settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ தியானம் என்றால் என்ன?

பதில்


சங்கீதம் 19:14 கூறுகிறது, “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” அப்படியானால், கிறிஸ்தவ தியானம் என்பது என்ன, கிறிஸ்தவர்கள் எவ்வாறு தியானிக்க வேண்டும்? துரதிர்ஷ்டவசமாக, “தியானம்” என்ற சொல் மாயமான ஒன்றின் பொருளைக் கொண்டு எங்கேயோ சென்றுவிட்டது. சிலருக்கு, தியானம் ஒரு அசாதாரண நிலையில் அமர்ந்திருக்கும் போது மனதைத் ஒருநிலைப்படுத்தி வெறுமையாக்குவதாகும், மற்றவர்களுக்கு தியானம் நம்மைச் சுற்றியுள்ள ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்கிறதாகும். ஆனால், இது போன்ற கருத்துக்கள் நிச்சயமாக கிறிஸ்தவ தியானத்தின் தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

கிறிஸ்தவ தியானத்திற்கு கிழக்கித்திய ஆன்மீகவாதத்தை அவற்றின் அடித்தளமாகக் கொண்ட நடைமுறைகளுடன் எந்த தொடர்பும் இல்லை. இத்தகைய நடைமுறைகளில் லெக்டியோ டிவினா, ஆழ்நிலை தியானம் மற்றும் சிந்தனைத் தொழுகை எனப்படும் பல வடிவங்கள் அடங்கும். இவை அவற்றின் மையத்தில் ஒரு ஆபத்தான முன்மாதிரியைக் கொண்டுள்ளன, அவை "தேவனின் சப்தத்தை/குரலைக் கேட்க வேண்டும்", அவருடைய வார்த்தையின் மூலம் அல்ல, ஆனால் தியானத்தின் மூலம் தனிப்பட்ட வெளிப்பாடு மூலம் அப்படிக் கேட்கவேண்டும் என்று போதிக்கிறார்கள். சில திருச்சபைகள் "கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தையை" கேட்கிறேன் என்று கூறும் அல்லது அப்படி நினைக்கும் மக்களால் நிரப்பப்படுகின்றன, பெரும்பாலும் ஒருவருக்கொருவர் முரண்படுகின்றன, எனவே கிறிஸ்துவின் சரீரத்திற்குள் முடிவற்ற பிளவுகளை ஏற்படுத்துகின்றன. கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையை புறக்கணித்து அவற்றைக் கைவிடக்கூடாது, காரணம் “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16-17). ஒவ்வொரு நற்செயலுக்கும் நம்மை முழுமையாகச் சித்தப்படுத்துவதற்கு வேதாகமம் போதுமானதாக இருந்தால், அதற்குப் பதிலாக அல்லது அதற்கு கூடுதலாக ஒரு மாய அனுபவத்தை நாம் தேட வேண்டும் என்று எப்படி நினைப்போம்?

கிறிஸ்தவ தியானம் என்பது கடவுளுடைய வார்த்தையிலும் அது அவரைப் பற்றி வெளிப்படுத்தும் விஷயத்திலும் மட்டுமே இருக்க வேண்டும். தாவீது இதுபோன்று இருப்பதைக் கண்டார், "பாக்கியமுள்ள" மனிதன் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறான்” என்று அவர் விவரிக்கிறார் (சங்கீதம் 1:2). உண்மையான கிறிஸ்தவ தியானம் என்பது ஒரு செயலில் சிந்தனை செயல்முறையாகும், இதன் மூலம் நாம் வார்த்தையைப் படிப்பதற்கும், அதைப் பற்றி ஜெபிப்பதற்கும், "எல்லா சத்தியங்களுக்கும்" நம்மை வழிநடத்துவதாக வாக்குறுதியளித்த ஆவியினால் நமக்கு புரிதலைத் தரும்படி தேவனிடத்தில் கேட்டுக்கொள்கிறோம் (யோவான் 16:13) . இந்த உண்மையை நாம் நமது நடைமுறைக்குக் கொண்டுவருகிறோம், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி சொல்லும்போது வாழ்க்கை மற்றும் நடைமுறைக்கான விதியாக வேதவசனங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். இது அவருடைய பரிசுத்த ஆவியினால் நாம் கற்பிக்கப்படுவதால் ஆன்மீக வளர்ச்சியையும் தேவனுடைய காரியங்களில் முதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவ தியானம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries