settings icon
share icon
கேள்வி

கோரக்கனாக் காட்சிகள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


பயம் அல்லது திகில் போன்ற வலுவான எதிர்மறை உணர்ச்சிபூர்வமான பதிலை உருவாக்கும் கனவுகள் கோரக்கனாக் காட்சிகள் என்று வரையறுக்கப்படுகின்றன. கோரக்கனாக் காட்சிகளால் அவதிப்படுபவர்கள் பொதுவாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும், கடுமையான உடல் ரீதியான மாறுத்திரம்-பெருந்துடிப்பு, வியர்த்தல், குமட்டல் போன்ற நிலையிலும் கூட ஏற்படலாம், அவர்களால் சில நேரம் தூங்க முடியாமல் போகும். கோரக்கனவுகளின் காரணங்கள் வேறுபட்டவை. குழந்தைகள், அவர்களின் சுறுசுறுப்பான கற்பனைகளின் காரணமாக, இப்படிப்பட்ட கோரக்கனவுகளுக்கு ஆளாகிறார்கள், சில கனவுகள் மிகவும் கடுமையானவை, அதனால் அவர்கள் அலறி எழுந்து அழுகிறார்கள். இவற்றின் தீவிர சம்பவங்கள் "இரவு பயங்கரங்கள்" என்றும் குறிப்பிடப்படுகின்றன. சில உணவுகளை உறங்கும் நேரத்துக்கு சற்று முன்பு சாப்பிடுவது, பேய் அல்லது திகில் திரைப்படங்களைப் பார்ப்பது போன்றவை ஒரு கோரக்கனவைத் தூண்டும். தூக்கத்தின் போது மூளையின் தொடர்ச்சியான செயல்பாட்டின் காரணமாக வாழ்க்கையின் சூழ்நிலைகள் அல்லது சண்டை அல்லது வாக்குவாதத்திற்குப் பிறகு கவலையுடன் படுக்கைக்குச் செல்வதும் கனவுகளை ஏற்படுத்தும்.

கோரக்கனவுகள் மிகவும் தொந்தரவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த கோரக்கனவுகளுக்கு ஏதேனும் ஆவிக்குரிய முக்கியத்துவம் உள்ளதா? கனவுகள் மற்றும் தரிசனங்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் தேவன் சில சமயங்களில் அவருடைய தீர்க்கதரிசிகளுடனும் மற்றவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு சொப்பனங்களைப் பயன்படுத்தினார். ஆதியாகமம் 20-ஆம் அதிகாரத்தில் தேவன் அபிமெலக்கிடம் பேசினார், ஆபிரகாமின் மனைவி சாராளைத் தொடாதே என்று எச்சரித்தார். மற்ற கனவுகளில் யாக்கோபின் ஏணி (ஆதியாகமம் 28), எகிப்தில் அவன் சிறைபிடிக்கப்பட்டதற்கு வழிவகுத்த தனது சகோதரர்கள் தனக்கு சேவை செய்வார்கள் என்ற யோசேப்பின் கனவு (ஆதியாகமம் 37), அத்துடன் பார்வோனின் கனவுகளுக்கு விளக்கம் (ஆதியாகமம் 40-41) அளித்தது ஆகியவை அடங்கும், இந்த விளக்கமளித்தளுக்குப் பின்பு யோசேப்பு எகிப்தின் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதரானார். சாலமோன் (1 ராஜாக்கள் 3), நேபுகாத்நேச்சர் (தானியேல் 2), யோசேப்பு (மத்தேயு 2) மற்றும் பிலாத்துவின் மனைவி (மத்தேயு 27) உட்பட வேதாகமத்தில் உள்ள மற்றவர்களுக்கு கர்த்தர் அல்லது அவருடைய தூதன் தோன்றினார். எவ்வாறாயினும், இந்த கனவுகள் எதுவும், பிலாத்தின் மனைவியின் கனவைத் தவிர, உண்மையில் ஒரு கோரக்கனவு என்று அழைக்க முடியாது. எனவே தேவன் பொதுவாக கோரக்கனவுகள் அல்லது கெட்ட கனவுகள் மூலம் ஜனங்களிடம் பேசுவதில்லை என்று தோன்றுகிறது.

கோரக்கனவுகளின் போது சாத்தான் அல்லது பிசாசுகள் தங்கள் மனதில் ஊடுருவி வருவதாக சிலர் நினைக்கிறார்கள், ஆனால் இதை நேரடியாக நிரூபிக்க வேதாகமத்தில் எந்த வேதப்பகுதியும் இல்லை. எலிப்பாஸ் கண்டதாகக் கூறப்படும் ஒரு கனவைத் தவிர, கனவுகள் அல்லது கனவுகளின் போது பிசாசின் சக்திகள் ஜனங்களுடன் தொடர்புகொள்வதற்கான வேதாகமச் சம்பவங்கள் எதுவும் இல்லை. பெரும்பாலும், கனவுகள் தூக்க சுழற்சியின் போது தொடர்ந்து செயல்படுவதால், நமது அச்சங்கள் மற்றும் கவலைகளுடன் உருவாகும் மூளையின் வழியை விட வேறு ஒன்றும் இல்லை. ஒரு கிறிஸ்தவர் தொடர்ச்சியான, அடிக்கடி கனவுகளை அனுபவித்தால், அது உறக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் உணர்ச்சிக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, ஒருவேளை அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம். ஆனால், எல்லா விஷயங்களையும் போலவே, எந்த வகையான உணர்ச்சி அல்லது ஆவிக்குரிய துயரங்களுக்கும் எதிராக ஜெபம் மட்டுந்தான் நமது மிக சக்திவாய்ந்த ஆயுதம். தூங்குவதற்கு முன் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் ஜெபம் செய்வது மனதையும் இருதயத்தையும் அமைதிப்படுத்தவும், நிம்மதியான தூக்கத்திற்குத் தயார்படுத்தவும் மிகவும் பயனுள்ள வழியாகும். எல்லாவற்றையும் போலவே, தேவன் தம்மிடமிருந்து ஞானத்தைத் தேடுபவர்களுக்குக் கொடுக்கிறார் (யாக்கோபு 1:5), மேலும் அதைத் தேடும் அனைவருக்கும் அவர் தனது சமாதானத்தையும் வாக்களித்துள்ளார். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6-7).

Englishமுகப்பு பக்கம்

கோரக்கனாக் காட்சிகள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries