கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களுக்காக தொடர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா?


கேள்வி: கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களுக்காக தொடர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா?

பதில்:
"நான் பாவம் செய்தால் என்ன நடக்கும், பிறகு நான் தேவனிடத்தில் பாவத்தை அறிக்கையிடுவதற்கு ஒரு வாய்ப்பைப் பெறமுடியுமா?" என்கிற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிற கேள்வியாக இருக்கிறது. மற்றொரு பொதுவான கேள்வி: "நான் பாவம் செய்து பின்பு தேவனிடம் அதை ஒப்புக்கொள்வது மறந்துவிட்டால் என்ன நடக்கும்?" இந்த இரண்டு கேள்விகளும் ஒரு தவறான கருத்தைக் கொண்டிருக்கின்றன. இரட்சிப்பு என்பது விசுவாசிகள் அவர்கள் இறக்கும் முன்பு அவர்கள் ஒவ்வொரு பாவத்திலிருந்தும் மனந்திரும்புகிற ஒரு விஷயமல்ல. இரட்சிப்பு என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் பாவத்தை ஒப்புக்கொண்டு அதிலிருந்து மனந்திரும்பினாரா என்பதன் அடிப்படையில் அல்ல. ஆமாம், நாம் பாவம் செய்திருக்கிறோம் என்பதை அறிந்தவுடன் தேவனிடம் நம் பாவங்களை நாம் அறிக்கையிட வேண்டும். எனினும், அதற்காக நாம் எப்பொழுதும் தேவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில்லை. நாம் இரட்சகராக இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரில் விசுவாசம் வைக்கும்பொழுது, நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. அது கடந்த கால, தற்போதைய, மற்றும் எதிர்கால பாவங்கள் மற்றும் பெரிய அல்லது சிறிய பாவங்கள் என எல்லாம் அடங்கும். விசுவாசிகள் தங்கள் பாவங்களை மன்னித்துவிடும்படி தொடர்ந்து மன்னிப்பு கேட்கவோ அல்லது மனந்திரும்பவோ வேண்டியதில்லை. நம்முடைய பாவங்கள் எல்லாவற்றிற்குமுள்ள தண்டனையின் விலையை கொடுப்பதற்கு இயேசு மரித்தார், ஆகவே அவர்கள் மன்னிக்கப்படுகையில், அவர்களுடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (கொலோசெயர் 1:14; அப்போஸ்தலர் 10:43).

நாம் செய்யவேண்டியது என்னவென்றால், நம்முடைய பாவங்களை அறிக்கையிடுவது மட்டுமே: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9). தேவனிடத்தில் நம் பாவங்களை நாம் "அறிக்கைசெய்" என்கிற காரியத்தை இந்த வசனம் நமக்குச் சொல்லுகிறது. "அறிக்கைசெய்" என்கிற வார்த்தை "ஒப்புக்கொள்வதாகும்" என்பதாகும். நாம் தேவனிடத்தில் நம் பாவங்களை அறிக்கையிடுகையில், நாம் தவறு செய்ததாகவும், நாம் பாவம் செய்தோம் என்றும் நாம் தேவனோடு ஒப்புக்கொள்கிறோம். அவர் "உண்மையும் நீதியுமுள்ளவர்" என்பதால், நாம் தொடர்ந்து மன்னிப்புக் கேட்டு அவரை நாடும்போது, அவர் தொடர்ந்து நம்மை மன்னிக்கிறவராக இருக்கிறார். தேவன் எப்படி "உண்மையும் நீதியுமுள்ளவராக" இருக்கிறார்? கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்கிற அனைவருக்கும் அவர் வாக்குறுதி அளித்திருக்கிறதுபோல, அவர் அவர்கள் பாவங்களை மன்னிக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக கடனை செலுத்துவதன் மூலம் தான் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்கிறார்.

அதே சமயத்தில் 1 யோவான் 1:9-ல், பாவ மன்னிப்பு என்பது தேவனுக்கு நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிடுவதைப் பொறுத்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்துவை இரட்சகராக நாம் ஏற்றுக்கொள்வதன் மூலம் நம் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகிறது என்றால் இது எவ்வாறு வேலை செய்கிறது? இங்கே அப்போஸ்தலன் யோவான் விவரிக்கிறது "தொடர்புடைய" மன்னிப்பு என்று தெரிகிறது. நம்முடைய பாவங்கள் அனைத்தும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் அந்த தருணத்தில் "நிலைத்து நிற்கின்ற" வகையில் மன்னிக்கப்படுகின்றன. இந்த நிலைப்பாடான மன்னிப்பு நம்முடைய இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறது, மற்றும் பரலோகத்தில் ஒரு நித்திய வீட்டையும் உறுதிப்படுத்துகிறது. மரணத்திற்குப் பின் நாம் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது, நம்முடைய பாவங்கள் நிமித்தமாக நம்மை பரலோகத்திற்குள் பிரவேசிக்க தேவன் தடைபண்ணமாட்டார். அதுதான் நிலைப்படுத்தப்படுகிற நிலையான மன்னிப்பாகும். தொடர்புடைய மன்னிப்பு என்கிற கருத்தானது நாம் பாவம் செய்தால், நாம் தேவனைப் புண்படுத்தி, அவருடைய ஆவியானவரை துக்கப் (எபேசியர் 4:30) படுத்துகிறோம். நாம் செய்த பாவங்களை தேவன் முடிவாக மன்னிக்கும்போதும், தேவனோடுள்ள நம் உறவில் தடையாக அல்லது இடையூறாக இருக்கிறது. ஒரு தந்தைக்கு எதிராக பாவம் செய்த ஒரு மகன் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவதில்லை. ஒரு தேவபக்தியுள்ள தந்தை நிபந்தனையின்றி தனது குழந்தைகளை மன்னிப்பார். அதே சமயம், உறவு மீட்டெடுக்கும் வரையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நல்ல உறவு இருப்பதில்லை. ஒரு குழந்தை தன் தந்தையிடம் தனது தவறை ஒப்புக்கொள்கிறதோடு மன்னிப்பு கேட்கும் போது இது நிகழ்கிறது. அதனால்தான், நம்முடைய பாவங்களை நாம் தேவனிடத்தில் அறிக்கையிடுகிறோம் - நம்முடைய இரட்சிப்பைக் காப்பாற்றுவதற்காக அல்ல, ஆனால் நம்மை நேசிக்கிறவரும், ஏற்கனவே நம்மை மன்னித்தவருமாகிய தேவனோடு நெருங்கிய உறவிற்குள் கொண்டுவருவதாகும்.

English


முகப்பு பக்கம்
கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களுக்காக தொடர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா?