settings icon
share icon
கேள்வி

ஒரு கிறிஸ்தவர் இன்று பேயோட்டும் செயலை செய்ய முடியுமா?

பதில்


சுவிசேஷங்கள் மற்றும் அப்போஸ்தலர் புத்தகங்களில் கிறிஸ்துவின் கட்டளைப்பிரகாரம் சீஷர்களால் பேயோட்டுதல் (பேய்கள் மற்றவர்களை விட்டுச் செல்ல கட்டளையிடுவது) கடைப்பிடிக்கப்பட்டது (மத்தேயு 10); கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்தி மற்றவர்கள் (மாற்கு 9:38); பரிசேயரின் புத்திரர்கள் (லூக்கா 11:18-19); பால் (அப்போஸ்தலர் 16); மற்றும் சில பெயோட்டுபவர்கள் (அப்போஸ்தலர் 19:11-16).

இயேசுவின் சீடர்கள் பேய்களை விரட்டியதன் நோக்கம் பேய்களின் மேல் கிறிஸ்துவிற்குள்ள ஆளுமையைக் காட்டுவதற்கும் (லூக்கா 10:17), சீஷர்கள் அவருடைய பெயரில் அவருடைய அதிகாரத்திலும் செயல்படுவதை காண்பிக்கிறதாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இது அவர்களுடைய விசுவாசம் அல்லது விசுவாசக்குறைவை வெளிப்படுத்தியது (மத்தேயு 17:14-21). சீஷர்களின் ஊழியத்தில் பேய்களை விரட்டுவது ஒரு முக்கியமான பாகமாக இருந்தது தெளிவாகிறது. ஆனாலும், மெய்யாகவே சீஷத்துவத்தில் ஒரு சீஷனாக இருந்து செயல்படுவதில், பிசாசுகளைத் துரத்தியடிப்பது என்ன நிலை என்று தெளிவாக தெரியவில்லை.

சுவாரஸ்யமாக, பிசாசுகளுக்கு எதிராக உள்ள யுத்தத்தைக் குறித்து புதிய ஏற்பாட்டின் பிற்பகுதியில் ஒரு மாற்றம் உண்டானது தெரிகிறது. புதிய ஏற்பாட்டின் போதனைப் பகுதிகள் (ரோமர் முதல் யூதா) பேய் நடவடிக்கைகளைக் குறிப்பிடுகின்றன, இன்னும் அவற்றை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவும், விசுவாசிகளாக அவ்வாறு செய்யும்படி அறிவுரை கூறவும் இல்லை. அவர்களை எதிர்த்து நிற்க சர்வாயுத வர்க்கத்தை அணிந்துகொள்வதற்கு நாம் சொல்லப்பட்டிருக்கிறோம் (எபேசியர் 6:10-18). பிசாசுக்கு எதிராக (யாக்கோபு 4:7) எதிர்த்து நிற்கும்படியாக கூறப்படுகிறோம், அவனிடம் கவனமாக இருங்கள் (1 பேதுரு 5:8), மற்றும் நம் வாழ்வில் அவனைக்குறித்து கவனமாக இருக்கவேண்டும் (எபேசியர் 4:27). இருப்பினும், அவனை அல்லது அவனுடைய பேய்களை மற்றவர்களிடம் இருந்து எவ்வாறு துரத்தவேண்டும் நமக்கு கூறப்படவில்லை, அல்லது அவ்வாறு செய்ய வேண்டுமென நாம் கருதுகிறோம்.

தீய சக்திகளுக்கு எதிரான போரில் நம் வாழ்வில் நாம் வெற்றி பெறுவது எப்படி என்பதை எபேசிய புத்தகம் தெளிவுபடுத்துகிறது. முதலாவது படி கிறிஸ்துவின் விசுவாசத்தை (2:8-9) வைக்கிறது, இது “ஆகாயத்து அதிகாரப் பிரபுவின்” ஆட்சியை உடைக்கிறது (2:2). நாம் மறுபடியும் தேவனுடைய கிருபையால், தேவபக்தியற்ற பழக்கங்களைத் தள்ளி, தெய்வீக பழக்கவழக்கங்களை (4:17-24) ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இது பிசாசுகளைத் துரத்திவிடுகிற செயலில் ஈடுபடாமல், மாறாக நம்முடைய மனதை புதுப்பித்துக்கொள்வது (4:23) ஆகும். தேவனுக்கு கீழ்ப்படிவது எப்படி பல நடைமுறை அறிவுரைகளுக்குப் பிறகு, நாம் ஆவிக்குரியப் போரைக் கொண்டிருப்பதை நினைவுபடுத்துகிறோம். நம்மை எதிர்த்து நிற்க அனுமதிக்கிற சில கவசங்களுடன் போராடுகிறோம் - பேய் உலகின் தந்திரத்திற்கு (6:10) எதிராக இருக்கும் போராட்டம். நாம் சத்தியத்தோடு, நீதி, சுவிசேஷம், விசுவாசம், இரட்சிப்பு, தேவனுடைய வார்த்தை, மற்றும் ஜெபம் (6:10-18) ஆகியவற்றோடு நிற்கிறோம்.

தேவனுடைய வார்த்தை பரிபூரணமடைந்தபோது, கிறிஸ்தவர்கள் ஆரம்பகால கிறிஸ்தவர்களைவிட ஆவி உலகத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு அதிகமான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். பிசாசுகளை துரத்துவது பெரும்பாலும், தேவனுடைய வார்த்தையின் மூலம் சுவிசேஷம் மற்றும் சீஷத்துவம் ஆகியவற்றோடு மாற்றப்பட்டது. புதிய ஏற்பாட்டில் ஆவிக்குரிய போரின் முறைகள் பிசாசுகளை துரத்துவதில் ஈடுபடாமல் இருப்பதால், அத்தகைய காரியங்களை எப்படி செய்வது என்பதற்கான வழிமுறைகளைத் தீர்மானிக்க கடினமாக உள்ளது. தேவைப்பட்டால், தேவனுடைய வார்த்தையையும் இயேசு கிறிஸ்துவின் பெயரையும் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவதன் மூலம் இது தெரிகிறது.

Englishமுகப்பு பக்கம்

ஒரு கிறிஸ்தவர் இன்று பேயோட்டும் செயலை செய்ய முடியுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries