settings icon
share icon

கொலோசெயருக்கு எழுதின நிருபம்

எழுத்தாளர்: அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயருக்கு எழுதின நிருபத்தின் முதன்மையான எழுத்தாளர் ஆவார் (கொலோசெயர் 1:1). தீமோத்தேயுவுக்கும் சிறிது பங்கும் நன்மதிப்பும் வழங்கப்படுகிறது (கொலோசெயர் 1:1, “தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொலோசெ பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது”).

எழுதப்பட்ட காலம்: கொலோசெயர் புத்தகம் கி.பி. 58-62 வரையிலுள்ள காலத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்டதன் நோக்கம்: கொலோசெயர் புத்தகம் ஒரு சிறு நன்நெறிமுறை பாடமாகும், இது நமது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் குறிக்கிறது. பவுல் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து வீடு மற்றும் குடும்பம் வரை, வேலையிலிருந்து மற்றவர்களோடு நாம் நடந்துகொள்ள வேண்டிய விதத்தில் முன்னேறுகிறார். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதுமானவராக இருக்கிறார் என்பதுதான் இந்த புத்தகத்தின் கருப்பொருள் ஆகும்.

திறவுகோல் வசனங்கள்: கொலோசெயர் 1:15-16, “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.”

கொலோசெயர் 2:8, “லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”

கொலோசெயர் 3:12-13, “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”

கொலோசெயர் 4:5-6, “திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.”

சுருக்கமான திரட்டு: கொலோசேயில் எழுந்த தோல்வியுற்ற மத மரபுகளுக்கு எதிரான கொள்கைக்கு கொலோசெயர் நிருபம் வெளிப்படையாக எழுதப்பட்டது, இந்த துர்உபதேச போலிக் கொள்கைகள் திருச்சபையின் இருப்புக்கு ஆபத்தை விளைவித்தது. பவுலுக்கு என்ன காரியங்கள் சொல்லப்பட்டது என்பது நமக்குத் தெரியாது என்றாலும், இந்த நிருபமானது இப்படிப்பட்ட குழுக்களுக்கும் அவர்களது கொள்கைகளுக்கும் அப்போஸ்தலனாகிய பவுலுடைய பதிலாகும்.

கிறிஸ்துவைப் பற்றிய குறைபாடுள்ள பார்வையை அல்லது கண்ணோட்டத்தை பவுல் கையாண்டார் என்பாத்து அவரின் பதிலின் அடிப்படையில் நாம் ஊகிக்க முடியும். அதாவது இயேசு கிறிஸ்துவினுடைய மெய்யான மற்றும் உண்மையான மனிதத்தன்மையையும் அவருடைய பரிபூரணமான தெய்வத்தன்மையையும் ஏற்றுக் அநேகர் கொள்ளவில்லை. விருத்தசேதனம் மற்றும் மரபுகளுக்கு “யூதர்களின்” முக்கியத்துவத்தை பவுல் முற்றிலுமாக மறுக்கிறார் (கொலோசெயர் 2:8-11; 3:11). கலாபேதங்களுக்கு எதிரான கொள்கையானது ஒரு யூத-ஞானவாதம் அல்லது யூத-சன்யாசத்திற்கும் கிரேக்க (ஸ்டோயிக்?) தத்துவத்திற்கும் இடையிலான கலவையாகத் தோன்றுகிறது. கிறிஸ்துவின் போதுமானவராக இருக்கும் தன்மையை சுட்டிக்காட்டுவதில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க பணியைச் செய்கிறார்.

கொலோசெயர் புத்தகமானது கிறிஸ்துவின் தெய்வீகம் மற்றும் தவறான தத்துவங்கள் (1: 15-2: 23) பற்றிய கோட்பாட்டு அறிவுறுத்தல்களை கொண்டுள்ளது, மேலும் கிறிஸ்தவ நன்னடத்தை உட்பட நண்பர்கள் மற்றும் சம்பாஷணை பற்றிய நடைமுறை அறிவுரைகளும் இதில் அடங்கியுள்ளன (3:1-4:18).

