கிறிஸ்தவ சிலுவைப் போர்கள் யாவை?


கேள்வி: கிறிஸ்தவ சிலுவைப் போர்கள் யாவை?

பதில்:
சிலுவைப் போர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிரான அடிக்கடி உண்டாகிற விவாதங்களை வழங்கியுள்ளன. சில இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்கள் பயங்கரவாத தாக்குதல்கள் யாவும் சிலுவைப் போரில் கிறிஸ்தவர்கள் செய்ததற்கு பழிவாங்குவதாகக் கூறுகின்றனர். அப்படியானால், சிலுவைப் போர்கள் எவை, அவை ஏன் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு இவ்வளவு பெரிய பிரச்சினையாகக் கருதப்படுகின்றன?

முதலாவதாக, சிலுவைப் போர்களை "கிறிஸ்தவ சிலுவைப் போர்கள்" என்று குறிப்பிடக்கூடாது. சிலுவைப் போரில் ஈடுபட்ட பெரும்பாலான மக்கள் அவர்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் அவர்களில் பெரும்பாலோனோர் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல. சிலுவைப்போரின் பல செயல்பாடுகளால் கிறிஸ்துவின் பெயர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது, தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவதூறு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, சிலுவைப் போர்கள் ஏறக்குறைய கி.பி. 1095 முதல் 1230 வரையிலுள்ள காலக்கட்டத்தில் நடந்தன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் என்று கூறப்படும் வேதாகமமற்ற நடவடிக்கைகள் இன்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா?

மூன்றாவதாக, இது போதுமான சாக்குப்போக்கு அல்ல, அதாவது கிறிஸ்தவ மதம் ஒரு வன்முறையுள்ள கடந்த காலத்தைக் கொண்ட ஒரேஒரு மதம் அல்ல. உண்மையில், சிலுவைப் போர்கள் முஸ்லீம் படையெடுப்புகளுக்கு ஒரு காலத்தில் முதன்மையாக கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமாக இருந்தன. ஏறக்குறைய கி.பி. 200 முதல் 900 வரை, இஸ்ரவேல், ஜோர்டான், எகிப்து, சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் முதன்மையாக கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர். இஸ்லாம் சக்திவாய்ந்தவுடன், முஸ்லிம்கள் இந்த நிலங்களை ஆக்கிரமித்து, அங்கிருந்த கிறிஸ்தவர்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர், அடிமைப்படுத்தப்பட்டனர், நாடுகடத்தப்பட்டனர், மேலும் அந்த நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களைக் கொலை செய்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் ஐரோப்பாவிலிருந்து வந்த “கிறிஸ்தவ” மன்னர்களும் / பேரரசர்களும் முஸ்லிம்கள் கைப்பற்றிய நிலத்தை மீட்க சிலுவைப் போருக்கு உத்தரவிட்டனர். சில கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் சிலுவைப் போரில் எடுத்த நடவடிக்கைகள் இன்னும் மோசமானவைகளாக இருக்கின்றன. நிலங்களை கைப்பற்றுவதற்கும், பொதுமக்களைக் கொல்வதற்கும், இயேசு கிறிஸ்துவின் பெயரில் நகரங்களை அழிப்பதற்கும் வேதாகமம் நியாயம் கூறவில்லை. அதே சமயம், இந்த விஷயங்களில் குற்றமற்ற நிலையில் இருந்து பேசக்கூடிய ஒரு மதம் இஸ்லாம் அல்ல.

சுருக்கமாகச் சொல்வதானால், சிலுவைப் போர்கள் கி.பி. 11 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட மத்திய கிழக்கில் உள்ள நிலத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் ஆகும். சிலுவைப் போர்கள் மிருகத்தனமான மற்றும் தீயவையாகும். பலர் கிறிஸ்தவ மதத்தை "மதிக்க" கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் அதற்கு மறுத்தால், அவர்கள் கொல்லப்பட்டனர். கிறிஸ்துவின் பெயரால் போர் மற்றும் வன்முறை மூலம் ஒரு நிலத்தை கைப்பற்றும் யோசனை முற்றிலும் வேதாகம முறையற்றது. சிலுவைப் போரில் நடந்த பல நடவடிக்கைகள் கிறிஸ்தவ விசுவாசம் குறிக்கும் எல்லாவற்றிற்கும் முற்றிலும் முரணானவைகளாகும்.

சிலுவைப் போரின் விளைவாக, கிறிஸ்தவ நம்பிக்கையானது நாத்திகர்கள், அஞ்ஞானிகள், சந்தேகவாதிகள் மற்றும் பிற மதத்தினரால் தாக்கப்படும்போது நாம் எவ்வாறு அவர்களுக்குப் பதிலளிக்க முடியும்? பின்வரும் வழிகளில் நாம் பதிலளிக்க முடியும்: 1) 900 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க விரும்புகிறீர்களா? 2) உங்கள் நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அனைவரின் செயல்களுக்கும் நீங்கள் பொறுப்பேற்க விரும்புகிறீர்களா? சிலுவைப் போருக்கு கிறிஸ்தவத்திலுள்ள அனைவரையும் குறை கூற முயற்சிப்பது இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு அனைத்து முஸ்லிம்களையும் குற்றம் சாட்டுவதற்கு ஒப்பானது.

English


முகப்பு பக்கம்
கிறிஸ்தவ சிலுவைப் போர்கள் யாவை?

எப்படி கண்டுபிடிக்க ...

கடவுளோடு நித்தியத்தை செலவிடுங்கள்கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுங்கள்