settings icon
share icon

1 தீமோத்தேயுவின் புத்தகம்

எழுத்தாளர்: 1 தீமோத்தேயு புத்தகம் அப்போஸ்தலன் பவுலால் எழுதப்பட்டது என்பது, “இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது” (1 தீமோத்தேயு 1:1, 2) என்னும் வார்த்தைகளில் தெளிவாகிறது.

எழுதப்பட்ட காலம்: 1 தீமோத்தேயுவின் புத்தகம் கி.பி. 62-66 வரையிலுள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: எபேசு திருச்சபையின் பணிகளையும், ஆசியா மாகாணத்தில் உள்ள பிற திருச்சபைகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் அவரை ஊக்குவிக்க பவுல் தீமோத்தேயுவுக்கு இந்த நிருபத்தை எழுதினார் (1 தீமோத்தேயு 1:3). இந்த நிருபம் மூப்பர்களை நியமிப்பதற்கான அடித்தளத்தை அமைக்கிறது (1 தீமோத்தேயு 3:1-7), மேலும் ஜனத்தை திருச்சபை அலுவலகங்களுக்குள் நியமிப்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது (1 தீமோத்தேயு 3:8-13). சாராம்சத்தில், 1 தீமோத்தேயுவின் புத்தகம் திருச்சபை அமைப்பு மற்றும் நிர்வாகத்திற்கான தலைமை கையேடு ஆகும்.

திறவுகோல் வசனங்கள்: 1 தீமோத்தேயு 2:5, தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.”

1 தீமோத்தேயு 2:12, “உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.”

1 தீமோத்தேயு 3:1-3, “கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருக்கவேண்டும்.”

1 தீமோத்தேயு 4:9-10, “இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது. இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.”

1 தீமோத்தேயு 6:12, “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.”

சுருக்கமான திரட்டு: பவுலுக்கு உதவியாக இருந்த ஒரு இளம் போதகராகிய தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய முதல் நிருபம் இது. தீமோத்தேயு ஒரு கிரேக்கன் ஆவார். அவரது தாயார் ஒரு யூதர், அவரது தந்தை கிரேக்கன். பவுல் தீமோத்தேயுவுக்கு ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருந்தார், அவர் அவருக்கு ஒரு தந்தையைப் போலவும், தீமோத்தேயு பவுலுக்கு ஒரு மகனைப் போலவும் இருந்தார் (1 தீமோத்தேயு 1:2). கள்ளப் போதகர்களுக்கும் கள்ள உபதேசங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி தீமோத்தேயுவை அறிவுறுத்துவதன் மூலம் பவுல் இந்த நிருபத்தைத் தொடங்குகிறார். இருப்பினும், இந்த கடிதத்தின் பெரும்பகுதி மேய்ப்பர்களின்/ஆயர்களின் நடத்தையைப் பற்றியதாகும். பவுல் தீமோத்தேயுவை ஆராதனையில் அறிவுறுத்துகிறார் (2-ஆம் அதிகாரம்) மற்றும் திருச்ச்சபைக்கான முதிர்ச்சியான தலைவர்களை வளர்த்துக் கொள்ளும் படிக்கு அறிவுறுத்துகிறார் (3-ஆம் அதிகாரம்). நிருபத்தின் பெரும்பகுதி மேய்ப்பரின் நடத்தை, கள்ளப் போதகர்களைப் பற்றிய எச்சரிக்கைகள் மற்றும் பாவம் செய்கிற சபை உறுப்பினர்கள், சபையிலுள்ள விதவைகள், முதியவர்கள் மற்றும் அடிமைகள் மீதான திருச்சபையின் பொறுப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. நிருபம் முழுவதும், பவுல் தீமோத்தேயுவை உறுதியாக நிலை நிற்கவும், விடாமுயற்சியுடன் இருக்கவும், அவருடைய அழைப்பிற்கு உண்மையாக இருக்கவும் பவுல் ஊக்குவிக்கிறார்.

இணைப்புகள்: 1 தீமோத்தேயு புத்தகத்தில் உள்ள பழைய ஏற்பாட்டுக்கான ஒரு சுவாரஸ்யமான இணைப்பு, திருச்சபை மூப்பர்களை “இரட்டை கனத்திற்கு” தகுதியானவர்கள் என்று கருதுவதற்கும், தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்படும்போது கனத்திற்கு தகுதியானவர் என்பதற்கும் பவுல் மேற்கோள் காட்டியுள்ளார் (1 தீமோத்தேயு 5:17-19). உபாகமம் 24:15, 25:4 மற்றும் லேவியராகமம் 19:13 அனைத்துமே ஒரு வேலையாள் சம்பாதித்த ஊதியத்தைச் செலுத்த வேண்டிய அவசியத்தையும், அதை சரியான நேரத்தில் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குறித்துப் பேசுகின்றன. ஒரு மனிதனுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவர இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவசியம் என்று மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் ஒரு பகுதி கோரியது (உபாகமம் 19:15). தீமோத்தேயு மேய்ப்பராக இருந்த சபைகளில் இருந்த யூத கிறிஸ்தவர்கள் இந்த பழைய ஏற்பாட்டு தொடர்புகளை நன்கு அறிந்திருப்பார்கள்.

நடைமுறை பயன்பாடு: தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான மத்தியஸ்தராக இயேசு கிறிஸ்துவைப் பவுல் முன்வைக்கிறார் (1 தீமோத்தேயு 2:5), மேலும் அவரை நம்புகிற யாவருக்கும் அவர் இரட்சகராக இருக்கிறார். அவர் திருச்சபையின் கர்த்தராக இருக்கிறார், தீமோத்தேயு அவருடைய திருச்சபையை மேய்ப்பதன் மூலம் அவருக்கு சேவை செய்கிறார். ஆகவே, பவுல் தனது “விசுவாசமுள்ள மகனுக்கு” எழுதிய முதல் கடிதத்தின் முக்கிய பயன்பாட்டை இங்கேக் காண்கிறோம். சபைக் கோட்பாடு, சபைத் தலைமை மற்றும் சபையின் நிர்வாகம் போன்ற விஷயங்களில் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்துகிறார். இன்று நாம் நம்முடைய உள்ளூர் திருச்சபையை நிர்வகிப்பதில் அதே வழிமுறைகளைப் பயன்படுத்தலாம் / கையாளலாம். அதேபோல், ஒரு போதகரின் பணி மற்றும் அவரது ஊழியம், ஒரு மூப்பருக்கான தகுதிகள் மற்றும் ஒரு உதவிக்காரரின் தகுதிகள் ஆகியவை தீமோத்தேயுவின் நாட்களில் இருந்ததைப் போலவே இன்றும் அவைகள் முக்கியமானவை மற்றும் பொருத்தமானவைகளாக இருக்கின்றன. தீமோத்தேயுவுக்கு பவுலின் முதல் நிருபம் உள்ளூர் திருச்சபையை வழிநடத்துவது, நிர்வகிப்பது மற்றும் மேய்த்து பராமரிப்பது குறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய புத்தகமாகும். இந்த நிருபத்திலுள்ள வழிமுறைகள் கிறிஸ்துவினுடைய திருச்சபையின் எந்தவொரு தலைவருக்கும் அல்லது வருங்காலத் தலைவருக்கும் பொருந்தும், அவை பவுலின் நாட்களில் இருந்ததைப் போலவே இன்றும் பொருந்தும். தங்கள் திருச்சபையில் தலைமைப் பொறுப்புகளுக்கு அழைக்கப்படாதவர்களுக்கு, புத்தகம் முன்வைக்கிற தகுதிகள் இன்னும் நடைமுறையில் உள்ளது. கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் விசுவாசத்திற்காக தைரியமாகப் போராட வேண்டும் மற்றும் தவறான கள்ளப்போதனைகளைத் தவிர்க்க வேண்டும். பின்பற்றுகிற ஒவ்வொருவரும் தங்களை அழைத்த பொறுப்புகளில் உறுதியாக நிற்க வேண்டும், விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

1 தீமோத்தேயுவின் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries