settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ அறிவியல் என்றால் என்ன?

பதில்


கிறிஸ்தவ அறிவியல் இயக்கம் மேரி பேக்கர் எடி (1821-1910) என்பவரால் தொடங்கப்பட்டது, அவர் ஆவிக்குரிய நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்த புதிய யோசனைகளுக்கு முன்னோடியாக இருந்தார். 1866-ஆம் ஆண்டில் குணப்படுத்துவதற்கான தனது சொந்த அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட எடி, வேதாகம படிப்பு, ஜெபம் மற்றும் பல்வேறு குணப்படுத்தும் முறைகள் பற்றிய ஆராய்ச்சிகளில் பல ஆண்டுகள் செலவிட்டார். இதன் விளைவாக 1879-ஆம் ஆண்டில் அவர் "கிறிஸ்தவ அறிவியல்" என்று அழைக்கப்படுகிற இயக்கத்தை தொடங்கினார். அவரது புத்தகம், வேதவாக்கியங்களின் திறவுகோல்களுடன் அறிவியல் மற்றும் உடல்நலம் (Science and Health with Key to the Scriptures), மனம்-உடல்-ஆவி தொடர்பைப் புரிந்துகொள்வதில் புதிய தளத்தை ஏற்படுத்தியது. அவர் பின்பு ஒரு கல்லூரி, திருச்சபை, வெளியீட்டு நிறுவனம் மற்றும் புகழ்பெற்ற செய்தித்தாள் “கிறிஸ்தவ அறிவியல் கண்காணிப்பு” ஆகியவற்றை தோற்றுவித்தார். மற்ற குழுக்களுடன் ஒற்றுமை இருப்பதால், கிறிஸ்தவ அறிவியல் இயக்கத்தை ஒரு கிறிஸ்தவமல்லாத ஒரு வழிபாட்டு முறை என்று பலர் நம்புகிறார்கள்.

தேவன் அனைவருக்கும் தந்தை-தாய்-முற்றிலும் நல்லவர் மற்றும் பூரணமாய் ஆவிக்குரிய தன்மையுள்ளவர் என்றும், ஒவ்வொரு நபரின் உண்மையான இயல்பு உட்பட தேவனின் படைப்பு அனைத்தும் தெய்வீகத்தின் குறைபாடற்ற ஆவிக்குரிய ஒற்றுமை என்றும் கிறிஸ்தவ அறிவியல் கற்பிக்கிறது. தேவனுடைய படைப்பு நல்லது என்பதால், நோய், மரணம் மற்றும் பாவம் போன்ற தீமைகள் அடிப்படை யதார்த்தத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்கிறார்கள். மாறாக, இந்த தீமைகள் தேவனைத் தவிர்த்து வாழ்வதன் விளைவாகும் என்று கூறுகிறார்கள். தேவனிடம் நெருங்கி வந்து மனித நோய்களைக் குணப்படுத்த ஒரு முக்கிய வழி ஜெபம். இது வேதாகமத்திலிருந்து வேறுபடுகிறது, இது ஆதாமின் வீழ்ச்சியிலிருந்து பெறப்பட்ட பாவத்தில் மனிதன் பிறக்கிறான் என்றும் பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது என்றும் கற்பிக்கிறது. சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் தேவனின் இரட்சிப்பு கிருபையில்லாமல், இறுதி நோயிலிருந்து நாம் ஒருபோதும் குணமடைய மாட்டோம் – அதாவது பாவத்திலிருந்து.

இயேசு நம்முடைய ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துகிறார் என்று கற்பிப்பதற்குப் பதிலாக (ஏசாயா 53: 5 ஐக் காண்க), கிறிஸ்தவ அறிவியல் கோட்பாட்டாளர்கள் இயேசுவின் ஊழியத்தை குணப்படுத்துவதற்கான ஒரு முன்மாதிரியாகவே பார்க்கிறார்கள், இது இரட்சிப்பைப் பொறுத்தவரை குணப்படுத்துவதற்கான மையத்தை நிரூபிக்கிறது என்று நம்புகிறார்கள். கிறிஸ்தவ அறிவியல் கோட்பாட்டாளர்கள் தேவனின் யதார்த்தத்தையும் அவருடைய அன்பையும் தினமும் உணர்ந்து கொள்ளவும், இந்த புரிதலின் இணக்கமாக, குணப்படுத்தும் விளைவுகளை அனுபவிக்கவும் மற்றவர்களுக்கு உதவவும் ஜெபம் செய்கிறார்கள்.

பெரும்பாலான கிறிஸ்தவ அறிவியல் கோட்பாட்டாளர்களுக்கு, ஆவிக்குரிய சிகிச்சைமுறை ஒரு சிறந்த முதல் தேர்வாகும், இதன் விளைவாக, அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பதிலாக ஜெபத்தின் சக்தியை நோக்கித் திரும்புகிறார்கள். அரசாங்க அதிகாரிகள் அவ்வப்போது இந்த அணுகுமுறையை சவால் செய்துள்ளனர், குறிப்பாக சிறார்களிடமிருந்து மருத்துவ சிகிச்சையை நிறுத்தி வைக்கும் சூழ்நிலைகளில். இருப்பினும், உறுப்பினர்களின் சுகாதார பராமரிப்பு முடிவுகளை கட்டாயப்படுத்தும் திருச்சபை கொள்கை எதுவும் இல்லை.

கிறிஸ்தவ அறிவியலுக்கு ஊழியக்காரர்கள் இல்லை. மாறாக, வேதாகமமும் அறிவியல் மற்றும் ஆரோக்கியம் போன்றவைகள் போதகராகவும் பிரசங்கியாகவும் செயல்படுகின்றன. ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு சாதாரண உறுப்பினர்களால் வேதாகமப் பாடங்கள் தினமும் படிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் சத்தமாக வாசிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ அறிவியல் திருச்சபைகள் வாராந்திர சாட்சி சொல்லும் கூட்டங்களையும் நடத்துகின்றன, இதில் சபை உறுப்பினர்கள் குணப்படுத்துதல் மற்றும் மீளுருவாக்கம் பற்றிய அனுபவங்களை தொடர்புபடுத்துகிறார்கள்.

தற்போதுள்ள அனைத்து “கிறிஸ்தவ” வெவ்வேறு வழிபாட்டு முறைகளிலும், “கிறிஸ்தவ அறிவியல்” என்பது மிகவும் தவறாக பெயரிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ அறிவியல் கூட்டத்தார் கிறிஸ்தவர்கள் அல்ல, அறிவியலை அடிப்படையாகக் கொண்டதும் அல்ல. கிறிஸ்தவ அறிவியல் ஒரு "கிறிஸ்தவராக” அமைப்பை மாற்றுவதற்கான அனைத்து முக்கிய சத்தியங்களையும் மறுக்கிறது. கிறிஸ்தவ அறிவியல் உண்மையில் அறிவியலை எதிர்க்கிறது மற்றும் உடல் மற்றும் ஆவிக்குரிய குணப்படுத்துதலுக்கான பாதையாக மாயமான புதிய-யுக ஆவிக்குரிய நிலையை சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்தவ அறிவியல் என்பதை கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்கள் மற்றும் ஒரு புதிய மரபு வழிபாடாக அங்கீகரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட வேண்டும்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவ அறிவியல் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries