settings icon
share icon
கேள்வி

நடனம் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? கிறிஸ்தவர்கள் நடனமாட வேண்டுமா?

பதில்


நடனம் பற்றி வேதாகமம் எந்தவகையான குறிப்பிட்ட வழிமுறைகளையும் கொடுக்கவில்லை. அதேவேளையில் நல்ல மற்றும் கெட்ட நடனத்தின் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்டுவதும், பின்னர் நடனத் தரங்களை உருவாக்க சில வேதாகமக் கொள்கைகளைக் குறிப்பிடுவதும் உதவியாக இருக்கும். யாத்திராகமம் 32:6, 19-25—இது இஸ்ரவேலின் வரலாற்றில் ஏமாற்றமளிக்கும் ஒரு வேதப்பகுதி. மோசே மலைமீது ஏறிச்சென்று தேவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இஸ்ரவேலர்கள் ஒரு சிலையை உருவாக்கினார்கள். சிலை வழிபாட்டின் போது, அவர்கள் நடனமாடத் தொடங்கினர். இது "களியாட்டம்" (வசனம் 6) மற்றும் "கட்டுப்பாடு இல்லாமல்" (வசனம் 25, சில மொழிபெயர்ப்புகளில் "நிர்வாண ஆட்டம்" என்று கூறுகிறது) முடிந்தது. இந்த நிகழ்வில், நடனம் மிகவும் பாவமான செயலுக்கு வழிவகுத்தது. யாத்திராகமம் 15:20ல், செங்கடலில் தேவனுடைய வல்லமை கொண்டு வந்த வெற்றியைக் கொண்டாட மிரியாம் நடனமாடிக்கொண்டிருந்தாள். 2 சாமுவேல் 6:12-16-ல் உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டதைக் கொண்டாட தாவீது "கர்த்தருக்கு முன்பாக நடனமாடினான்".

பாவமாக கருதப்படாத நடனத்தின் ஒவ்வொரு நிகழ்வும் தேவனை நமஸ்கரித்து வணங்கப்பட்டது அல்லது துதிக்கப்பட்டது. நடனம் ஆடுவதை கருத்தில் கொள்ள இன்னும் சில கோட்பாடுகள் இங்கே உள்ளன: பிரசங்கி 3:4—நடனம்பண்ண ஒரு காலமுண்டு (மற்றும் நடனம்பண்ணாமல் இருக்க ஒரு காலமுண்டு). சங்கீதம் 149:3; 150:4—இந்த இரு பகுதிகளும் நடனத்தின் மூலம் தேவனைத் துதிக்கலாம் அல்லது வணங்கலாம் என்று குறிப்பிடுகின்றன. 1 கொரிந்தியர் 6:19-20—நம் சரீரங்கள் தேவனுடையது, அவை பரிசுத்த ஆவியின் ஆலயம். எனவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவருக்கு கனத்தைக் கொண்டுவர வேண்டும்.

உங்களையோ அல்லது உங்கள் சரீரத்தையோ கவனத்தில் கொள்ள நடனம் ஆடுவது பாவம். 1 கொரிந்தியர் 7:1-3 இல், பவுல் கூறுகிறார், "ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது" (NASB, KJV). ஆண்கள் மிகவும் வலுவான பாலியல் உந்துதலைக் கொண்டுள்ளனர் என்பதை பவுல் ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக, திருமணத்திற்கு வெளியே ஆணும் பெண்ணும் ஜோடியாக நடனமாடும் பல பாணிகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும், குறிப்பாக ஆண்களுக்கு. ஆனால் "பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு (அதாவது ஓடுபாதையில் ஓடுவதுபோல)" (2 தீமோத்தேயு 2:22) என்று வேதம் எச்சரிக்கிறது. நம்மிடமோ அல்லது மற்றவர்களிடமோ பாவ ஆசைகளைத் தூண்டும் எந்த நடனமும் பாவமாகும். மத்தேயு 18:6—மற்றொருவரை பாவத்தில் இடறலடையச் செய்யும் காரியத்தைச் செய்வது முற்றிலும் மன்னிக்க முடியாதது. வேறொருவருக்கு இச்சையை ஏற்படுத்தும் வகையில் நடனமாடுவது இந்த வழிகாட்டுதலின் கீழ் வரும். 1 தெசலோனிக்கேயர் 5:22—நடனம் ஆடும் சூழ்நிலை ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்று நமக்குத் தெரியாவிட்டால், இது ஒரு பயனுள்ள கோட்பாடு: "எல்லா வகையான தீமைகளையும் தவிர்க்கவேண்டும்." அது பாவமாக தோன்றினால் கூட, நாம் அதை செய்ய வேண்டாம்.

முடிவில், தங்கள் வாழ்க்கையாலும் சரீரங்களாலும் தேவனை மகிமைப்படுத்த விரும்பும் விசுவாசிகளுக்கு பொருத்தமற்ற நடனங்கள் நிறைய உள்ளன. இருப்பினும், மற்றவர்களை சோதிக்காத ஆசையைத் தூண்டாத, நம்மை நாமே சோதிக்காத வகையில், தேவனுக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் நாம் நடனமாட முடியும் என்பதை வேதாகமம் ஒப்புக்கொள்கிறது.

Englishமுகப்பு பக்கம்

நடனம் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? கிறிஸ்தவர்கள் நடனமாட வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries