கேள்வி
ஒரு கிறிஸ்தவர் காப்பீடு எடுக்கலாமா?
பதில்
காப்பீட்டைப் பெறலாமா வேண்டாமா என்கிற கேள்வியுடன் கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் போராடுகிறார்கள் – காப்பீட்டை எடுத்துக்கொண்ட ஒரு கிறிஸ்தவர் விசுவாசமின்மையை நிரூபிக்கிறாரா? இது மெய்யாகவே ஒரு ஆரோக்கியமான போராட்டம், விசுவாசிகள் வேதவசனங்களை ஆராய்ந்து வேதாகமத்தில் இருந்து பாதுகாப்பான பதிலைக் கொண்டு வர வேண்டும்.
முதலாவதாக, கிறிஸ்தவர்களுக்கான காப்பீடு குறிப்பாக வேதாகமத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்வோம். தேவனுடைய வார்த்தையில் ஏதேனும் குறிப்பிடப்படவில்லை என்றால், முழு வேதத்தையும் வாசித்து அது கற்பிப்பதில் இருந்து கொள்கைகளை நாம் எடுக்க வேண்டும். வெவ்வேறு விசுவாசிகள் வெவ்வேறு தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு வரக்கூடும், அது சரி. இத்தகைய சூழ்நிலைகள் மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்று ரோமர் 14-ஆம் அதிகாரம் கூறுகிறது. விசுவாசிகளுக்கு தாங்களாக தங்கள் மனதை திடப்படுத்தி முடிவு எடுக்க அவர்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது (ரோமர் 14:5). 23-வது வசனம் கூறுகிறது, நாம் எதை முடிவு செய்தாலும் அது விசுவாசத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவருக்கு காப்பீடு கிடைப்பது தனிப்பட்ட உறுதியான விஷயம்; காப்பீட்டைக் கொண்ட ஒரு கிறிஸ்தவர் தனக்கு காப்பீடு வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அவர் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும், காப்பீடு இல்லாத ஒரு கிறிஸ்தவர் தனிப்பட்ட முறையில் அவ்வாறாக காப்பீடு வேண்டாம் என்பதை தேவன் விரும்புவதாக அவர் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நமக்கு வழிகாட்ட சில வேதாகமக் கொள்கைகள் இங்கே: நாம் நம்மீது அதிகாரமுள்ள அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். ஆகவே, வாகன பொறுப்பு போன்ற காப்பீட்டை நாம் சட்டப்படி கோருகையில், நாம் இணங்க வேண்டும். மேலும், நாம் நமது குடும்பங்களை கவனித்துக்கொள்ள வேண்டும். ஆகவே, கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களின் எதிர்கால நலனுக்காக முன்னரே திட்டமிட வேண்டும், காப்பீடு வைத்திருப்பது அதன் ஒரு பகுதியாக இருக்கலாம். ஒரு குடும்ப உறுப்பினரின் எதிர்பாராத ஆரம்பகால மரணத்திற்குத் தயாராக இருப்பதும் அடங்கும். ஆயுள் காப்பீட்டை சிலரின் விசுவாசமின்மை அல்லது பணத்தின் மீதான சிநேகம், அல்லது விவேகமான திட்டமிடல் மற்றும் மற்றவர்களால் நிதிகளின் புத்திசாலித்தனமான உக்கிரானத்துவம் எனவும் காணலாம். ஒவ்வொரு நபரின் நிலைமைகளும் நம்பிக்கைகளும் இந்த பகுதிகளில் வேறுபடலாம். தேவன் நிச்சயமாகவே திட்டமிடுதலை ஆதரிக்கிறார். யோசேப்பின் கதையும் அவருடைய புத்திசாலித்தனமான திட்டமிடலும் எகிப்து தேசத்தை மட்டுமல்ல, இஸ்ரவேல் மக்களையும் கிறிஸ்துவின் வம்சாவளியையும் காப்பாற்றியது (ஆதியாகமம் 41).
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நாம் தேவனுடைய வார்த்தையைப் படித்து அவரிடம் மன்றாடி கூப்பிட வேண்டும், மற்றும் நமது வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் அவர் என்ன செய்ய விருப்பமாக என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். தேவன் நமக்கு ஞானத்தை கொடுக்க விரும்புகிறார் (யாக்கோபு 1:5). விசுவாசம் இல்லாமல் அவரைப் பிரியப்படுத்து என்பது இயலாத காரியம் என்று எபிரெயர் 11:6 கூறுகிறது. இதுதான் உண்மையான கேள்வி: "இது பரலோகத்திலுள்ள என் பிதாவைப் பிரியப்படுத்துமா?" கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு வசனம் யாக்கோபு 4:17 ஆகும், இது நன்மை செய்ய நமக்கு வாய்ப்பு இருந்தால், அதைச் செய்ய வேண்டும், இல்லையென்றால் அதினால் நாம் பாவம் செய்கிறோம். இந்த பிரச்சினையை தீர்க்கும் மற்றொரு வசனம் 1 தீமோத்தேயு 5:8 ஆகும், இது மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய விரும்பினால், நாம் நமது சொந்த குடும்பத்தினருடன் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த இலக்குகளை அடைவதற்கு அவருக்கு உதவ ஒரு கருவியாக ஒரு கிறிஸ்தவர் காப்பீட்டைக் காணலாம்.
English
ஒரு கிறிஸ்தவர் காப்பீடு எடுக்கலாமா?