settings icon
share icon
கேள்வி

கடவுள் நம்மை பாவம் செய்ய தூண்டுகிறாரா?

பதில்


ஆதியாகமம் 22:1 இல், "சோதித்தார்" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வார்த்தை நாக்கா என்ற வார்த்தையாகும், மேலும் இதன் பொருள் "பரீட்சை, முயற்சி, நிரூபணம், சோதனை, மதிப்பீடு, சான்று அல்லது பரீட்சைக்கு அல்லது சோதனைக்கு உட்படுத்துதல்" என்பதாகும். இது பல சாத்தியமான ஒத்த சொற்களைக் கொண்டிருப்பதால், நாம் கூறப்பட்ட சந்தர்ப்ப சூழலைப் பார்த்து மற்ற பத்திகளுடன் ஒப்பிட வேண்டும். இந்த நிகழ்வின் விவரத்தை நாம் படிக்கும்போது, ஈசாக்கின் பலியை நிறைவு செய்ய ஆபிராமின் தேவன் விரும்பவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இருப்பினும், ஆபிராமுக்கு அது தெரியாது மற்றும் தேவனுடைய கட்டளைகளை நிறைவேற்ற தயாராகவே இருந்தான், மேலும் தேவனுக்கு தேவைப்பட்டால், அவரால் ஈசாக்கை மரித்தோரிலிருந்து எழுப்ப முடியும் என்று நம்பினான் (எபிரெயர் 11:17-19). எபிரேய மொழியில் உள்ள இந்தப் பகுதி, "ஆபிராம் சோதிக்கப்பட்டான்" என்று சொல்வதற்குப் பதிலாக "ஆபிராம் பரீட்சைப் பண்ணப்பட்டார்' 'என்று சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, முடிவு என்னவென்றால், ஆதியாகமம் 22:1 இல் "சோதனை" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வார்த்தை எதையாவது சோதித்தல் அல்லது மதிப்பீடு செய்வது ஆகியவற்றுடன் தொடர்புடையது.

யாக்கோபு 1:13 ஒரு வழிகாட்டும் கொள்கையை கொடுக்கிறது: "தேவனால்" சோதிக்கப்பட்டதாக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இந்த அறிக்கையை நாம் புரிந்துகொள்ள "இன்" என்ற வார்த்தை அவசியம், ஏனென்றால் அது எதோ ஒரு செயலின் தோற்றத்தை குறிக்கிறது. பாவத்திற்கான சோதனைகள் தேவனிடமிருந்து தோன்றுவதில்லை. யாக்கோபு இவ்வாறு நிறைவு செய்கிறார்: “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல”.

இந்த விவாதத்தில் மற்றொரு முக்கியமான வார்த்தை யாக்கோபு 1:2-3 இல் காணப்படுகிறது - “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்." இங்கு "சோதனைகள்" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை பிரச்சனை அல்லது ஒருவரின் வாழ்க்கையில் அமைதி, ஆறுதல், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் வடிவத்தை உடைக்கும் ஒன்றை குறிக்கிறது. இந்த வார்த்தையின் வினை வடிவம் என்பது அந்த நபரின் இயல்பு அல்லது அந்த விஷயத்தின் தரத்தை கண்டறியும் நோக்கத்துடன் "யாரையோ அல்லது எதையோ சோதனைக்கு உட்படுத்துவது" என்பதாகும். ஒருவரின் விசுவாசத்தின் வலிமையையும் தரத்தையும் நிரூபிக்கவும்-அதிகரிக்கவும் மற்றும் அதன் செல்லுபடியை நிரூபிக்கவும் தேவன் இத்தகைய சோதனைகளைக் கொண்டுவருகிறார் (வசனங்கள் 2-12). எனவே, யாக்கோபின் கூற்றுப்படி, நாம் சோதனைகளை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய நோக்கம் நம் விசுவாசத்தை நிரூபித்து நல்ல குணத்தை உருவாக்குவதாகும். அது ஒரு உயர்ந்த, நல்ல, உன்னத நோக்கமாகும்.

நம்மை தோல்வியடையச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சோதனைகள் உள்ளதா? ஆமாம், ஆனால் அவைகள் கடவுளிடமிருந்து வரவில்லை மாறாக அவைகள் சாத்தானிடமிருந்து (மத்தேயு 4:1), அவனுடைய தீய தூதர்களிடமிருந்து (எபேசியர் 6:12) அல்லது நம்மிடமிருந்து வருகின்றன (ரோமர் 13:14; கலாத்தியர் 5:13). தேவன் அவற்றை அனுபவிக்க அனுமதிக்கிறார், மேலும் அவை தேவனால் நம்முடைய நன்மைக்காக அனுமதிக்கப்படுகின்றன. தேவன் ஆபிராமிடம் ஈசாக்கை பலியாகக் கொடுக்கச் சொன்னார் – அந்த சோதனை ஆபிராமைப் பாவம் செய்ய வைப்பதற்காக அல்ல, மாறாக அவனுடைய விசுவாசத்தை சோதித்து நிரூபிக்கவே அப்படிச் செய்தார்.

English



முகப்பு பக்கம்

கடவுள் நம்மை பாவம் செய்ய தூண்டுகிறாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries