settings icon
share icon
கேள்வி

தேவனுடைய சித்தம் என்றால் என்ன?

பதில்


மனித சித்தம் என்பது மிகவும் நேரடியானது: ஏதாவது நடக்க வேண்டும் என்று நாம் விரும்பும்போது, அது நடக்க நாம் "சித்தம்" கொள்வோம்; நாம் ஏதாவது செய்யும்போது, அந்த விஷயத்தில் நாம் நம்முடைய "சித்தத்தை" காட்டியுள்ளோம். தேவனுடைய சித்தம் இன்னும் கொஞ்சம் சிக்கலானது. உண்மையில், இறையியலாளர்கள் தேவனுடைய சித்தத்தின் மூன்று வெவ்வேறு அம்சங்களை வேதாகமத்தில் காண்கின்றனர்: அவருடைய ராஜ்யபார (ஆணையிடப்பட்டது) சித்தம், அவரது வெளிப்படுத்தப்பட்ட (ஒழுக்கநெறி சார்ந்தது) சித்தம் மற்றும் அவரது மனநிலை சித்தம்.

தேவனுடைய ராஜ்யபாரம் அல்லது ஆணையிடப்பட்ட சித்தம் என்பது அவரது "மறைக்கப்பட்ட" சித்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அவருடைய "சர்வ ஆளுமையாகும்" ஆகும், இது தேவனை பிரபஞ்சத்தின் ராஜ்யபாரம் கொண்ட ஆட்சியாளராகக் காட்டுகிறது. இது தேவனுடைய கட்டளைகளை உள்ளடக்கியிருப்பதால் அது "ஆணையிடப்பட்டது" ஆகும். இது "மறைக்கப்பட்டுள்ளது", ஏனென்றால் தேவனுடைய சித்தத்தின் இந்த அம்சத்தை நாம் வழக்கமாக அறிந்திருக்க மாட்டோம். தேவனுடைய ராஜ்யபாரத்துக்கு வெளியே எதுவும் நடக்காது. உதாரணமாக, யோசேப்பு எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பார்வோனின் சிறையில் வாடினார், ராஜாவின் கனவுகளை விளக்கி, இறுதியில் அவரது மக்களை பஞ்சத்திலிருந்து காப்பாற்றி அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய முன்னமே தீர்மானிக்கப்பட்ட சித்தமாகும் (ஆதியாகமம் 37-50). முதலில், யோசேப்பும் அவருடைய சகோதரர்களும் இந்த விஷயங்களில் தேவனுடைய சித்தத்தை முற்றிலும் அறியாதவர்களாக இருந்தனர், ஆனால், ஒவ்வொரு அடியிலும், தேவனுடைய திட்டம் தெளிவாக இருந்தது. எபேசியர் 1:12 தேவனை "தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே" என்று விவரிக்கும்போது, அது தேவனுடைய ராஜ்யபாரம் அல்லது ஆணையிடப்பட்ட சித்தத்தைப் பற்றி பேசுகிறது. ஏசாயா 46:10 இல் தேவன் தனது ராஜ்யபாரத்தின் உண்மையை வெளிப்படுத்துகிறார்: "என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்." தேவன் ராஜ்யபாரம் கொண்டவர் என்பதால், அவருடைய சித்தம் ஒருபோதும் ஏமாற்றமடைய முடியாது.

தேவனுடைய ராஜ்யபாரம் அல்லது ஆணையிடப்பட்ட சித்தத்தை அவரது திறத்தன்மையுள்ள சித்தம் மற்றும் அவரது அனுமதிக்கப்பட்ட சித்தமாக பிரிக்கலாம். நாம் இதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் தேவன் நேரடியாக எல்லாவற்றையும் நடக்க "காரணமாக" செய்வதில்லை. அவருடைய சில ஆணைகள் செயல்திறன் மிக்கவை (அதாவது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற அவை நேரடியாக பங்களிப்பு செய்கின்றன); அவருடைய கட்டளைகளில் மற்றவை அனுமதிக்கப்படுகின்றன (அதாவது தேவனுடைய சித்தத்தை மறைமுகமாக நிறைவேற்ற அனுமதிக்கின்றன). தேவன் ராஜ்யபாரம் கொண்டவர் என்பதால், அவர் அனைத்து நிகழ்வுகளையும் சம்பவங்களையும் குறைந்தபட்சம் "அனுமதிக்க" வேண்டும். தேவனுடைய ராஜ்யபார சித்தத்திற்குள், அவர் மகிழ்ச்சி கொள்ளாத பல விஷயங்களை அனுமதிக்க அவர் தேர்வு செய்கிறார். மீண்டும் யோசேப்பு மற்றும் அவரது சகோதரர்களின் உதாரணத்தை நாம் இங்கே மேற்கோள் காட்டலாம், தேவன் யோசேப்பின் நாடு கடத்தல் மற்றும் அடிமைத்தனத்தை அனுமதிக்க, தமது முன்னமே ஆணையிடப்பட்ட சித்தத்தின் மூலம் தேர்வு செய்தார். தேவனுடைய அனுமதி யோசேப்பின் சகோதரர்களின் பாவங்களை அதிக நன்மையைக் கொண்டுவர அனுமதிக்கும்படியாய் முடிந்தது (ஆதியாகமம் 50:20 ஐப் பார்க்கவும்). யோசேப்பு அநீதியான முறையில் தவறாக நடத்தப்பட்ட ஒவ்வொரு முறையும், வேண்டுமானால் தேவனுக்கு தலையிடும் வல்லமை இருந்தது, ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் அந்த தீங்கை யோசேப்பின் மேல் வரும்படி "அனுமதித்தார்" மற்றும் அந்த வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில், அவர் அதை ராஜ்யபாரமாக்க "சித்தங்கொண்டார்".

தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட அல்லது தீர்க்கமான சித்தம் என்பது நம்மிடமிருந்து மறைக்கப்படவில்லை. தேவனுடைய சித்தத்தின் இந்த அம்சம் தேவன் நமக்கு வேதாகமத்தில் வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்ததை உள்ளடக்கியது ஆகும் அதாவது வேதாகமத்தில் அவருடைய கட்டளைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” (மீகா 6:8). தேவனுடைய கட்டளையிடும் சித்தம் தான் நாம் செய்ய வேண்டும் (அல்லது செய்யக்கூடாது) என்று தேவன் விரும்புகிறார். உதாரணமாக, நாம் அன்பில் சத்தியத்தைப் பேசுவது தேவனுடைய சித்தம் என்பதை நாம் அறிவோம் (எபேசியர் 4:15), மனந்திரும்பி, தேவனிடம் திரும்புங்கள் (அப். 3:19). நாம் விபச்சாரம் செய்யக்கூடாது (1 கொரிந்தியர் 6:18) அல்லது மதுபானவெறி கொள்ளக்கூடாது என்பது தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தம் (எபேசியர் 5:18). தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தம் தொடர்ந்து "பேதையை ஞானியாக்குகிறது" (சங்கீதம் 19:7).

தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட அல்லது தீர்க்கமான சித்தத்திற்கு கீழ்ப்படிய நாம் கடமைப்பட்டுள்ளோம்; எனினும், நமக்கு கீழ்ப்படியாமல் இருக்கும் திறன் உள்ளது. ஆதாம் மற்றும் ஏவாளின் விஷயத்தில் தேவன் வெளிப்படுத்திய சித்தம் பலுகிப் பெருகுவதும், தோட்டத்தை பராமரிப்பதும், பூமியை ஆண்டுகொள்வதும், ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை புசியாமல் இருப்பதுமாகும் (ஆதியாகமம் 1-2). துரதிருஷ்டவசமாக, தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்திற்கு எதிராக அவர்கள் கலகம் செய்தனர் (ஆதியாகமம் 3). அவர்கள் அனுபவித்த விளைவுகள் அவர்கள் தங்கள் பாவத்தை மன்னிக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன. நம்முடைய பாவம் தேவனுடைய ராஜ்யபாரத்தை நிறைவேற்றுவதாக நாம் கூற முடியாது, அது நம்மை குற்றத்திலிருந்து விடுவிப்பது போலவும் அல்ல. இயேசு பாடுபட்டு மரிப்பது தேவனுடைய சித்தம், ஆனால் அவருடைய மரணத்திற்கு காரணமானவர்கள் இன்னும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் (மார்க் 14:21).

தேவனுடைய மனநிலை அவருடைய "மனப்பான்மையை" கையாள்கிறது; அவரது மனநிலை சித்தமே அவரை மகிழ்விக்கும் அல்லது மகிழ்வியாமல் இருக்கிறது. உதாரணமாக, "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்" (1 தீமோத்தேயு 2:4). இது இழந்துபோனவர்கள் குறித்த தேவனுடைய மனநிலையின் வெளிப்பாடாகும் அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (அப்படி இல்லையென்றால், அவர் இரட்சகரை அனுப்பியிருக்க மாட்டார்). தேவனுடைய இருதயம் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்பினாலும், அனைவரும் இரட்சிக்கப்படுவதில்லை. எனவே, தேவனுடைய விருப்பத்திற்கும் அவருடைய ராஜ்யபாரத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது.

சுருக்கமாக கூறவேண்டுமானால், தேவனுடைய விருப்பம் மூன்று அம்சங்களை உள்ளடக்கியது: 1) தேவனுடைய ராஜ்யபாரம் அவரது மாற்ற முடியாத கட்டளைகளில் வெளிப்படுகிறது. வெளிச்சம் உண்டாகக்கடவது என்று அவர் கட்டளையிட்டார், மேலும் வெளிச்சம் உண்டாயிருந்தது (ஆதியாகமம் 1:3) அதாவது அவருடைய வல்லமையான ஆணைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவர் சாத்தான் யோபுவைத் துன்புறுத்த அனுமதித்தார் (யோபு 1:12) - அவருடைய அனுமதிக்கப்பட்ட ஆணைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 2) தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தம் அவருடைய கட்டளைகளில் அடங்கியுள்ளது, நாம் பரிசுத்தமாக நடக்க வேண்டும் என்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளைகளை உடைக்கும் அல்லது மீறும் திறன் நமக்கு உள்ளது (ஆனால் அப்படி செய்வது சரியானது அல்ல). 3) தேவனுடைய மனநிலை அவருடைய அணுகுமுறை. சில சமயங்களில், பொல்லாதவர்களின் மரணம் போன்ற எந்த மகிழ்ச்சியையும் அளிக்காத ஒன்றை தேவன் ஆணையிடுகிறார் (எசேக்கியேல் 33:11 ஐப் பார்க்கவும்).

English



முகப்பு பக்கம்

தேவனுடைய சித்தம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries