settings icon
share icon
கேள்வி

ஒரு குழந்தைக்கு கிறிஸ்தவக் கல்வியை வழங்குவது முக்கியமானதா?

பதில்


இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு, கிறிஸ்தவ கல்வி முக்கியமா இல்லையா என்கிற கேள்வி தெளிவாகத் தெரிகிறது. பதில் "ஆம்!" எனவே ஏன் கேள்வி கேட்க வேண்டும்? ஏனென்றால், இந்தக் கேள்வி கிறிஸ்தவ விசுவாசத்தில் உள்ள எண்ணற்ற கண்ணோட்டங்களில் இருந்து வருகிறது. ஒருவேளை கேள்வி "என் குழந்தையை கிறித்தவத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கு யார் பொறுப்பு?" என்றிருக்க வேண்டும். அல்லது "என் குழந்தையின் கல்வி பொது இடத்தில், தனி இடத்தில் அல்லது வீட்டின் அடிப்படையிலான அமைப்பில் செய்யப்பட வேண்டுமா?" இந்த தலைப்பில் பல கருத்துக்கள் உள்ளன, சில மிகவும் வலுவாகவும் முடிவில்லாமலும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் விவாதிக்கப்படுகின்றன.

வேதாகமத்தின் முன்னோக்கைத் தேடத் தொடங்கும்போது, உபாகமம் 6:5-8-ல் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பது பற்றிய உறுதியான பழைய ஏற்பாட்டுப் பகுதிக்கு வருகிறோம்: "நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.” எபிரேய வரலாறு, தகப்பன் தனது பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், நல்வாழ்வுக்காகவும் கர்த்தருடைய வழிகளையும் வார்த்தைகளையும் போதிப்பதில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த பத்தியில் உள்ள செய்தி புதிய ஏற்பாட்டில் மீண்டும் மீண்டும் வருகிறது, அங்கு பவுல் பெற்றோருக்கு குழந்தைகளை வளர்க்க அறிவுறுத்துகிறார். "கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக" (எபேசியர் 6:4), நீதிமொழிகள் 22:6 மேலும் நமக்குச் சொல்கிறது, "பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்." பயிற்சி முறையான கல்வி மட்டுமல்ல, ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் கொடுக்கும் முதல் அறிவுரைகள், அதாவது அவர்களது ஆரம்பக் கல்வி ஆகியவை அடங்கும். இந்தப் பயிற்சியானது குழந்தையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அடித்தளத்தின் மீது உறுதியாக வளர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முறையான கல்வியின் பாடத்திற்கு நாம் செல்லும்போது, கவனிக்கப்பட வேண்டிய தவறான புரிதல்கள் உள்ளன. முதலாவதாக, பலர் வலியுறுத்துவது போல் பெற்றோர்கள் மட்டுமே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று தேவன் சொல்லவில்லை, இரண்டாவதாக, பொதுக் கல்வி மோசமானது என்று அவர் சொல்லவில்லை, மேலும் நம் குழந்தைகளை கிறிஸ்தவ பள்ளிகளிலோ அல்லது வீட்டுப் பள்ளிகளிலோ மட்டுமே படிக்க வைக்கிறோம். முடிவான பொறுப்பு என்பது வேதம் முழுவதும் காணப்படும் பிரமாணம். வீட்டிற்கு வெளியே கல்வியைத் தவிர்க்கும்படி தேவன் ஒருபோதும் பெற்றோரை வழிநடத்துவதில்லை. எனவே, முறையான கல்வியின் ஒரே “வேதாகம” முறை வீட்டுப் பள்ளிகள் அல்லது கிறிஸ்தவ பள்ளிகள் என்று சொல்வது தேவனுடைய வார்த்தையுடன் சேர்க்கும், மேலும் நம்முடைய சொந்த கருத்துக்களை சரிபார்க்க வேதாகமத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறோம் என்பதாகும். இதற்கு நேர்மாறானது தான் உண்மை: நாம் நம்முடைய கருத்துக்களை வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க விரும்புகிறோம். "பயிற்சி பெற்ற" ஆசிரியர்கள் மட்டுமே நம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முடியும் என்ற வாதத்தையும் தவிர்க்க விரும்புகிறோம். மீண்டும், பிரச்சினை முடிவான பொறுப்பு, இது பெற்றோருக்கு சொந்தமானது.

வேதாகமத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், நம் குழந்தைகள் எந்த வகையான பொதுக் கல்வியைப் பெறுகிறார்கள் என்பதல்ல, ஆனால் அந்தத் தகவலை எந்த முன்னுதாரணத்தின் மூலம் வடிகட்ட வேண்டும் என்பதுதான். எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டுப் பள்ளியில் "கிறிஸ்தவ" கல்வி வழங்கப்படலாம், ஆனால் அவர் வாழ்க்கையில் தோல்வியடைகிறார், ஏனெனில் அவன் அல்லது அவள் வேதத்தின் தேவனை உண்மையாக அறியவில்லை மற்றும் வேதக் கோட்பாடுகளை உண்மையாக புரிந்து கொள்ளவில்லை. அதேபோல், பொதுவில் கல்வி கற்கும் ஒரு குழந்தை, உலக ஞானத்தின் தவறுகளை புரிந்துகொண்டு வளர, அதன் தோல்வியை தேவனுடைய வார்த்தையின் மூலம் புரிந்து கொள்ள முடியும், இது அவர்களுக்கு வீட்டில் விடாமுயற்சியுடன் கற்பிக்கப்படுகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் தகவல் வேதாகமக் கண்ணாடியின் மூலம் பிரிக்கப்படுகிறது, ஆனால் உண்மையான ஆவிக்குரிய புரிதல் பிந்தையவற்றில் மட்டுமே உள்ளது. இதேபோல், ஒரு மாணவர் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படிக்கலாம் ஆனால் ஒரு நெருக்கமான, தனிப்பட்ட உறவில் தேவனைப் புரிந்துகொண்டு வளர முடியாது. இறுதியில், உண்மையான ஆவிக்குரியக் கல்வியை நிறைவேற்றும் வகையில் குழந்தையை வடிவமைக்கும் பொறுப்புடையவர்கள் பெற்றோர்களே.

எபிரெயர் 10:25-ல், கடவுள் கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிடுகிறார், “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” கிறிஸ்துவின் சரீரம் குழந்தைகளின் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாகும், ஆவிக்குரிய காரியங்களில் குழந்தைகளை வளர்ப்பதற்கும் கல்வி கற்பதற்கும் பெற்றோருக்கு உதவுகிறது. குடும்ப அமைப்புக்கு வெளியே ஏதாவது ஒன்றை வெளிப்படுத்துவது—இந்த விஷயத்தில், திருச்சபை மற்றும் ஞாயிறு பள்ளியிலிருந்து நல்ல வேதாகமப் போதனை—நல்லது மற்றும் அவசியமானது.

எனவே, நாம் எந்த வகையான கற்றல் முறையைத் தேர்ந்தெடுத்தாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆஆவிக்குரியக் கல்விக்கு இறுதியில் பொறுப்பாவார்கள். ஒரு கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர் தவறாக இருக்கலாம், ஒரு போதகர் மற்றும் ஞாயிறு பள்ளி ஆசிரியர் தவறாக இருக்கலாம், மேலும் எந்தவொரு குறிப்பிட்ட இறையியல் புள்ளியிலும் பெற்றோர்கள் தவறாக இருக்கலாம். எனவே, நம் குழந்தைகளுக்கு ஆவிக்குரிய காரியங்களைக் கற்பிக்கும்போது, முழுமையான சத்தியத்தின் ஒரே ஆதாரம் வேதம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் (2 தீமோத்தேயு 3:16). எனவே, ஒருவேளை நாம் நம் குழந்தைகளுக்கு கற்பிக்கக்கூடிய மிக முக்கியமான பாடம், பெரோயா பட்டணத்துக்கு விசுவாசிகளின் முன்மாதிரியைப் பின்பற்றுவதாகும்—எந்த மூலத்திலிருந்தும்—தேவனுடைய வார்த்தைக்கு எதிராக உள்ளதா என்று எல்லாவற்றையும் சோதித்துப் பார்ப்பதாகும் (1 தெசலோனிக்கேயர் 5:21).

Englishமுகப்பு பக்கம்

ஒரு குழந்தைக்கு கிறிஸ்தவக் கல்வியை வழங்குவது முக்கியமானதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries