settings icon
share icon
கேள்வி

தேவன் ஏன் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார்?

பதில்


தேவனுடனான நமது உறவு மற்றவர்களுடனான நமது உறவைப் போன்றது, எல்லா உறவுகளுக்கும் விசுவாசம் தேவைப்படுகிறது. நாம் வேறு எந்த நபரையும் அவ்வளவு முழுமையாக அறிய முடியாது. அவர்கள் அனுபவிக்கும் அனைத்தையும் நாம் அனுபவிக்கவோ அல்லது அவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் என்ன என்பதை அறியவோ அல்லது அவர்களின் மனதில் நுழையவோ முடியாது. நீதிமொழிகள் 14:10 கூறுகிறது, "இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்." நம்முடைய இதயங்களை முழுமையாக அறிந்து கொள்ள இயலாது. எரேமியா 17:9 மனித இதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது என்று கூறுகிறது, "அதை அறியத்தக்கவன் யார்?" வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனித இருதயம் அதன் கொடுமையின் ஆழத்தை மறைக்க முயல்கிறது, அதன் சொந்தக்காரரைக் கூட ஏமாற்றுகிறது. பழிமாற்றம், தவறான நடத்தையை நியாயப்படுத்துதல், நமது பாவங்களைக் குறைத்து கூறல் போன்றவற்றின் மூலம் இதைச் செய்கிறோம்.

நாம் மற்றவர்களை முழுமையாக அறிய இயலாது என்பதால், ஓரளவிற்கு விசுவாசம் (நம்பிக்கை) அனைத்து உறவுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த மூலப்பொருள் ஆகும். உதாரணமாக, ஒரு மனைவி தனது கணவருடன் காரில் ஏறுகிறார், அவர் அடிக்கடி குளிர்கால சாலைகளில் வழக்கமாக செல்வதை விட அவர் வேகமாக ஓட்டுகிறார் என்றாலும், அவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவார் என்று அவள் நம்புகிறாள். எல்லா நேரங்களிலும் அவர்களின் நலனுக்காக அவர் செயல்படுவார் என்று அவள் நம்புகிறாள். நாம் அனைவரும் நம்மைப் பற்றிய தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், அந்த அறிவால் அவர்கள் நம்மை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்று நாம் அவர்களை நம்புகிறோம். சாலையின் விதிகளைப் பின்பற்றுவதை நம்பி, நம்மைச் சுற்றி ஓட்டுபவர்களை நம்பி நாம் சாலையில் செல்கிறோம். எனவே, அந்நியர்களுடன் இருந்தாலும் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் தோழர்களுடன் இருந்தாலும், நாம் மற்றவர்களை முழுமையாக அறிய முடியாததால், நம்பிக்கையானது எப்போதும் நம் உறவுகளின் ஒரு அங்கமாக இருக்கிறது.

நம் சக வரையறுக்கப்பட்ட மனிதர்களை நாம் முழுமையாக அறிய முடியாவிட்டால், எல்லையற்ற தேவனை நாம் முழுமையாக அறிந்து கொள்வோம் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர் தம்மை முழுமையாக வெளிப்படுத்த விரும்பினாலும், நாம் அவரை முழுமையாக அறிவது என்பது ஒருபோதும் சாத்தியமில்லை. இது கடலை (அளவில் எல்லையற்றதாகத் தோன்றுகிறது) ஒரு கால் பகுதி அளவிடும் ஜாடியில் (வரையறுக்கப்பட்டது) ஊற்ற முயற்சிப்பது போலவாகும்...அது சாத்தியமற்றது! ஆயினும்கூட, மற்றவர்களுடன் அவர்களைப் பற்றியும் அவர்களின் குணத்தைப் பற்றியும் நாம் அறிந்திருப்பதால் நாம் அர்த்தமுள்ள உறவுகளை வைத்திருக்க முடியும் என்றால், அதுபோலவே தேவன் அவர் யாவற்றையும் சிருஷ்டித்தவர் என்னும் வகையில் (ரோமர் 1:18-21) தன்னைப் பற்றி போதுமான அளவு வெளிப்படுத்தியுள்ளார். எழுதப்பட்ட வார்த்தை, வேதாகமம் (2 தீமோத்தேயு 3:16-17; 2 பேதுரு 1:16-21), மற்றும் அவரது குமாரன் மூலம் (யோவான் 14:9), நாம் அவருடன் ஒரு அர்த்தமுள்ள உறவில் பிரவேசிக்க முடியும். ஆனால் பாவத்திற்காக அதன் விலைக்கிரயத்தை செலுத்தும்படிக்கு கிறிஸ்து சிலுவையில் மரித்த மற்றும் கிரியை செய்கிற அவரை விசுவாசிப்பதன் மூலமாக ஒருவரின் பாவத்தின் தடை நீக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இது அவசியம், ஏனென்றால் ஒளி மற்றும் இருள் இரண்டும் ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை, எனவே ஒரு பரிசுத்தமான தேவன் பாவமுள்ள மனிதனுடன் கூட்டுறவு வைத்திருப்பது என்பது சாத்தியமில்லை, அந்த மனிதனுடைய பாவத்திற்காண விலைக்கிரயம் செலுத்தப்பட்டு பாவத்தண்டனை அகற்றப்படாவிட்டால் தேவனோடு உறவு என்பது சாத்தியமில்லை. தேவனுடைய பாவமற்ற குமாரனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார், நம் தண்டனையை தம்மேல் எடுத்து கொண்டு நமக்காக சிலுவையில் மரித்தார், அதனால் அவரை நம்புகிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக மாறி, அவருடைய சமூகத்தில் நித்திய காலமாக வாழ முடியும் (யோவான் 1:12; 2 கொரிந்தியர் 5:21; 2 பேதுரு 3:18; ரோமர் 3:10-26).

கடந்த காலங்களில் தேவன் தம்மை மேலும் "வெளிப்படையாக" மக்களுக்கு வெளிப்படுத்திய காலங்கள் இருந்தன. இதற்கு ஒரு உதாரணம் எகிப்திலிருந்து வெளியேறும் நேரத்தில், இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கத் தயாராக இருக்கும் வரை தேவன் எகிப்தியர்கள் மீது அதிசய வாதைகளை அனுப்புவதன் மூலம் இஸ்ரவேலர்கள் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தினார். தேவன் செங்கடலைத் பிளந்து, சுமார் இரண்டு மில்லியன் இஸ்ரவேலர்களை வெட்டாந்தரையிலே கடக்க அனுமதித்தார். பின்னர், எகிப்திய இராணுவம் அதே வழியாக அவர்களைப் பின்தொடர முற்பட்டபோது, அவர் அவர்கள் மீது தண்ணீரை வரச்செய்து யாவரையும் கடலிலே கவிழ்த்துப் போட்டார் (யாத்திராகமம் 14:22-29). பின்னர், வனாந்தரத்தில், தேவன் அவர்களுக்கு அற்புதமாக மன்னாவை வானத்திலிருந்து பொழிந்தார், மேலும் பகலில் மேகஸ்தம்பத்தினாலும், இரவில் அக்கினி ஸ்தம்பத்தினாலும் அவர்களை அவர் வழிநடத்தினார், இப்படியாக அவர்களுடன் அவர் இருப்பதைக் காணக்கூடிய குறிப்புகள் அநேகம் உள்ளன (யாத்திராகமம் 15:14-15) .

ஆயினும்கூட, அவருடைய அன்பு, வழிகாட்டுதல் மற்றும் வல்லமையின் தொடர்ச்சியான வெளிப்பாடுகள் இருந்தபோதிலும், இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய விரும்பியபோது அவரை நம்ப மறுத்தனர். கர்த்தரை நம்புவதற்கு பதிலாக, பெரிய சுவர்களை கொண்ட அரணிப்பான நகரங்களின் கதைகள் மற்றும் அந்த நிலத்தின் சில மக்களின் மாபெரும் உயரம் ஆகியவற்றைக் கொண்டு பயமுறுத்திய பத்து மனிதர்களின் வார்த்தையை நம்புவதற்கு துணிவு கொண்டு அவற்றையே தேர்வு செய்தனர் (எண்கள் 13:26-33). இந்த நிகழ்வுகள் தேவனுடைய மேலும் அதிகமான வெளிப்பாடு நமக்கு அவரை நம்பும் திறனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை காட்டுகிறது. இன்று வாழும் மக்களோடு தேவன் இதேபோன்ற முறையில் தொடர்பு கொண்டால், நாமும் இஸ்ரவேலர்களைப் போலவே பதிலளிப்போம், ஏனென்றால் நம்முடைய பாவமுள்ள இதயங்கள் அவர்களுடையது போலவே இருக்கிறது.

மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்து எருசலேமில் இருந்து பூமியை 1,000 வருடங்கள் ஆளுவதற்கு திரும்ப வரப்போகிற எதிர்காலத்தை குறித்தும் வேதாகமம் பேசுகிறது (வெளிப்படுத்துதல் 20:1-10). கிறிஸ்துவின் ஆட்சியின் போது பூமியில் அதிகமான மக்கள் பிறப்பார்கள். கிறிஸ்து முழுமையான நீதியுடனும் நியாயத்துடனும் ஆட்சி செய்வார், ஆயினும், அவருடைய பரிபூரண ஆட்சி இருந்தபோதிலும், கிறிஸ்துவின் ஆட்சியை எதிர்த்து கலகம் செய்ய சாத்தான் ஒரு சேனையை திரட்டுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று வேதாகமம் கூறுகிறது. ஆயிரமாண்டு எதிர்கால நிகழ்வும், மாபெரும் புறப்பாட்டின் கடந்தகால நிகழ்வும் நமக்கு காண்பிக்கிறது என்னவெனில், தேவன் தன்னை மனிதனுக்கு போதுமான அளவு வெளிப்படுத்தாததால் என்பதல்ல; மாறாக, தேவனுடைய அன்பான ஆட்சிக்கு எதிராக மனிதனின் பாவமுள்ள இதயம் கலகம் செய்வது போன்றவற்றில் பிரச்சனை உள்ளது. நாம் பாவமுள்ள சுயராஜ்யத்தை விரும்புகிறோம்.

நாம் அவரை நம்புவதற்கு தேவன் அவருடைய தன்மையை போதுமான அளவு வெளிப்படுத்தியுள்ளார். அவர் வரலாற்றின் நிகழ்வுகள், இயற்கையின் செயல்பாடுகள், மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஆகியவற்றின் மூலம் அவர் எல்லாம் வல்லவர், அனைத்தையும் அறிந்தவர், ஞானியானவர், அன்பானவர், பரிசுத்தத், மாறாதவர் மற்றும் நித்தியமானவர் என்பதை அவர் காண்பித்துள்ளார். அந்த வெளிப்பாட்டில், அவர் நம்புவதற்கு தகுதியானவர் என்பதையும் அவர் காண்பித்துள்ளார். ஆனால், வனாந்தரத்தில் உள்ள இஸ்ரவேலர்களைப் போலவே, நாம் அவரை நம்புவோமா இல்லையா என்பது தேர்வு. பெரும்பாலும், நாம் தேவனைப் பற்றி நமக்குத் தெரிந்ததை விட, அவர் தன்னைப் பற்றி வெளிப்படுத்தியதை விடவும், அவருடைய நிலையற்ற வார்த்தையான வேதாகமத்தைப் கவனமாகப் படிப்பதன் மூலம் அவரைப் பற்றி இன்னுமதிகமாய் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஏற்கனவே அவ்வாறு செய்யவில்லை என்றால், வேதாகமத்தை கவனமாகப் படிக்கத் தொடங்குங்கள், தேவனை அவருடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காக பூமிக்கு வந்த அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் நீங்கள் தேவனைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். தேவனுடனான ஐக்கியம் இப்பொழுதும் மற்றும் ஒரு நாள் பரலோகத்தில் ஒரு முழுமையான வழியில் உண்டாயிருக்கும்.

Englishமுகப்பு பக்கம்

தேவன் ஏன் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries