settings icon
share icon
கேள்வி

இன்றும் தேவன் நம்மோடு பேசுகிறாரா?

பதில்


வேதாகமம் தேவன் மனிதர்களிடம் கேட்கத்தக்க நிலையில் பேசுகிறதை அநேக இடங்களில் பதிவு செய்திருக்கிறது. (யாத்திராகமம் 3:14, யோசுவா 1:1, நியாயாதிபதிகள் 6:18, 1 சாமுவேல் 3:11, 2 சாமுவேல் 2:1, யோபு 40:1, ஏசாயா 7:3, எரேமியா 1:7, அப்போஸ்தலர் நடபடிகள் 8,26, 9:15 - இவை சிறிய மாதிரிகள்தான்). மனிதனுடன் தேவன் பேசமுடியாமல் போவதற்கான, வேதாகமத்தின்படியான காரணங்கள் இல்லை. நூற்றுக்கும் அதிகமான இடங்களில் தேவன் பேசுகிறதை வேதாகமம் பதிவு செய்துள்ளது. மனிதர்களின் வரலாற்றில் ஏறக்குறைய 4000 வருடங்களாக இவை நடக்கிறது. தேவன் கேட்கத்தக்கதாக எல்லா நேரத்திலும் பேச வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வேதாகமத்தில் தேவன் பேசியதாக பதிவு செய்யப்பட்ட இடங்களில், அது கேட்கத்தக்க சத்தமாக இருந்ததா, உள்மனதின் சத்தமாக இருந்ததா, அல்லது ஒரு ஒரு உள்ளுணர்வாக இருந்ததா என்பது தெளிவாக இல்லை.

தேவன் இன்றும் மனிதர்களோடு பேசுகிறார். முதலாவது தேவன் நம்மோடு அவருடைய வார்த்தையின் மூலமாக பேசுகிறார். (2 திமோத்தேயு 3:16,17) ஏசாயா 55:11 இப்படிக் கூறுகிறது “அந்தபடியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல் அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்”. வேதாகமம் என்பது தேவனுடைய வார்த்தை, நாம் இரட்சிக்கப்படுவதற்கும், கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கும் தேவையான அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது. 2 பேதுரு1:3 இப்படியாகக் கூறுகிறது, “தம்முடைய மகிமையினாலும் காருண்யத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது தந்தருளினதுமன்றி”.

தேவன் சம்பவங்கள் மூலமாகவும் நம்மோடு “பேசுகிறார்” – அதாவது நம்முடைய சூழ்நிலைகளை சரிசெய்து நடத்துவதன் மூலமாகவும் பேசுகிறார். தேவன் நம்முடைய மனசாட்சியின் மூலமாக சரியான மற்றும் தவறான காரியங்களை நிதானிக்க உதவுகிறார் (1 திமோத்தேயு 1:5, 1 பேதுரு 3:16). தேவன் நம்முடைய மனதை அவருடைய நினைவுகளுக்கு ஒத்ததாக மாற்றுகிற காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார் (ரோமர் 12:2). தேவன் சில காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் அனுமதித்து நம்மை மாற்றி ஆவிக்குரிய வளர்ச்சியில் நடத்துகிறார் (யாக்கோபு 1:2-5, எபிரேயர் 12:5-11). 1 பேதுரு 1:6-7 “இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்”.

தேவன் சில நேரங்களில் ஜனங்களோடு சத்தமாகப் பேசலாம். இது சந்தேகத்திற்குரியதுதான். ஆனால் அநேக மக்கள் இப்படி நடக்கிறது என்று கூறுகிறார்கள். வேதாகமத்தில் தேவன் சில நேரங்களில்தான் சத்தமாக பேசுகிறார். தேவன் பேசினார் என்று யாராவது சொல்லுகின்ற பட்சத்தில், அதை வேதத்தின் அடிப்படையிலானதா? என்று நிதானியுங்கள். இன்று தேவன் பேசுவாரானால், அவருடைய வார்த்தைக்கு ஒத்ததாகவும், வேதாகமத்தின் அடிப்படையிலும்தான் இருக்கும். (2 தீமோத்தேயு 3:14). தேவன் தனக்குதானே முரண்படமாட்டார்.

English



முகப்பு பக்கம்

இன்றும் தேவன் நம்மோடு பேசுகிறாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries