கிறிஸ்தவ உலக கண்ணோட்டம் என்றால் என்ன?


கேள்வி: கிறிஸ்தவ உலக கண்ணோட்டம் என்றால் என்ன?

பதில்:
உலக கண்ணோட்டம் என்றால், ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து உலகத்தை குறித்த விவான எண்ணம் கொள்வதாகும். கிறிஸ்தவ உலக கண்ணோட்டம் என்றால், கிஸ்தவ நிலையில் இருந்து உலகத்தை குறித்த விவான எண்ணம் கொள்வதாகும். ஒரு நபரின் உலக கண்ணோட்டம் என்பது அவனின் "பெரிய காட்சியாய்" இருக்கிறது, உலகத்தை பற்றி அவனின் எல்லா நம்பிக்கைகளின் அனைத்து கருத்தாய் இருக்கிறது. இதன் மூலமாய் அவன் உண்மையை புரிந்து கொள்ளுகிறான். ஒருவனின் உலக கண்ணோட்டம் மிகவும் முக்கியமானது, மற்றும் அதன் அடிப்படையில் அவன் நாள்தோறும் முடிவுகளை எடுக்கிறான்.

ஒரு மேஜையின் மேல் இருக்கும் ஆப்பிலை அனைவரும் பார்கின்றனர். ஒரு பயிரியலாளர் அதை பார்த்து வகைபடுத்துகிறார். ஒரு ஓவியன் அதை பார்த்து படம் வரைகிறான். ஒரு பல சரக்கு வியாபாரி அதை விற்பனை பொருளாக பார்க்கிறார். ஒரு பிள்ளை அதை மத்திய உணவாக பார்த்து சாப்பிடுகிறது. பெரிதான அளவில் நாம் உலகத்தை எப்படி பார்க்கிறோமோ, அதன் அடிப்படையில் நாம் எந்த சூழ்நிலையையும் பார்போம். எல்லா உலக கண்ணோட்டமும், கிறிஸ்தவம் மற்றும் கிறிஸ்தவம் அல்லாத, இந்த மூன்று கேள்விகளை குறிப்பிடுகிறது: (1)நாம் எங்கிருந்து வந்தோம்?(நாம் ஏன் இங்கு இருக்கிறோம்). (2) இந்த உலகத்தில் என்ன தவரு? (3) அதை நாம் எப்படி சரி செய்ய முடியும்?

"நேச்சுரலிசம்" என்னும் ஒரு கருத்து இன்று பொதுவாக உள்ள உலக கண்ணோட்டம் ஆகும். இது மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது: (1)நாம் இயற்க்கையி்ன் தொடர்பில்லாத செயல்களின் விளைவுகளாய் இருக்கிறோம். நமக்கு எந்த உண்மையான நோக்கமும் இல்லை. (2) நாம் இயற்கையை மதிக்க வேண்டிய அளவிற்கு மதிப்பதில்லை. (3) வாழ்க்கை சூழல் மற்றும் பாதுகாப்பு மூலமாக இந்த உலக்தை காப்பாற்றமுடியும். இயற்கையின் உலக கண்ணோட்டம் அநேக தத்துவங்களை உருவாக்குகிறது; அது என்னவென்றால், தார்மீக ஒப்புமை (மாரல் ரிலேட்டிவிசம்), இருத்தல் கொள்கை (எக்சிஸ்டென்ஷியலிசம்), நடைமுறைக்கேற்ற (பிராக்மாட்டிசம்), மற்றும் கற்பனாவாதம் (உட்டோபியனிசம்).

கிறிஸ்தவ உலக கண்ணோட்டம் வேதத்தின் அடிப்படையில் இம்மூன்று கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது: (1) நாம் தேவனின் படைப்பு; இந்த உலகத்தை ஆலுகை செய்யவும் மற்றும் தேவனோடு உறவு கொள்ளவும் உண்டாக்கப்பட்டோம் (ஆதியாகமம் 1:27,28; 2:15). (2) நாம் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்ததினால் இந்த ழுழு உலகத்தையும் சாபத்திற்கு உட்படுத்தினோம் (ஆதியாகமம் 3).(3) தேவன் தாமே தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பலியாக தந்ததின் மூலம் உலகத்தை மீட்டார் (ஆதியாகமம் 3:15; லூக்கா 19:10), மற்றும், ஒரு நாள், சிருஷ்டிப்பை அத்உ முன் இருந்த பூரணமான நிலைக்கு திரும்பவும் மீட்டுகொள்வார் (ஏசாயா 65:17-25). கிறிஸ்தவ உலக கண்ணோட்டம் நம்மை நல்நடத்தை, அற்புதங்கள், மனித மரியாதை, மற்றும் மீட்பை விசுவாசிக்க நடத்துகிறது.

உலக கண்ணோட்டம் விரிவானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் – எடுத்துகாட்டாக, பணம், நல்நடத்தை, அரசியல், மற்றும் கலை – பாதிக்கிறது. உண்மையான கிறிஸ்தவம் என்பது சபையில் பயன்படுத்தகூடிய குறிப்பிட்ட கருத்துகளுக்கு அப்பாற்பட்டது. வேதத்தில் போதிக்கபட்ட கிறிஸ்தவமே ஒரு உலக கண்ணோட்டம் ஆகும். வேதம் "மதம்" மற்றும் "உலக" வாழ்க்கையை வேறுபடுத்துவது இல்லை; இருக்கும் ஒரே வாழ்க்கை கிறிஸ்தவ வா்க்கையே. இயேசு தாமே, "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்"(யோவான் 14:6) என்று கூறினார். ஆகையால், அவரே நமது உலக கண்ணோட்டம் ஆனார்.

English
முகப்பு பக்கம்
கிறிஸ்தவ உலக கண்ணோட்டம் என்றால் என்ன?