பிலேமோன் புத்தகம்


கேள்வி: பிலேமோன் புத்தகம்

பதில்:
எழுத்தாளர்: பிலேமோன் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் அப்போஸ்தலனாகிய பவுல் (பிலேமோன் 1:1).

எழுதப்பட்ட காலம்: பிலேமோன் புத்தகம் ஏறக்குறைய கி.பி. 60-ல் எழுதப்பட்டது.

எழுதப்பட்டதன் நோக்கம்: அப்போஸ்தலனாகிய பவுல் பிலேமோனுக்கு எழுதிய நிருபம் பவுலின் மற்ற நிருபங்களோடு ஒப்பிடும்போது குறுகியதாகும், மேலும் இந்த நிருபம் அடிமைத்தனத்தின் நடைமுறையைப் பற்றியது ஆகும். இந்த நிருபத்தை எழுதும் நேரத்தில் பவுல் ரோமாப்புரியில் சிறையில் இருந்ததாக அறிவுறுத்துகிறது. பிலேமோன் ஒரு அடிமையின் உரிமையாளராக இருந்தார், மேலும் அவர் தனது வீட்டில் ஒரு திருச்சபையின் கூடி வருதலையும் கொண்டிருந்தார். எபேசுவில் பவுல் ஊழியம் செய்த காலத்தில், பிலேமோன் எபேசு நகரத்திற்குச் சென்று, பவுலின் பிரசங்கத்தைக் கேட்டு, அதன் மூலமாக ஒரு கிறிஸ்தவராக மாறியிருக்கலாம். ஒநேசிமு என்கிற அடிமை தன் எஜமானனான பிலேமோனைக் கொள்ளையடித்து ஓடிப்போனபோது, பிடிக்கப்பட்டு ரோமாபுரிக்கு கொண்டுசெல்லப்பட்டு, இறுதியில் சிறையில் இருக்கும் பவுலுக்கும் அறிமுகமாகிறார். ஒநேசிமு இன்னும் தனது எஜமானனாகிய பிலேமோனின் சொத்தாக இருக்கிறார், பவுல் அவரை தன் எஜமானனிடம் திரும்புவதற்கான வழியை மென்மையாக்க இந்த நிருபத்தை எழுதினார். பவுல் ஒநேசிமுவினிடம் கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியம் அளித்ததன் மூலம், ஒநேசிமு சிறையிலிருக்கும் போது ஒரு கிறிஸ்தவராக மாறுகிறார் (பிலேமோன் 10), பிலேமோன் ஒநேசிமசை கிறிஸ்துவுக்குள் வெறும் ஒரு அடிமையாக அல்லாமல் ஒரு சகோதரனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்பினார்.

திறவுகோல் வசனங்கள்: பிலேமோன் 6, "உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்."

பிலேமோன் 16, "எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்கு சரீரத்தின்படியேயும் கர்த்தருக்கும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்!"

பிலேமோன் 18, "அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்."

சுருக்கமான திரட்டு: அடிமைகளின் உரிமையாளர்களுக்கு தங்கள் அடிமைகளின்மேல் ஒரு பொறுப்பு இருப்பதாக பவுல் எச்சரித்தார், மேலும் அடிமைகள் தேவனுக்குப் பயப்பட வேண்டிய பொறுப்புள்ள தார்மீக மனிதர்களாகவும் இருக்கவேண்டும் என்பதையும் சுட்டிக் காண்பிக்கிறார். பிலேமோனில், பவுல் அடிமைத்தனத்தை கண்டிக்கவில்லை, ஆனால் மாறாக அவர் ஒநேசிமுவை ஒரு அடிமை என்பதற்குப் பதிலாக ஒரு கிறிஸ்தவ சகோதரனாக முன்வைக்கிறார். ஒரு உரிமையாளர் தனது அடிமையை சகோதரர் என்று குறிப்பிடும்போது, அடிமை என்பது சட்டபூர்வமான தலைப்பு என்ற அர்த்தமற்ற நிலையை அடைகிறது. ஆரம்பகால திருச்சபையானது அடிமைத்தனத்தை நேரடியாகத் தாக்கவில்லை, ஆனால் அது உரிமையாளருக்கும் அடிமைக்கும் இடையிலான புதிய உறவுக்கு அடித்தளம் அமைத்தது. பிலேமோன் மற்றும் ஒநேசிமு ஆகிய இருவரையும் கிறிஸ்தவ அன்போடு ஒன்றிணைக்க பவுல் முயன்றார், இதனால் விடுதலையானது மிகவும் அவசியமாயிற்று. சுவிசேஷத்தின் வெளிச்சத்தை வெளிப்படுத்திய பின்னரே அடிமைத்தனத்தின் நிறுவனம் மரித்துப்போக முடியும்.

இணைப்புகள்: புதிய ஏற்பாட்டில் வேறு எங்கும் நியாயப்பிரமாண சட்டத்திற்கும் கிருபைக்குமுள்ள வேறுபாடு இவ்வளவு மிகவும் அழகாக சித்தரிக்கப்படவில்லை. ரோமர்களின் சட்டம் மற்றும் பழைய ஏற்பாட்டின் மோசேயினுடைய நியாயப்பிரமாண சட்டம் ஆகிய இரண்டும் பிலேமோனுக்கு சொந்தமான சொத்து என்று கருதப்பட்ட ஓடிப்போன அடிமையை தண்டிக்கும் உரிமையை வழங்கின. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக கிருபையினுடைய உடன்படிக்கையின் எஜமானன் மற்றும் அடிமை ஆகிய இருவரையும் கிறிஸ்துவின் சரீரத்தில் சமம் என்கிற அடிப்படையில் அன்பில் கூட்டுறவு ஐக்கியம் கொள்ள அனுமதித்தது.

நடைமுறை பயன்பாடு: முதலாளிகள், அரசியல் தலைவர்கள், தலைமை நிர்வாகத்தின் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்கள் கிறிஸ்தவ ஊழியர்கள், சக ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கிறிஸ்துவின் சரீரத்தினுடைய உறுப்பினர்களாகக் கருதி பவுலின் போதனையின் உணர்வைப் பின்பற்றலாம். நவீன சமுதாயத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் உதவியாளர்களை தங்கள் லட்சியங்களை அடைய உதவும் ஒரு படியாக பார்க்கக்கூடாது, ஆனால் அதற்கு மாறாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளாக இரக்கமிக்க நிலையில் நடத்தப்பட வேண்டும். கூடுதலாக, எல்லா கிறிஸ்தவ தலைவர்களும், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களுக்காக வேலை செய்பவர்கள் நடத்தப்பட வேண்டிய நிலையை அளிக்க தேவனே பொறுப்பேற்கிறார் என்பதை அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் செய்த செயல்களுக்கு அவர்கள் இறுதியில் தேவனுக்கு பதிலளிக்க வேண்டும் (கொலோசெயர் 4:1).

English


முகப்பு பக்கம்
பிலேமோன் புத்தகம்

எப்படி கண்டுபிடிக்க ...

கடவுளோடு நித்தியத்தை செலவிடுங்கள்கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுங்கள்