settings icon
share icon
கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்


வேதாகமம் மரணத்தை பிரிந்து வேறுபடுதலாக முன்வைக்கிறது: சரீர மரணம் என்பது ஆத்துமாவை சரீரத்திலிருந்து பிரிப்பது, ஆவிக்குரிய மரணம் என்பது ஆத்துமாவை தேவனிடமிருந்து பிரிப்பது ஆகும்.

மரணம் என்பது பாவத்தின் விளைவு ஆகும். "பாவத்தின் சம்பளம் மரணம்," ரோமர் 6:23. எல்லாரும் பாவம் செய்ததால் உலகம் முழுவதும் மரணத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது. "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று" (ரோமர் 5:12). ஆதியாகமம் 2:17-ல், கீழ்ப்படியாமைக்கான தண்டனை மரணம் என்று கர்த்தர் ஆதாமை எச்சரித்தார் — "சாகவே சாவாய்." ஆதாம் கீழ்ப்படியாதபோது, அவர் உடனடியாக ஆவிக்குரிய மரணத்தை அனுபவித்தார், இது அவரை "ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்" (ஆதியாகமம் 3:8). பின்னர், ஆதாம் சரீர மரணத்தையும் அனுபவித்தார் (ஆதியாகமம் 5:5).

சிலுவையில், இயேசுவும் சரீர மரணத்தை அனுபவித்தார் (மத்தேயு 27:50). வித்தியாசம் என்னவென்றால், ஆதாம் ஒரு பாவியாக இருந்ததால் இறந்தார், ஒருபோதும் பாவம் செய்யாத இயேசு, பாவிகளுக்கு மாற்றாக மரிப்பதற்காக தேர்ந்தெடுத்தார் (எபிரெயர் 2:9). மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் இயேசு மரணம் மற்றும் பாவத்தின் மீது தம்முடைய வல்லமையைக் காட்டினார் (மத்தேயு 28; வெளிப்படுத்துதல் 1:18). கிறிஸ்துவின் காரணமாக, மரணம் தோற்கடிக்கப்பட்ட எதிரி. “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?" (1 கொரிந்தியர் 15:55; ஓசியா 13:14).

இரட்சிக்கப்படாதவர்களுக்கு, தேவனுடைய இரட்சிப்பின் கிருபையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை மரணம் முடிவுக்குக் கொண்டுவருகிறது. "அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே" (எபிரெயர் 9:27). இரட்சிக்கப்பட்டவர்களுக்காக, மரணம் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது: "சரீரத்தை விட்டு விலகி, கர்த்தருடன் இருக்க" (2 கொரிந்தியர் 5:8; பிலிப்பியர் 1:23) அதிக விருப்பம் உண்டு. விசுவாசிகளின் உயிர்த்தெழுதல் குறித்த வாக்குறுதி மிகவும் உண்மையானது, ஒரு கிறிஸ்தவரின் சரீர மரணம் "தூக்கம்" என்று அழைக்கப்படுகிறது (1 கொரிந்தியர் 15:51; 1 தெசலோனிக்கேயர் 5:10). "இனி மரணம் இல்லை" (வெளிப்படுத்துதல் 21:4) அந்த நேரத்தை நாம் எதிர்நோக்குகிறோம்.

English



முகப்பு பக்கம்

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries