்டாம் தலைமுறை விசுவாசிகளின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், மற்றவர்களையும் இந்த விசுவாசத்திற்குள்ளாக வரும்படிக்கு வளர்க்கவும் முயன்றது மட்டுமல்லாமல், பரவி வரும் ஒரு தவறான போதனையையும் சரிசெய்ய முயன்றார். யோவான் இயேசு கிறிஸ்துவை "தேவனுடைய குமாரன்" என்று வலியுறுத்தினார், பரிபூரணமான தேவனாகவும், பரிபூரணமான மனிதனாகவும், "கிறிஸ்து-ஆவி" என்கிற மனித இயேசுவின் ஞானஸ்நானத்தில் வந்து அவரை சிலுவையில் அறையும்படி பார்த்த பொய்யான கோட்பாட்டிற்கு மாறாக யோவான் இதை விவரித்து தெளிவு படுத்துகிறார்.

திறவுகோல் வசனங்கள்: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:1,14).

“மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29).

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16).

“இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.” (யோவான் 6:29).

“நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.” (யோவான் 10:28).

“இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.” (யோவான் 11:25-26).

“அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6).

“அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?” (யோவான் 14:9).

“உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17).

“இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.” (யோவான் 19:30).

“அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.” (யோவான் 20:29).

சுருக்கமான திரட்டு: கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை நிரூபிப்பதற்கும் அவருடைய ஊழியத்தை விளக்குவதற்கும் அடையாளங்களாக யோவானின் நற்செய்தி ஏழு அற்புதங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறது. இந்த அறிகுறிகள் மற்றும் சம்பவங்கள் சில யோவானில் மட்டுமே காணப்படுகின்றன. நான்கு நற்செய்திகளில் இது மிகவும் இறையியல் மற்றும் பிற நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைக் கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் தனது பரமேறுதலுக்குப் பிறகு இறங்கி வரும் ஊழியத்தைப் பற்றி அவர் அதிகம் பகிர்ந்து கொள்கிறார். யோவான் தனது நற்செய்தியின் தொடர்ச்சியான கருப்பொருள்களைக் காட்டும் சில சொற்கள் அல்லது சொற்றொடர்கள் உள்ளன: விசுவாசியுங்கள், சாட்சி, தேற்றரவாளர், ஜீவன் - மரணம், ஒளி - இருள், நானே ... (இயேசு "நானே" என மொழிந்த கூற்றுக்கள்), மற்றும் அன்பு.

யோவான் நற்செய்தி கிறிஸ்துவை அவரது பிறப்பிலிருந்து அல்ல, மாறாக "ஆதியில்" இருந்த "வார்த்தை" (லோகோஸ்) என்று அறிமுகப்படுத்துகிறது, அவர் தேவனாக, படைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் ஈடுபட்டுள்ளார் (1:1-3) பின்னர் அவர் இந்த பூமிக்கு வரும்படிக்கு மாம்சமாக மாறுகிறார் (1:14) அவர் குற்றமில்லாத, பழுதற்ற பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியாக நம் பாவங்களை அகற்றுவதற்காக (யோவான் 1:29) ஜீவனையே தந்தார். இயேசு மேசியா என்பதைக் காட்டும் ஆவிக்குரிய உரையாடல்களை யோவான் தேர்ந்தெடுக்கிறார் (4:26) மற்றும் சிலுவையில் அவர் அடைந்த மரணத்தின் மூலம் ஒருவர் எவ்வாறு இரட்சிக்கப்படுகிறார் என்பதை விளக்குகிறார் (3:14-16). யூதத் தலைவர்களைத் திருத்துவதன் மூலம் அவர் பலமுறை கோபப்படுகிறார் (2:13-16); ஓய்வுநாளில் குணப்படுத்துதல், மற்றும் தேவனுக்கு சொந்தமான சுபாவ குணாதிசயங்கள் (5:18; 8:56-59; 9:6,16; 10:33) அவரில் காணப்பட்டன. இயேசு தம்முடைய சீஷர்களை அவருக்கு நேரிடவிருக்கும் மரணத்துக்காகவும், அவருடைய உயிர்த்தெழுதலுக்கும் பரமேறுதலுக்கும் பின்னர் அவர்கள் செய்யும் ஊழியத்திற்கும் தயார் செய்கிறார் (யோவான் 14-17). பின்னர் அவர் நம் ஸ்தானத்தில் சிலுவையில் மனமுவந்து சிலுவையில் மரிக்கிறார் (10:15-18), நம்முடைய பாவக் கடனை முழுவதுமாக செலுத்துகிறார் (19:30) இதனால் பாவத்திலிருந்து இரட்சிக்கும் இரட்சகராக அவரையே நம்புகிற எவரும் இரட்சிக்கப்படுவார்கள் (யோவான் 3:14-16 ). பின்னர் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, தம்முடைய அவர் தேவன் மற்றும் கர்த்தர் என்று சந்தேகிக்கும் தமது சீஷர்களுக்கு தெளிவு படுத்துகிறார் (20:24-29).

இணைப்புகள்: இயேசுவை பழைய ஏற்பாட்டின் தேவன் என்று யோவான் சித்தரிப்பது இயேசுவின் ஏழு “நானே/நான்” என்னும் அறிக்கைகளில் மிகவும் உறுதியாகக் காணப்படுகிறது. அவர் "ஜீவ அப்பம்" (யோவான் 6:35), வனாந்தரத்தில் இஸ்ரவேலருக்கு உணவளிக்க வானத்திலிருந்து மன்னாவை வழங்கியதைப் போலவே, அவருடைய மக்களின் ஆத்துமாக்களுக்கு உணவளிக்க தேவன் வழங்கினார் (யாத்திராகமம் 16:11-36). இயேசு “உலகத்தின் ஒளி” (யோவான் 8:12), பழைய ஏற்பாட்டில் தேவன் தம் மக்களுக்கு வாக்குறுதியளித்த அதே ஒளி (ஏசாயா 30:26, 60:19-22), அதன் உச்சத்தை புதிய எருசலேமில் காணலாம், அங்கெ ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து அதன் வெளிச்சமாக இருக்கும் போது தெளிவாகும் (வெளிப்படுத்துதல் 21:23). "நான்" அறிக்கைகளில் இரண்டு இயேசுவை "நல்ல மேய்ப்பன்" மற்றும் "ஆடுகளின் வாசல்" என்று குறிப்பிடுகின்றன. பழைய ஏற்பாட்டின் தேவன், இஸ்ரேலின் மேய்ப்பர் என்று இயேசுவைப் பற்றிய தெளிவான குறிப்புகள் இங்கே (சங்கீதம் 23:1; 80:1; எரேமியா 31:10; எசேக்கியேல் 34:23), ஆடுகளுக்குள் ஒரே வாசலாக, இரட்சிப்பின் ஒரே வழியாக இயேசு இருக்கிறார்.

யூதர்கள் உயிர்த்தெழுதலை நம்பினர், உண்மையில், அந்த கோட்பாட்டை பயன்படுத்தி இயேசுவை அவருக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய அறிக்கைகளை கூறி அவரை ஏமாற்ற முயன்றனர். ஆனால் லாசருவின் கல்லறையில் அவர் கூறியது “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 11:25) என்னும் கூற்று அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அவர் உயிர்த்தெழுதலுக்கான காரணம் என்றும், ஜீவன் மற்றும் மரணம் மீதான அதிகாரத்தை வைத்திருப்பவர் என்றும் அவர் கூறிக்கொண்டிருந்தார். தேவனைத் தவிர வேறு எவருக்கும் இதுபோன்ற ஒன்றைக் கோர முடியாது செய்யவும் இயலாது. இதேபோல், "நானே வழியும், சத்தியமும் மற்றும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று அவர் கூறுவது (யோவான் 14:6) அவரை பழைய ஏற்பாட்டுடன் தொடர்புபடுத்தியது. ஏசாயா 35:8-ல் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட “பரிசுத்த பாதை” அவருடையது; சகரியாவின் சத்திய நகரத்தை அவர் ஸ்தாபித்தார் 8:3 "சத்தியம்" தானே எருசலேமில் இருந்தபோது, நற்செய்தியின் சத்தியங்கள் அவரும் அவருடைய அப்போஸ்தலர்களும் அங்கு பிரசங்கித்தார்கள்; "ஜீவன்" என்று, அவர் தனது தெய்வத்துவத்தை, ஜீவனின் படைப்பாளராக, தேவனின் அவதாரம் என்பதில் விளங்கிற்று (யோவான் 1:1-3). இறுதியாக, “மெய்யான திராட்சைச்செடி” (யோவான் 15:1, 5) பல பழைய ஏற்பாட்டுப் பத்திகளில் கர்த்தருடைய திராட்சைத் தோட்டம் என்று அழைக்கப்படும் இஸ்ரவேல் தேசத்தோடு இயேசு தன்னை அடையாளப்படுத்துகிறார். இஸ்ரவேலின் திராட்சைத் தோட்டத்தின் உண்மையான திராட்சைத் தோட்டமாக, அவர் தன்னை "உண்மையான இஸ்ரவேலின்" தேவன் என்று சித்தரிக்கிறார் - விசுவாசத்தோடு அவரிடம் வருவோர் அனைவருமே மெய்யான இஸ்ரவேலர்கள், ஏனென்றால் “… இஸ்ரவேலிலிருந்து வந்தவர்கள் அனைவரும் இஸ்ரவேலர்கள் அல்ல” (ரோமர் 9:6).

நடைமுறை பயன்பாடு: சுவிசேஷத்திற்கு மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொண்டுவருவதற்கான அதன் நோக்கத்தை யோவானின் நற்செய்தி தொடர்ந்து நிறைவேற்றுகிறது (யோவான் 3:16 என்பது பலரால் சரியாகப் புரிந்து கொள்ளப்படாவிட்டாலும் கூட, நன்கு அறியப்பட்ட வசனம்) மற்றும் இந்த வசனம் பெரும்பாலும் சுவிசேஷ வேதாகமப் படிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இயேசுவிற்கும் நிக்கொதேமுவோடும் மற்றும் கிணற்றின் அருகே சமாரிய ஸ்திரீக்கும் இடையில் பதிவுசெய்யப்பட்ட சந்திப்புகளில் (அத்தியாயங்கள் 3-4), இயேசுவின் தனிப்பட்ட சுவிசேஷத்தின் மாதிரியிலிருந்து நாம் அதிகம் கற்றுக்கொள்ளலாம். மரிப்பதற்கு முன்னர் அவருடைய சீஷர்களிடம் அவர் அளித்த ஆறுதலான வார்த்தைகள் (14:1-6,16; 16:33) கிறிஸ்துவில் நம்முடைய அன்புக்குரியவர்களை மரணம் நேரிடும் மற்றும் வருத்தப்படுத்தும்போது உள்ள காலங்களில் இன்னும் மிகுந்த ஆறுதலளிக்கிறது, அதேபோல் 17-ஆம் அதிகாரத்தில் விசுவாசிகளுக்காக அவர் செய்த “உயர் ஆசாரிய ஜெபமும்” அவரது அக்கறை மற்றும் இரக்கத்திற்கு வலுச்சேர்க்கிறது. கிறிஸ்துவின் தெய்வத்துவத்தைப் பற்றிய யோவானின் போதனைகள் (1:1-3,14; 5:22-23; 8:58; 14:8-9; 20:28, முதலியன) இயேசுவை முழு தேவனை விட குறைவாக இருப்பதைக் காணும் வழிபாட்டு முறைகளாகிய சிலரின் தவறான போதனைகளை எதிர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Englishமுகப்பு பக்கம்

யோவான் எழுதின சுவிசேஷம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries