settings icon
share icon
கேள்வி

ஒரு கிறிஸ்தவர் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் அல்லது பிற மனநல மருந்துகளை எடுக்க வேண்டுமா?

பதில்


பீதி தாக்குதல்கள், கவலைக் கோளாறுகள், பயங்கள் மற்றும் மனச்சோர்வு போன்றவை மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. ஒரு நபரின் மனதிற்குள் மேற்கூறிய வியாதிகள் பல முறை உருவாகின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் நம்பினாலும், ஒரு வேதியியல் ஏற்றத்தாழ்வு காரணமாக இருக்கும் நேரங்கள் உள்ளன - அல்லது மனதின் உள்ளான நிலையில் தொடங்கிய ஒரு பிரச்சினை ஒரு வேதியியல் ஏற்றத்தாழ்வுக்கு பங்களித்த காலங்களும் இப்போது சிக்கலை நிலைநிறுத்துகின்றதாய் இருக்கின்றன. இது இப்படியானால், ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ள உதவும் மருந்துகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன, இது உளவியல் நோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கிறது. இது பாவமா? இல்லை. குணப்படுத்தும் செயல்பாட்டில் தேவன் அடிக்கடி பயன்படுத்தும் மருத்துவத்தைப் பற்றிய அறிவில் மனிதனை வளரவே தேவன் அனுமதித்துள்ளார். மனிதனை குணமடையச் செய்ய தேவனுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட/கண்டுபிடிக்கப்பட்ட மருந்து தேவையா? நிச்சயமாக இல்லை! ஆனால் மருத்துவ நடைமுறையை பெற்று முன்னேற அனுமதிப்பதை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார், மேலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாததற்கு வேதாகமக் காரணமும் இல்லை.

இருப்பினும், குணப்படுத்தும் நோக்கங்களுக்காக மருந்தைப் பயன்படுத்துவதற்கும், அன்றாட வாழ்க்கைக்கு தொடர்ந்து மருத்துவத்தை நம்புவதற்கும் இடையே ஒரு நல்ல வித்தியாசக்கோடு உள்ளது. தேவனை ஒரு சிறந்த மருத்துவராக நாம் அங்கீகரிக்க வேண்டும், உண்மையிலேயே குணமடையச் செய்ய வல்லவர் அவர் மட்டுமே என்பதை அறிந்து கொள்ள வேண்டும் (யோவான் 4:14). நம்முடைய குணப்படுத்துதலுக்காக நாம் முதன்மையாக தேவனை மட்டுமே நோக்கிப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பீதி தாக்குதலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து, பாதிக்கப்பட்டவருக்கு பயத்தின் மூல காரணத்தைக் கையாள அனுமதிக்கும் அளவிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் கட்டுப்பாட்டைக் கொடுக்க இதைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், பல பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நோய்க்கான உண்மையான காரணத்தைக் கையாள்வதைத் தவிர்ப்பதற்காக மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்; இது பொறுப்பை மறுப்பது, தேவனுடைய குணப்படுத்துதலை மறுப்பது மற்றும் மற்றவர்களுக்கு மன்னிப்புக்கான சுதந்திரத்தை மறுப்பது அல்லது வியாதிக்கு பங்களிக்கும் சில கடந்த கால நிகழ்வுகளை மூடுவது ஆகும். அப்படியானால், இது சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது பாவமாக மாறும்.

அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் மருந்தை உட்கொள்வதன் மூலம், தேவனுடைய வார்த்தையையும் ஒருவரின் இதயத்திலும் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான புத்திசாலித்தனமான ஆலோசனையையும் நம்புவதன் மூலம், பொதுவாக மருந்தின் தேவை குறைந்துவிடும். [அறிகுறிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, உடல்களுக்கு நீண்டகாலமாக மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படும் சில நபர்கள் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இருமுனைக் கோளாறு மற்றும் மனப்பித்து (ஸ்கிசோஃப்ரினியா) போன்ற வேறு சில உளவியல் கோளாறுகளுக்கு நீரிழிவு நோய்க்கான இன்சுலின் போன்ற நீண்டகால மருந்தின் பயன்பாடு தேவைப்படுகிறது.] கிறிஸ்துவில் விசுவாசியின் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் தேவன் இருதயத்திலும் மனதிலும் உள்ள சிக்கலான வியாதியை ஏற்படுத்துகிற பகுதிகளைக் குணப்படுத்துகிறார். உதாரணமாக, பதட்டத்தை கையாளும் போது, பயம் மற்றும் ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அதன் இடம் பற்றி தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறது என்பதை நாம் பார்க்கலாம். பின்வரும் வேதவசனங்களைப் படிப்பதும் அவற்றைப் பற்றி தியானிப்பதும் ஒரு தீர்வாக இருக்கும், ஏனெனில் அவை நம்பிக்கையைத் தருகின்றன, மேலும் தேவனுடைய பிள்ளையாக இருப்பதன் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன: நீதிமொழிகள் 29:25; மத்தேயு 6:34; யோவான் 8:32; ரோமர் 8:28–39; 12:1-2; 1 கொரிந்தியர் 10:13; 2 கொரிந்தியர் 10:5; பிலிப்பியர் 4:4–9; கொலோசெயர் 3:1-2; 2 தீமோத்தேயு 1:6–8; எபிரேயர் 13:5–6; யாக்கோபு 1:2–4; 1 பேதுரு 5:7; 2 பேதுரு 1:3–4; 1 யோவான் 1:9; 4:18-19.

கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் மற்றும் அற்புதமாக குணப்படுத்த முடியும். அதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். தேவன் மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் மூலமாகவும் குணமாக்குகிறார். அதற்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். தேவன் எந்த திசையில் சென்றாலும், நம்முடைய இறுதி நம்பிக்கை அவர்மீது மட்டுமே இருக்க வேண்டும் (மத்தேயு 9:22).

Englishமுகப்பு பக்கம்

ஒரு கிறிஸ்தவர் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் அல்லது பிற மனநல மருந்துகளை எடுக்க வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries