settings icon
share icon

1 தெசலோனிக்கேயர் புத்தகம்

எழுத்தாளர்: 1 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் முதலாம் அதிகாரத்தின் முதல் வசனம், 1 தெசலோனிக்கேயர் புத்தகம் அப்போஸ்தலனாகிய பவுலால் எழுதப்பட்டது என்று தெளிவுபடுத்துகிறது, அநேகமாக சீலா மற்றும் தீமோத்தேயுவுடன் சேர்ந்து இந்த நிருபத்தை எழுதியிருக்கலாம்.

எழுதப்பட்ட காலம்: 1 தெசலோனிக்கேயர் புத்தகம் ஏறக்குறைய கி.பி. 50-ல் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: தெசலோனிக்கேயா திருச்சபையில் கிறிஸ்துவின் வருகையைப் பற்றி சில தவறான புரிதல்கள் இருந்தன. பவுல் தனது நிருபத்தில் அவற்றை தீர்க்க விரும்பினார். அவர் அதை பரிசுத்த வாழ்வின் அறிவுறுத்தலாக எழுதுகிறார்.

திறவுகோல் வசனங்கள்: 1 தெசலோனிக்கேயர் 3:5, “ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.”

1 தெசலோனிக்கேயர் 3:7, “சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களை குறித்து ஆறுதலடைந்தோம்.”

1 தெசலோனிக்கேயர் 4:14-17, “இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.”

1 தெசலோனிக்கேயர் 5:16-18, “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”

சுருக்கமான திரட்டு: முதல் மூன்று அதிகாரங்கள் தெசலோனிக்கேயாவில் உள்ள திருச்சபையை பார்வையிட பவுல் ஏங்குகின்றதை விவரிக்கின்றன, ஆனால் சாத்தான் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் அது முடியாமல் போனது (1 தெசலோனிக்கேயர் 2:18), பவுல் அவர்களை எவ்வாறு கருதினார், மற்றும் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைக் கேட்கவும் ஊக்கப்படுத்தப்பட்டார். பின்னர் பவுல் அவர்களுக்காக ஜெபிக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 3:11-13). 4-ஆம் அதிகாரத்தில், பவுல் தெசலோனிக்கேயாவில் உள்ள விசுவாசிகளுக்கு பரிசுத்த வாழ்க்கையை கிறிஸ்து இயேசுவில் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் (1 தெசலோனிக்கேயர் 4:1-12). பவுல் தொடர்ந்து அவர்களிடம் இருந்த தவறான கருத்தை அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். கிறிஸ்து இயேசுவில் மரித்த ஜனங்கள் அவர் திரும்பி மீண்டும் வானத்தின் மேகங்களில் வரும்போது பரலோகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்று பவுல் அவர்களுக்குச் சொல்லுகிறார் (1 தெசலோனிக்கேயர் 4:13-18, 5:1-11). கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கான இறுதி அறிவுறுத்தல்களுடன் இந்த புத்தகம் முடிகிறது.

இணைப்புகள்: தெசலோனிக்கேயர்கள் தங்கள் “சொந்த தேசத்து ஜனத்திடமிருந்து” அவர்கள் பெற்ற துன்புறுத்தல்களையும் இன்னல்களையும் (வச. 2:15), தங்கள் மேசியாவை நிராகரித்த யூதர்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் உண்டாயிருந்த தீர்க்கதரிசிகளுக்கு செய்ததைப் போலவே இவர்களும் துன்பப்படுகிறார்கள் என்று பவுல் நினைவுபடுத்துகிறார் (எரேமியா 2:30; மத்தேயு 23:31). தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசிகள் எப்போதும் அநியாயக்காரர்களால் எதிர்க்கப்படுவார்கள் என்று ஆண்டவர் இயேசு எச்சரித்தார் (லூக்கா 11:49). கொலோசெயரில், பவுல் அந்த உண்மையை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.

நடைமுறை பயன்பாடு: இந்த புத்தகத்தை நமது வாழ்க்கை சூழ்நிலைகளின் பல நிலைகளுக்குப் பயன்படுத்தலாம். கிறிஸ்து மீண்டும் திரும்பி வரும்போது மரித்தவர்கள் அல்லது உயிருடன் இருக்கிறவர்கள் என யாவருக்கும் நம்பிக்கையை கிறிஸ்தவர்களாக இருக்கிற நமக்கு இது அளிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 4:13-18). தேவனுடைய கோபாக்கினையை / கோபத்தை நாம் பெறமாட்டோம் மற்றும் அது நமக்குரியது அல்ல என்று கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது உறுதியளிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:8-9). கிறிஸ்தவ வாழ்க்கையை தினமும் எவ்வாறு நடத்துவது என்று இது நமக்கு அறிவுறுத்துகிறது (1 தெசலோனிக்கேயர் 4-5).

English



முகப்பு பக்கம்

1 தெசலோனிக்கேயர் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries