settings icon
share icon

யாக்கோபின் நிருபம்

எழுத்தாளர்: இந்த நிருபத்தின் (கடிதத்தின்) எழுத்தாளர் யாக்கோபு, இவர் நேர்மையுள்ள யாக்கோபு என்றும் அழைக்கப்படுகிறார், இவர் இயேசு கிறிஸ்துவின் சகோதரர் என்றும் கருதப்படுகிறார் (மத்தேயு 13:55; மாற்கு 6:3). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வரை யாக்கோபு ஒரு விசுவாசி அல்ல (யோவான் 7: 3-5; அப்போஸ்தலர் 1:14; 1 கொரிந்தியர் 15:7; கலாத்தியர் 1:19). அவர் எருசலேமில் உண்டாயிருந்த திருச்சபையின் தலைவராக இருந்தார், இவர் முதலில் திருச்சபையின் தூணாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறார் (கலாத்தியர் 2:9).

எழுதப்பட்ட காலம்: யாக்கோபின் புத்தகம் புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான புத்தகமாகும், அதாவது இது கி.பி. 45-ல் எழுதப்பட்டதாகும், குறிப்பாக எருசலேமின் முதல் ஆலோசனை சங்கத்தின் கூடுகைக்கு முன்பு அதாவது கி.பி. 50-ற்கு முன்பாகவே எழுதப்பட்டதாகும். வரலாற்றாசிரியர் ஜோசிப்பஸின் கூற்றுப்படி, யாக்கோபு ஏறக்குறைய கி.பி. 62-ல் இரத்தச் சாட்சியாக தனது மரணத்தைத் தழுவினார்.

எழுதப்பட்டதன் நோக்கம்: விசுவாசத்தைப் பற்றிய பவுலினுடைய போதனையின் மிகைப்படுத்தப்பட்ட விளக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்த நிருபம் எழுதப்பட்டதாக சிலர் நினைக்கிறார்கள். ஆண்டினோமியனிசம் என்று அழைக்கப்படும் இந்த தீவிர பார்வை, கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் ஒருவர் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண சட்டம், அனைத்து பாரம்பரிய பழக்கவழக்கங்கள், அனைத்து மதச்சார்பற்ற சட்டங்கள் மற்றும் ஒரு சமூகத்தின் அனைத்து ஒழுக்கநெறிகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுள்ளார்கள் என்று போதித்து வந்தனர். யாக்கோபின் புத்தகம் எல்லா நாடுகளிலும் சிதறியுள்ள யூத கிறிஸ்தவர்களுக்கு எழுதி அனுப்பப்பட்டதாகும் (யாக்கோபு 1:1). இந்த நிருபத்தை வெறுத்து, அதை ஒரு “வைக்கோலின் நிருபம்” என்று மார்ட்டின் லூதர் அழைத்தார், கிரியைகளைப் பற்றிய யாக்கோபின் போதனையானது பவுலுடைய விசுவாசத்தைப் பற்றிய போதனையோடு முரண்படவில்லை மாறாக அதைப் பூர்த்தி செய்கிறதாக இருக்கிறது என்பதை மார்ட்டின் லூத்தர் சரிவரப் புரிந்துகொள்ளாமல் போனார். பவுலின் போதனைகள் தேவனோடு நாம் நீதிமானாக்கப்படுதலில் கவனம் செலுத்துகையில், யாக்கோபின் நிருபத்திலுள்ள போதனைகள் அந்த நீதிமானாக்கப்படுதலை எடுத்துக்காட்டுகின்ற அல்லது வெளிக்கொணர்கிற கிரியைகளில் கவனம் செலுத்துகின்றன. இந்த புதிய கிறிஸ்தவ விசுவாசத்தில் தொடர்ந்து வளர ஊக்குவிப்பதற்காக யூதர்களுக்கு யாக்கோபு இந்த நிருபத்தை எழுதினார். ஆவியானவரால் நிரப்பப்பட்டவர்களிடமிருந்து நல்ல செயல்கள் அல்லது நற்கிரியைகள் இயல்பாகவே புறப்பட்டு வரும் என்று யாக்கோபு வலியுறுத்துகிறார், கலாத்தியர் 5:22-23-ல் பவுல் விவரிக்கிற ஆவியின் கனிகளைக் காண முடியாவிட்டால் ஒருவருக்கு அவருடைய இரட்சிப்பு நம்பிக்கை மெய்யாகவே இருக்கக்கூடுமா இல்லையா என்று யாக்கோபு கேள்வி எழுப்புகிறார்.

திறவுகோல் வசனங்கள்: யாக்கோபு 1:2-3, “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.”

யாக்கோபு 1:19, “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்.”

யாக்கோபு 2:17-18, “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக்காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.”

யாக்கோபு 3:5, “அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!”

யாக்கோபு 5:16, “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.”

சுருக்கமான திரட்டு: மெய்யான மதத்தின் நடப்பைக் குறித்து (1:1-27), மெய்யான நம்பிக்கை (2:1-3:12) மற்றும் மெய்யான ஞானம் (3:13-5: 20) ஆகியவற்றின் மூலம் விசுவாசம் நடப்பை யாக்கோபின் புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது. இந்த புத்தகத்தில் மத்தேயு 5-7 வரையிலுள்ள இயேசுவின் மலைப்பிரசங்கத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இணையானதாக உள்ளது. யாக்கோபு முதல் அதிகாரத்தில் விசுவாச நடைப்பயணத்தின் ஒட்டுமொத்த பண்புகளை விவரிப்பதன் மூலம் தொடங்குகிறார். இரண்டாம் அதிகாரத்திலும், மூன்றாம் அதிகாரத்தின் தொடக்கத்திலும் அவர் சமூக நீதி மற்றும் செயலில் உள்ள விசுவாசத்தைப் பற்றி விவரிக்கிறார். பின்னர் அவர் உலக மற்றும் தெய்வீக ஞானத்திற்கு இடையிலான வேறுபாட்டை ஒப்பிட்டுப் பார்க்கிறார், மேலும் தீமையிலிருந்து விலகி தேவனிடமாய் நெருங்கி வரும்படி கேட்கிறார். பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்களுக்கும், தன்னம்பிக்கை உடையவர்களுக்கும் யாக்கோபு குறிப்பாக கடுமையான கண்டனத்தைத் தருகிறார். கடைசியாக அவர் பாடநுபவிக்கிற விசுவாசிகளுக்கு ஜெபம் மற்றும் ஒருவரையொருவர் கருதிக்கொள்வது மற்றும் கூட்டுறவு ஐக்கியம் மூலம் நம் விசுவாசத்தை உயர்த்துவதில் ஊக்கமளிக்கிறார்.

இணைப்புகள்: விசுவாசத்திற்கும் கிரியைகளுக்கும் இடையிலான உறவின் இறுதி விளக்கமே யாக்கோபின் புத்தகம். மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் அதன் செயற்பாடுகளிலும் ஆழமாகப் பதிந்த யூத கிறிஸ்தவர்கள், நியாயப்பிரமாண சட்டத்தின் செயல்களால் யாரும் நீதிமானாக்கப்படுவதில்லை என்கிற கடினமான சத்தியத்தை விளக்குவதற்கு கணிசமான நேரத்தை செலவிட்டு யாக்கோபு இந்த நிருபத்தை எழுதுகிறார் (கலாத்தியர் 2:16). பல்வேறு நியாயப்பிரமாண சட்டங்களையும் சடங்குகளையும் கடைப்பிடிக்க அவர்கள் மிகுந்த முயற்சி செய்தாலும், அவ்வாறு செய்வது சாத்தியமற்றது என்றும், அந்த சட்டத்தின் மிகச்சிறிய பகுதியை மீறுவது அவர்கள் அனைவரையும் குற்றவாளியாக்கும் என்றும் அவர் அறிவிக்கிறார் (யாக்கோபு 2:10), ஏனெனில் நியாயப்பிரமாண சட்டம் என்பது ஒரு முழு பகுதியாகும், அதன் ஒரு பகுதியை உடைப்பது எல்லாவற்றையும் உடைக்கிறதற்கு சமமாகும்.

நடைமுறை பயன்பாடு: இயேசு கிறிஸ்துவின் மெய்யான சீஷர்களுக்கு “பேச்சு பேசுவது” மட்டுமல்ல, “நடைமுறைப்படுத்தும் பயிற்சி” செய்வதும் ஒரு சவாலாக இருக்கிறது என்பதை யாக்கோபின் புத்தகத்தில் காண்கிறோம். நம்முடைய விசுவாசம் நடக்கும்போது, உறுதியாக இருக்க, அதைப் பற்றிய அறிவின் வளர்ச்சியின் வார்த்தை தேவைப்படுகிறது, ஆகவே யாக்கோபு அங்கே நிறுத்த வேண்டாம் என்று நம்மை அறிவுறுத்துகிறார். 108 வசனங்களில் யாக்கோபு நாம் நிறைவேற்ற வேண்டிய அல்லது கைக்கொள்ளவேண்டிய 60 பொறுப்புக்களை/ கடமைகளை முன்வைப்பதால் பல கிறிஸ்தவர்கள் இந்த நிருபத்தை ஒரு சவாலாகக் காண்பார்கள். அவர் மலைப்பிரசங்கத்தில் இயேசுவின் வார்த்தைகளின் சத்தியத்தில் கவனம் செலுத்துகிறார், மேலும் அவர் கற்பித்தவற்றின் அடிப்படையில் செயல்படவும் நம்மைத் தூண்டுகிறார்.

ஒருவர் கிறிஸ்தவராக மாறலாம், ஆனால் அதேவேளையில் அவர் தொடர்ந்து பாவத்திலும் வாழலாம் என்றும் அப்படிப்பட்ட வாழ்க்கை நீதியின் பலனை வெளிப்படுத்தாது என்கிற கருத்தையும் இந்த நிருபம் முன் வைக்கிறது. அத்தகைய "விசுவாசம்" "விசுவாசித்து நடுங்கும்" பிசாசுகளால் பகிரப்படுகிறது (யாக்கோபு 2:19). ஆயினும் அத்தகைய "விசுவாசத்தினால்" இரட்சிக்க முடியாது, ஏனென்றால் உண்மையான இரட்சிப்பானது விசுவாசத்துடன் எப்போதும் வரும் செயல்களால் அல்லது கிரியைகளால் அது சரிபார்க்கப்படவில்லை (எபேசியர் 2:10). நற்கிரியைகளானது இரட்சிப்பின் காரணம் அல்ல, ஆனால் அவைகள் அதன் விளைவுகளாகும்.

English



முகப்பு பக்கம்

யாக்கோபின் நிருபம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries