2 தெசலோனிக்கேயர் புத்தகம்


கேள்வி: 2 தெசலோனிக்கேயர் புத்தகம்

பதில்:
எழுத்தாளர்: 2 தெசலோனிக்கேயர் முதலாம் அதிகாரத்தின் முதலாவது வசனம், 2 தெசலோனிக்கேயர் புத்தகம் அப்போஸ்தலனாகிய பவுலால் எழுதப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது, அநேகமாக சீலா மற்றும் தீமோத்தேயுவுடன் சேர்ந்து பவுல் இதை எழுதியிருக்கலாம்.

எழுதப்பட்ட காலம்: 2 தெசலோனிக்கேயர் புத்தகம் கி.பி. 51-52-ன் காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்டதன் நோக்கம்: தெசலோனிகேயாவில் உள்ள திருச்சபையில் கர்த்தருடைய நாள் குறித்து சில தவறான எண்ணங்கள் இருந்தன. இது ஏற்கனவே வந்துவிட்டதாக அவர்கள் நினைத்தார்கள், அதனால் அவர்கள் தாங்கள் செய்து வந்ததான தங்கள் வேலையை நிறுத்திவிட்டார்கள். அவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டனர். அவர்களுடைய தவறான எண்ணங்களைத் தீர்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறும்படியாக பவுல் இந்த நிருபத்தை எழுதினார்.

திறவுகோல் வசனங்கள்: 2 தெசலோனிக்கேயர் 1:6-7, “உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு.”

2 தெசலோனிக்கேயர் 2:13, “கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.”

2 தெசலோனிக்கேயர் 3:3, “கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.”

2 தெசலோனிக்கேயர் 3:10, “ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.”

சுருக்கமான திரட்டு: தெசலோனிகேயாவில் உள்ள திருச்சபையை பவுல் வாழ்த்தி அவர்களை ஊக்குவித்து அறிவுறுத்துகிறார். கர்த்தருக்குள்ளாக அவர்கள் செய்கிறதைக் கேட்டு அவர் அவர்களைப் பாராட்டுகிறார், அவர்களுக்காக ஜெபிக்கிறார் (2 தெசலோனிக்கேயர் 1:11-12). கர்த்தருடைய நாளில் என்ன நடக்கும் என்று பவுல் 2-ஆம் அதிகாரத்தில் தெளிவாக விளக்குகிறார் (2 தெசலோனிக்கேயர் 2:1-12). பவுல் அவர்களை உறுதியாக நிற்கவேண்டும் என்று ஊக்குவிக்கிறார், சுவிசேஷத்தின்படி வாழாமல் சோம்பேறிகளாக இருக்கும் மனிதர்களிடமிருந்து விலகி இருக்கும்படி அவர் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார் (2 தெசலோனிக்கேயர் 3:6).

இணைப்புகள்: பவுல் தனது சம்பாஷணையில் பல பழைய ஏற்பாட்டு பகுதிகளை இறுதி காலங்களில் சம்பவிக்கப்போவது தொடர்புபடுத்திக் குறிப்பிடுகிறார், இதன் மூலம் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளை உறுதிப்படுத்தி ஒப்புரவாக்குகிறார். இந்த கடிதத்தின் இறுதி காலங்களில் அவர் கற்பித்தவற்றில் பெரும்பாலானவை தீர்க்கதரிசி தானியேல் மற்றும் அவரது தரிசனங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். 2 தெசலோனிக்கேயர் 2:3-9-ல், “பாவ மனுஷன்” (தானியேல் 7–8) பற்றிய தானியேலின் தீர்க்கதரிசனத்தை அவர் குறிப்பிடுகிறார்.

நடைமுறை பயன்பாடு: 2 தெசலோனிக்கேயர் புத்தகம் கடைசிக் காலங்களில் சம்பவிக்கப்போகிறவைகளை விளக்கும் தகவல்களால் நிரப்பப்பட்டுள்ளது. செம்பெரித்தனமுள்ளவர்களாக இருக்கக்கூடாது என்றும் நம்மிடம் உள்ளவற்றில் இருப்பதற்காக வேலை செய்ய வேண்டும் என்றும் இது அறிவுறுத்துகிறது. 2 தெசலோனிக்கேயரில் சில பிரதான ஜெபங்களும் உள்ளன, அவை இன்றும் மற்ற விசுவாசிகளுக்காக எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

English


முகப்பு பக்கம்
2 தெசலோனிக்கேயர் புத்தகம்