இணைப்புகள்: அனைத்து ஆரம்பகால திருச்சபைகளையும் போலவே, கொலோசேயில் யூதர்கள் தொடர்மானமாக செய்துவருகிற காரியங்களின் பிரச்சினையும் பவுலுக்கு மிகுந்த கவலையாக இருந்தது. பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணச் சட்டத்தில் மூழ்கியவர்கள் கிரியைகளைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்று கருதிய கிரியைகளைத் தவிர, கிருபையால் மட்டுமே இரட்சிப்பு என்கிற கருத்து மிகவும் தீவிரமானதாகும். இதன் விளைவாக, இந்த புதிய நம்பிக்கைக்கு நியாயப்பிரமாண சட்டத்திலிருந்து சில தேவைகளைச் சேர்க்க சட்டவாதிகளிடையே தொடர்ச்சியான இயக்கம் இருந்து வந்தது. அவைகளில் முதன்மையானது விருத்தசேதனம் செய்ய வேண்டிய தேவை யூத மதமாற்றம் செய்தவர்களிடையே இன்னும் நடைமுறையில் இருந்தது. பவுல் கொலோசெயர் 2:11-15-ல் இந்த பிழையை எதிர்கொண்டார், அதில் கிறிஸ்து வந்ததால் மாம்சத்தின் விருத்தசேதனம் இனி தேவையில்லை என்று அறிவித்தார். பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணச் சட்டத்தின் சடங்குகள் மற்றும் ஆசாரிப்புகள் இனி அவசியமில்லை (உபாகமம் 10:16, 30:6; எரேமியா 4:4, 9:26; அப்போஸ்தலர் 7:51; ரோமர் 2:29).

நடைமுறை பயன்பாடு: பவுல் பல காரியங்களைக் குறிப்பிட்டு அந்த பகுதிகளைக் குறித்து உரையாற்றினாலும், இன்று நம்முடைய அடிப்படை பயன்பாடு, நம்முடைய இரட்சிப்புக்கும் பரிசுத்தமாக்கப்படுதலுக்கும் கிறிஸ்துவின் முழுமையான மற்றும் பரிபூரணமான போதுமானவராக இருக்கும் தன்மை நமக்குப் போதுமானதாகும். சமய மரபுகள் மற்றும் சட்டபூர்வமான செயல்பாடுகளுக்கு எதிரான கொள்கைகளால் வழிதவறாமல் இருக்க நாம் சுவிசேஷத்தை அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தரும் இரட்சகருமாக இருக்கும் கிறிஸ்துவின் மையத்தை குறைக்கும் எந்தவொரு விலகலுக்கும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேதாகமத்தின் சமமான அதிகாரத்தில் நிற்பதாகக் கூறப்படும் புத்தகங்களைப் பயன்படுத்தி சத்தியத்துடன் தன்னை சமன் செய்ய முயற்சிக்கும் அல்லது "இரட்சிப்பில் தெய்வீக செயல்பாடுடன் மனித முயற்சியை இணைக்கும் எந்தவொரு" மதமும் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். பிற மதங்களை கிறிஸ்தவத்துடன் இணைக்கவோ சேர்க்கவோ முடியாது மற்றும் கூடாது. தார்மீக நடத்தை பற்றிய முழுமையான தரங்களை கிறிஸ்து நமக்குத் தருகிறார். கிறிஸ்தவம் என்பது ஒரு குடும்பம், ஒரு வாழ்க்கை முறை மற்றும் ஒரு உறவாகும் - ஒரு மதம் அல்ல. கர்மங்கள், ஜோதிடம், அமானுஷ்யம் மற்றும் ஜாதகம் ஆகியவை தேவனுடைய வழிகளைக் காண்பிக்காது. கிறிஸ்து மட்டுமே அதைச் செய்கிறார். அவருடைய சித்தம் அவருடைய வார்த்தையில் வெளிப்படுகிறது, அவர் நமக்கு எழுதிய அன்பின் கடிதம் தான் அவர் விளம்பின வேதம்; நாம் அதை அறிந்து கொள்ள வேண்டும்!

Englishமுகப்பு பக்கம்

கொலோசெயருக்கு எழுதின நிருபம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries