ஒரு கிறிஸ்தவன் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டவனாக இருக்க முடியுமா?


கேள்வி: ஒரு கிறிஸ்தவன் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டவனாக இருக்க முடியுமா?

பதில்:
வேதாகமம் ஒரு கிறிஸ்தவன் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருக்க முடியுமா என்பதைக்குறித்து தெளிவாகக் கூறவில்லை என்கிறபோதிலும் மற்ற வேதபாகங்களில் கொடுக்கப்பட்டுள்ள வேதாகமத்தின் சத்தியங்கள் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவன் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருக்க முடியாது என்று மிகத்தெளிவாக கூறுகின்றன. பிசாசினால் பிடிக்கப்பட்டு ஆட்கொள்ளப்படுதல் என்பதற்கும் பிசாசினால் வாதிக்கப்படுதல் அல்லது வசப்படுதல் என்பதற்கும் தெளிவான வித்தியாசமுள்ளது. பிசாசு பிடித்தல் என்பது பிசாசு ஒரு மனிதனின் முழுமையான சிந்தையை அல்லது அவனுடைய செயல்பாடுகளை நேரடியாக ஆளுகை செய்வது ஆகும் (மத்தேயு 17:14-18; லூக்கா 4:33-35; 8:27-33). பிசாசின் நெருக்கடி அல்லது வசமாக்குதல் என்பது பிசாசோ அல்லது பிசாசுகளோ ஒரு மனிதனை ஆவிக்குரிய ரீதியிலோ பாவப் பழக்கவழக்கங்களில் தள்ளிவிடுவதன் மூலமோ தாக்குவதாகும். ஆவிக்குரிய யுத்தத்தைக் குறித்து கூறுகின்ற எந்தஒரு புதிய ஏற்பாட்டு பகுதியிலும் விசுவாசியைவிட்டு பிச்சை துரத்த வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை (எபேசியர் 6:10-18). விசுவாசிகள் பிசாசிற்கு எதிர்த்து நிற்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது, துரத்தும்படியல்ல (யாக்கோபு 4:7; 1 பேதுரு 5:8, 9).

கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யும்படி பெற்றிருக்கிறார்கள் (ரோமர் 8:9-11; 1 கொரிந்தியர் 3:16; 6:19). பரிசுத்த ஆவியானவர் தாம் வாசம் செய்கிற மனிதனுக்குள் பிசாசு வந்து தங்கும்படிக்கு மெய்யாகவே இடம் கொடுக்கவேமாட்டார். தேவன் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்டெடுத்து (1 பேதுரு 1:18, 19) புதிய புதிய சிருஷ்டியாக்கின தமது பிள்ளைகளை (2 கொரிந்தியர் 5:17) பிசாசு பிடித்து ஆட்கொள்ளப்பட அனுமதிப்பார் என்பதை யோசித்து பார்க்கமுடியாத ஒன்றாகும். ஆம், விசுவாசிகளாக நாம் சாத்தானோடும் பிசாசுகளோடும் இருக்கிற யுத்தத்தில் தான் இருக்கிறோம், ஆனால் நமக்குள்ளிருந்தல்ல. “பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவான் 4:4) என்று அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார். நமக்குள் இருக்கிறவர் யார்? அவரே பரிசுத்த ஆவியானவர். உலகில் இருக்கிறவன் யார்? சாத்தானும் அவனுடைய பிசாசுகளுமாகும். ஆகவே விசுவாசி பிசாசின் உலகத்தை ஜெயித்தவனாக இருக்கிறான். வேதவாக்கியத்தின்படி ஒரு விசுவாசி பிசாசுப் பிடித்தவனாக இருக்கமுடியாது.

ஒரு கிறிஸ்தவன் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டு இருக்க முடியாது என்பதற்கு வேதாகமத்தில் வலுவானச் சான்றுகள் உள்ளதைக் கருத்தில் கொண்டு சில வேதப் பண்டிதர்கள் “பூதாகரப்படுத்தப்படுதல்" (demonization) என்கிற பதத்தை ஒரு கிறிஸ்தவனை பிசாசு ஆளுகை செய்வதைக் குறிக்க பயன்படுத்துகிறார்கள். சிலர் ஒரு கிறிஸ்தவனை பிசாசு அவனுக்குள் ஆட்கொண்டு அவனை அது ஆளுகை செய்ய முடியாதபோது, அது அவனை பிடித்துக்கொள்கிறது என்று கூறுகிறார்கள். பொதுவாக, “பூதாகரப்படுத்தப்படுதல்" மற்று “ஆட்கொள்ளப்படுதல்” இரண்டும் ஒரே அர்த்தம் மற்றும் விளக்கமும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. இரண்டிற்கும் ஒரே விளைவுதான் இருக்கின்றன. ஆகையால், பதத்தை மாற்றுவது ஒரு கிறிஸ்தவனை பிசாசு பிடிக்கவோ ஆளுகை செய்யவோ முடியாது என்ற உண்மையை மாற்றிவிடமுடியாது. பிசாசினால் விசுவாசிகளுக்கு ஏற்படும் நெருக்கம் மற்றும் தாக்குதல் முற்றிலும் உண்மையானவைகள், ஆனால் அதற்காக ஒரு கிறிஸ்தவனை பிசாசு பிடிக்கவோ ஆளுகைச்செய்யவோ முடியும் என்றுக் கூறுவது வேதாகமத்தின் படியானதுக் கிடையாது. அது வேதாகமத்திற்கு புறம்பானதாகும்.

ஒரு கிறிஸ்தவன் எண்ணப்பட்டவன் “நிச்சயமாகவே” பிசாசுப்பிடித்தவனைப்போல அல்லது பிசாசினால் ஆட்கொள்ளப் பட்டதைப்போல நடந்துக்கொண்டதைப் பார்க்கும் இந்த தனிப்பட்ட அனுபவத்தை வைத்துதான் பெரும்பாலும் கிறிஸ்தவன் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டு ஆளுகை செய்யப்படுகிறான் என்பதற்குக் காரணம் சொல்லப்படுகின்றது. நம்முடைய தனிப்பட்ட அனுபவங்களை வைத்து வேதவாக்கியங்களை வியாக்கியானம் செய்ய நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மாறாக வேதவாக்கியங்களைக் கொண்டு நம்முடைய தனிப்பட்ட அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும் (1 திமோத்தேயு 3:16-17). கிறிஸ்தவன் என்று அறியப்படுகிற ஒருவர் அல்லது நாம் கிறிஸ்தவர் என்று எண்ணிக்கொண்டிருந்த ஒருவர் பிசாசின் ஆளுகையில் இருப்பதுப்போல் நடந்துக்கொள்ளும்போது, அவருடைய (ஆணோ/பெண்ணோ) விசுவாசத்தின் உண்மைநிலையைத்தான் நாம் கேள்வி கேட்கவேண்டும். நம்முடைய பார்வைக்க் கோணத்தை கிறிஸ்தவனை பிசாசு பிடிக்குமா ஆளுகை செய்யுமா என்று மாற்றத்தக்க நிலைக்கு ஒருபோதும் அனுமதிக்ககூடாது. ஒரு உண்மையான கிறிஸ்தவன் பிசாசினால் நெருக்கப்படுவதையோ அல்லது மனோரீதியானப் பிரச்ச்சனையிலிருப்பதையோ நம்முடைய அனுபவத்தை வைத்து பிசாசு பிடித்தவன் என்று முடிவுக்கு வந்துவிடக்கூடாது. மாறாக வேதவசனத்தை வைத்து தான் ஆராய வேண்டுமேயல்லாமல் வேறுவிதமாக திசை திருப்பிவிடக்கூடாது.

English
முகப்பு பக்கம்
ஒரு கிறிஸ்தவன் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டவனாக இருக்க முடியுமா?