settings icon
share icon
கேள்வி

கால்வனிசம் மற்றும் அர்மீனியனிசம்—எது சரியான கருத்து?

பதில்


கால்வனிசம் மற்றும் அர்மீனியனிசம் இரண்டும் இறையியல் அமைப்புகளாய் இருக்கிறது். இவை இரட்சிப்பின் விஷயத்தில் தேவனின் ஆலுகை தன்மை மற்றும் மனிதனுடைய பொறுப்பபு இடையே உள்ள் உறவை விவரிக்க முயற்ச்சி செய்கின்றன. கால்வனிசம், பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த இறையியலாளர் “ஜான் கால்வின்" பெயரில் இருந்து வந்தது. அர்மீனியனிசம் டச்சு இறையியலாளர் “ஜாகபஸ் அர்மனியஸ்" பெயரில் இருந்து வந்தது. இவை இரண்டும் ஐந்து குறிப்புகளாக சுருக்கலாம். கால்வனிசம் சொல்லுகிறது, மனிதன் முழுமையாகவே துன்மார்கனாய், ஆனால் அர்மீனியனிசம் மனிதன் முழுமையாக துன்மார்கன் அல்ல என்று சொல்லுகிறது. முழுமையான துன்மார்கம் என்றால், மனிதனுடைய எல்லா அம்சங்களும் பாவத்தினால் கரைபடுத்தப்பட்டுள்ளது; ஆகையால், மனிதர்கள் தாமாகவே தேவனிடம் வர முடியாது என்று சொல்லுகிறது. அர்மீனியனிசம் கருத்தின்படி, மனிதர்கள் பாவத்தால் கரைபட்டவர்கள், ஆனால் அவர்கள் தானாக தேவன் மேல் விசுவாசம் வைக்க முடியாத அளவிற்கு அல்ல. தெரிந்து கொள்ளுதல் நிபந்தனையற்றது என்று கேல்வனிசம் நம்புகிறது, ஆனால் தெரிந்து கொள்ளுதல் நிபந்தனைக்கு உட்பட்டது என்று அர்மீனியனிசம் நம்புகிறது. நிபந்தனையற்ற தெரிந்து கொள்ளுதல் என்னவென்றால், தேவன் மனிதர்களை தமது சித்தத்தின்படி இரட்சிப்புக்கென்று தெரிந்துகொள்ளுகிறார், அவர்களின் தகுதியை பொறுத்து அல்ல. நிபந்தனையுள்ள தெரிந்து கொள்ளுதல் சொல்லுகிறது என்னவென்றால், யாரெல்லாம் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிப்படைவார்கள் என்று தேவன் முன்னறிவார், அதன்படி அவர்களை தெரிந்து கொள்கிறார் என்பதே.

பாவநிவாரணம் வரையறுக்கப்பட்டது என்று கால்வனிசம் கறுதுகிறது, அது வரையறுக்கப்படாதது என்று அர்மீனியனிசம் கூறுகிறது. இவை ஐந்து குறிப்புகளில், இதுவே மிகவும் சர்ச்சைகுரியது. வரையறுக்கப்பட்ட பாவநிவாரணம், இயேசு தெரிந்துகொண்டவர்களுக்காக மாத்திரம் மரித்தார் என்று விசுவாசிக்கின்றது. வரையறுக்கப்படாத பாவநிவாரணத்தின்படி, இயேசு எல்லாருக்காகவும் மரித்தார், ஆனால் அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு மாத்திரமே அவருடைய மரணம் பயன் உள்ளதாய் இருக்கும் என்று சொல்லுகிறது.

தேவனுடைய கிருபையை எதிர்கமுடியாதது என்று கேல்வனிசம் சொல்லுகிறது. அர்மீனியனிசம் சொல்லுகிறது என்னவென்றால், ஒரு மனிதனால் தேவனுடைய கிருபையை எதிர்க்க முடியும். எதிர்க்கமுடியாத கிருபை என்றால், தேவன் ஒரு மனிதனை இரட்சிப்புக்கு அழைக்கும்போது அவன் அதை தவிர்க்காமல் வருவான். எதிர்க்க முடிகிற கிருபை குறிக்கிறது, தேவன் எல்லோரையும் இரட்சிப்புக்கு அழைக்கிறார், ஆனால் அநேகர் அவரின் அழைப்பை எதிர்த்து தள்ளிவிடுகின்றனர்.

பரிசுத்தவான்கள் தொடர்ந்து நிலைநிற்பார்கள் என்று கேல்வனிசம் நம்புகிறது, ஆனால் அர்மீனியனிசம் நிபந்தனையுள்ள இரட்சிப்பை நம்பிகிறது. பரிசுத்தவான்கள் நிலைநிற்பது என்றால், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதன் விசுவாசத்தில் நிலைநிற்பான். அவன் நிரந்தரமாக கிறிஸ்துவை மறுதலிக்கவோ, அவரை விட்டு விலகவோ மாட்டான். நிபந்தனையுள்ள இரட்சிப்பின் கருத்து என்னவென்றால், ஒரு விசுவாசி அவளுடைய/அவனுடைய சுய விருப்பத்தின்படி கிறிஸ்துவை விட்டு விலகவும், அதினால் இரட்சிப்பை இழக்கவும் முடியும் என்பதே.

ஆகையால் இந்த கேல்வனிசம் மற்றும் அர்மீனியனிசம் விவாதத்தில் யார் சரியானவர்கள்? கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள வேறுபாடுகளில் கேல்வனிசம் மற்றும் அர்மீனியனிசத்தில் எல்லாவகையான கருத்துகளும் கலந்துள்ளன. இந்த ஐந்து குறிப்புகளையும் கடைபிடிக்கின்ற கேல்வனிசர்களும் மற்றும் அர்மீனியர்களும் உண்டு, மூன்று குறிப்புகளையும் கடைபிடிக்கின்ற கேல்வனிசர்களும் மற்றும் இரண்டு குறிப்புகளையும் கடைபிடிக்கின்ற அர்மீனியர்களும் உண்டு. அநேக விசுவாசிகள் இவ்விரண்டு கருத்துகளிலும் இருந்து கலந்தெடுத்து முடிவிற்கு வருகின்றனர். இறுதியாக நமது கருத்து என்னவென்றால், இவ்விரண்டும் விவரிக்கமுடியாத விஷயங்களை விவரிக்கும் முயற்ச்சியில் தோல்வி அடைகின்றன என்பதே. மனிதர்களால் இப்படிபட்ட கருத்தை முழுமையாக புரிந்து கொள்ளமுடியாத. ஆம், தேவன் சகலத்தையும் ஆளுகிறவர் மற்றும் அவருக்கு எல்லாம் தெரியும். ஆம், மனிதர்கள் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட தீர்மானம் எடுக்க அழைக்கப்படுகின்றனர். இவ்விரண்டும் நமக்கு முரண்பாடாக தோன்றலாம், ஆனால் தேவனுக்கு இது நன்றாக தெரிந்தவை.

English



முகப்பு பக்கம்

கால்வனிசம் மற்றும் அர்மீனியனிசம்—எது சரியான கருத்து?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries