வேதாகமத்தை ஆராய்ச்சி செய்ய சரியான வழி என்ன?


கேள்வி: வேதாகமத்தை ஆராய்ச்சி செய்ய சரியான வழி என்ன?

பதில்:
வேதவாக்கியங்களின் அர்த்தத்தை அறிந்துக்கொள்வதே ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் முக்கியமான கடமையாக இருக்கின்றது. நாம் அதை ஆராய்ந்து சரியாக கையாள வேண்டும் (1 திமோத்தேயு2:15). வேதவாக்கியங்களை ஆராய்வது ஒரு கடினமான வேலைதான். மேலோட்டமாக வேதவாக்கியங்களை நாம் புரிந்துக்கொள்வது சில தவறான முடிவுகளில் நம்மை நடத்திவிடும். ஆகவே வெதவாக்கியங்களில் சரியான அர்த்தத்தை கண்டுபிடிக்க பல வழிமுறைகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

1. வேதாகமத்தை படிக்கிற மாணவர் முதலில் ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் புரிதலைக் கொடுக்க வேண்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது அவருடைய செயலாயிருக்கிறது. ‘‘சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” என்று யோவான்16:13 கூறுகின்றது. பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தர்களுக்கு புதிய ஏற்பாட்டை எழுத வழிநடத்தியது போலவே, நமக்கும் வேதவாக்கியங்களைப் புரிந்துக் கொள்ளவும் வழிநடத்துவார். வேதாகமம் ‘‘ தேவனுடைய புத்தகம்’’ என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும், அது என்ன கூறுகின்றது என்று அவரிடமே நாம் கேட்க வேண்டும். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், வேதவாக்கியங்களை எழுதிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம் செய்கிறார், அவர் எழுதினதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

2. வேதவாக்கியங்களிலிருந்து ஒரு வசனத்தை மாத்திரம் வெளியே எடுத்து அதன் அர்த்தத்தை அறிந்துக்கொள்ளக் கூடாது. அதைச் சுற்றிலும் இருக்கின்ற வசனங்களையும், அதிகாரங்களையும் படித்து எழுதப்பட்ட சந்தர்ப்பத்தை நிதானிக்க வேண்டும். வேதவாக்கியளெல்லாம் தேவனிடத்திலிருந்து தான் வருகின்றது (2 திமோத்தேயு3:16,2பேதுரு 1:21), தேவன் மனிதர்களைப் பயன்டுத்தி எழுதினார். இந்த மனிதர்களுக்கு ஒரு கருப்பொருள் அவர்களுடைய மனதில் இருந்தது, ஒரு நோக்கம் இருந்தது, ஒரு குறிப்பிட்ட காரியத்தை அவர்கள் கூறினார்கள். நாம் வேதாகமத்தின் புஸ்தகத்தின் பின்னனியைப் படிக்கும்போது அதை யார் எழுதினார்கள், யாருக்காக எழுதினார்கள், எப்போது எமுதினார்கள் என்று ஆராய வேண்டும். அந்த வாக்கியமே அதைக் குறித்து சொல்ல இடம் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் ஜனங்கள் தாங்கள் விரும்புகிற அர்த்தங்கொள்ள வார்த்தைகளுக்கு அவர்களே சொந்த அர்த்தத்தை கொடுத்துவிடுகிறார்கள்.

3. நாம் தனியாகவே வேதாகமத்தை ஆராய முற்படக்கூடாது. மற்றவர்கள் வாழ்நாளெல்லாம் வேதவாக்கியங்களை ஆராய்ந்தவை களை வைத்து நாம் புரிந்துக்கொள்ள முடியாது என்று நினைப்பது அகந்தையே! சிலர் தவறுதலாக பரிசுத்த ஆவியானவரை மாத்திரம் சார்ந்து மறைந்திருக்கிற எல்லா சத்தியங்களையும் வெளிக்கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் வேதாகமத்தை அணுகுகிறார்கள். கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கும்போது சிலருக்கு ஆவிக்குரிய வரங்களை கிறிஸ்துவின் சரீரத்திற்காக கொடுத்திருக்கிறார். இதில் ஒன்றுதான் போதிக்கின்ற வரம் (எபேசியர்4:11-12, I கொரிந்தியர் 12:28). இந்த போதகர்கள் நாம் வேதவாக்கியங்களை சரியாய்ப் புரிந்துக் கொண்டு அதற்கு கீழ்ப்படிய உதவுகிறார்கள். மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து நாம் வேதத்தை ஆராய்வது புத்திசாலித்தனமானது. ஒருவருக்கொருவர் ஒத்தாசையாயிருந்து, தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை அப்பியாசப்படுத்துவது நல்லது. எனவே, சுருக்கமாக, வேதாகமத்தை ஆராய சிறந்த வழி என்ன?

• ஜெபமும், தாழ்மையும், பரிசுத்த ஆவியானவர் புரிதல் தர சார்ந்து கொள்ளுதலுமே நாம் செய்ய வேண்டியது.

• நாம் வேதவாக்கியத்தை அது எழுதப்பட்ட சந்தர்ப்பத்தை வைத்து, அதுவே தன்னை விளக்கும் என்று அறிய வேண்டும்.

• நாம் மற்ற கிறிஸ்தவர்களின் கடந்த, இப்போதைய முயற்சிகளை கனம் பண்ணி, அந்த ஆராய்ச்சி வேதாகமங்களை பயன்படுத்த வேண்டும். வேதாகமத்தை எழுதியவர் தேவன், அதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புவதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

English
முகப்பு பக்கம்
வேதாகமத்தை ஆராய்ச்சி செய்ய சரியான வழி என்ன?