settings icon
share icon
கேள்வி

தேவன் புதிய ஏற்பாட்டில் இருப்தைக்காட்டிலும் பழைய ஏற்பாட்டில் ஏன் வித்தியாசமானவராக இருக்கிறார்?

பதில்


தேவனுடைய சுபாவதன்மையைக் குறித்து பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்த தவறான புரிதல் கொண்டிருக்கிறபடியினால்தான் இப்படிப்பட்ட கேள்வி எழுகிறது. இதை நாம் வேறு விதமாக சொல்வோமானல் ”பழைய ஏற்பாட்டில் தேவன் கோபத்தின் தேவன், புதிய ஏற்பாட்டின் தேவன் அன்பின் தேவன்”. தேவன் தம்மை படிப்படியாக வரலாற்றின் சம்பவங்கள் மூலமாகவும், வரலாற்றில் மனிதர்களுடன் உண்டான உறவின் அடிப்படையிலும் வெளிப்படுத்தியதால் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் தேவனை வேறுவிதமாக தவறாக புரிந்து கொள்ளுகிற வாய்ப்பு உள்ளது. ஆகவே ஒருவர் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை படிக்கும்போது, தேவன் இரண்டிலும் வித்யாசமானவர் இல்லையென்றும், அவருடைய கோபமும் அன்பும் இரண்டு ஏற்பாடுகளிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, பழைய ஏற்பாடு முழுவதிலும் தேவன் ”கர்த்தர் இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ள தேவன்” (யாத்திராகமம் 34:6, எண்ணாகமம் 14:18, உபாகம் 4:31 நெகேமியா 9:17, சங்கீதம் 86:5, 15, 108:4, 145:8, யோவே 2:13) புதிய ஏற்பாட்டில் தேவனுடைய அன்பும் இரக்கமும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). பழைய ஏற்பாடு முழுவதிலும் இஸ்ரவேல் ஜனங்களை தேவன் ஒரு அன்பான தகப்பன் தன் பிள்ளையை நடத்துவதுபோல நடத்துவதைப் பார்க்க முடியும். அவர்கள் தங்கள் இஷ்டபடி பாவம் செய்து விக்கிரகங்களை வணங்கும்போதுதான் தேவன் அவர்களை தண்டித்தார். ஆனால் அவர்கள் ஒவ்வொருமுறையும் விக்கிரகங்களை விட்டு மனந்திரும்பும்போது அவர்களை விடுவித்தார். இதேபோன்றுதான் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களையும் தேவன் நடத்துகின்றார். உதாரணமாக எபிரேயர் 12:6 இப்படியாகச் சொல்கிறது, ”கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்”.

இதைப்போலவே பழைய ஏற்பாடு முழுவதிலும் நாம் தேவனுடைய நியாத்தீர்ப்பையும் கோபாக்கினையும் பாவத்தின் மீது ஊற்றப்பட்டதையும் பார்க்கிறோம். அதைப்போலவே புதிய ஏற்பாட்டிலும் தேவனுடைய கோபம் வெளிப்படுகிறது. ‘‘சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும், அநியாயத்துக்கும் விரோமாய் தேவக்கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது”. (ரோமர் 1:18). இதிலிருந்து பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் தேவன் வித்தியாசமானவரல்ல என்று தெளிவாகத்தெரிகிறது. தேவனுடைய சுபாவமே அவர் மாறாதவர். நம் வேதவாக்கியங்களில் தேவனுடைய பண்புகளில் ஒரு சுபாவம் மற்றவற்றைக்காட்டிலும் அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது, ஆனால் தேவன், அவர் மாறாதவர்.

நாம் வேதத்தை படித்து தியானிக்கும்போது, தேவன் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் மாறாதவராயிருக்கிறார் என்பது தெளிவாகிறது. வேதாகம் 66 புத்தகங்களின் தொகுப்பாக, இரண்டு அல்லது மூன்று கண்டங்களில் மூன்று வித்தியாசமான மொழிகளில், சுமார் 1500 வருடங்களாக 40 நபர்களால் எழுதப்பட்டிருந்தபோதிலும், இது தனித்துவம் வாய்ந்ததாகவும் தன்னில்தான் முரண்பாடு எதுவும் இல்லாமல் இருக்கிறது. இதில் எப்படி தேவன் பாவத்திலிருக்கும் மனிதர்களை அன்பும், இரக்கமும், நியாயமுமுள்ள தேவன் நடத்துகிறார் என்று பார்க்கிறோம். மெய்யாகவே வேதாகமம் மனுக்குலத்திற்கு தேவனுடைய அன்பின் கடிதமாக இருக்கிறது. தேவன் தன்னுடைய சிருஷ்டிப்பான மனுக்குலத்தின் மீது வைத்திருக்கிற அன்பு எல்லா தேவவாக்கியங்களிலும் தெளிவாக விளங்குகிறது. வேதாகமம் முழுவதிலும் தேவன் மனிதர்களை தன்னுடனான விசேஷித்த உறவிற்கு அவர்களுக்கு தகுதியில்லை என்கிறபோதிலும் அவருடைய இரக்கத்தினாலும் அன்பினாலும் அழைத்திருக்கிறார். இன்னும் நாம் அவரை பரிசுத்தரும், நீதிபரருமான தேவனாகவும், அவருடைய வார்த்தையைக் கீழ்படியாதவர்கள் யாவரையும் நியாயந்தீர்கிறவராயும் மட்டுமே பார்க்கிறோம் (ரோமர் 1).

தேவனுடைய நீதி மற்றும் பரிசுத்தத்தினால் எல்லா பாவங்களும் – அதாவது இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்களும் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். ஆனாலும் தேவன் அவருடைய அளவில்லாத அன்பினிமித்தம் பாவத்திற்கு ஒரு பரிகாரமும், ஒப்புரவாக்குதலுக்கும் பாவத்திலிருக்கிற மனிதன் கோபாக்கினையிலிருந்து தப்பிக்க ஒரு வழியையும் ஏற்படுத்தியிருக்கிறார். இதை 1 யோவன் 4:10 ”நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது” என்று பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டிலும் பாவத்திற்கு ஒரு பலி செலுத்தும் முறைமையைக் கொடுத்து பாவத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு வழியை உண்டுபண்ணினார். எனினும் இந்த முறைமை ஒரு தற்காலிகமானதாகும், இயேசு கிறிஸ்து வந்து சிலுவையில் மரித்து மீட்புக்கான முழுமையான வழியை உண்டுபண்ணுவதற்காக எதிர்பார்த்திருந்தது. பழைய ஏற்பாட்டில் வாக்குப்பண்ணபட்ட ஒரு இரட்சகர் புதிய ஏற்பாட்டில் முழுமையாக வெளிப்ப்டுத்தப்பட்டார். பழைய ஏற்பாட்டில் தரிசனமாக இருந்தது, புதிய ஏற்பாட்டில் தேவனுடைய அன்பின் மொத்த வெளிப்பாடு தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் எல்லா மகிமையும் வெளிப்படுத்தப்பட்டது. பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் (2திமோ.3:15) ‘‘இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்கதாக” கொடுக்கப் பட்டிருக்கிறது. இவைகளை நாம் கூர்ந்து படிக்கும்போது நமக்கு ஒரு காரியம் தெளிவாகிறது. ‘‘அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” (யாக்கோபு 1:17).

English



முகப்பு பக்கம்

தேவன் புதிய ஏற்பாட்டில் இருப்தைக்காட்டிலும் பழைய ஏற்பாட்டில் ஏன் வித்தியாசமானவராக இருக்கிறார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries