settings icon
share icon
கேள்வி

வேதாகமப் புத்தகங்களின் எழுத்தாளர்கள் யார்?

பதில்


முடிவான நிலையில், மனித எழுத்தாளர்களுக்கு மேலாக, வேதாகமம் தேவனால் எழுதப்பட்டதாகும். வேதாகமம் தேவனால் "சுவாசிக்கப்பட்டது" என்று இரண்டாம் தீமோத்தேயு 3:16 நமக்கு சொல்கிறது. தேவனுடைய வேதாகமத்தை எழுதிய மனித எழுத்தாளர்களை தேவன் கண்காணித்தார், அதனால்தான் அவர்கள் தங்கள் சொந்த எழுத்து வடிவங்களையும் தனிப்பட்ட நடைகளைப்பயன்படுத்தி எழுதினபோதிலும், தேவன் விரும்பின மற்றும் எதிர்பார்த்த காரியங்களை அவர்கள் பதிவு செய்தார்கள். வேதாகமமானது ஒவ்வொரு வார்த்தையாக உரைக்கப்பட்டு மனித எழுத்தாளர்கள் எழுதவில்லை, மாறாக அது முற்றிலும் வழிநடத்தப்பட்டு முழுமையாக அவரது உந்துதலால் எழுதப்பட்டதாகும்.

மனிதப்பிரகாரமாக சொல்லுவோமானால், வேதாகமமானது ஏறக்குறைய 1500 ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு பின்னணியிலுள்ள சுமார் 40 பேர்களால் எழுதப்பட்டதாகும். ஏசாயா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், எஸ்றா ஒரு ஆசாரியனாக இருந்தார், மத்தேயு வரி வசூலிப்பவராக இருந்தார், யோவான் ஒரு மீனவர் ஆவார், பவுல் ஒரு கூடார வேலை செய்பவராக இருந்தார், மோசே ஒரு மேய்ப்பராக இருந்தார், லூக்கா ஒரு மருத்துவராக இருந்தார். 15 நூற்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு எழுத்தாளர்களால் வேதாகமம் எழுதப்பட்டிருந்தாலும், வேதாகமம் தன்னில்தான் முரண்படவுமில்லை பிழைகள் எதையும் கொண்டிருக்கவுமில்லை. எழுதின எழுத்தாளர்கள் யாவருக்கும் வெவ்வேறு வித்தியாசமான அம்சங்கள் மற்றும் முன்னோக்குகள் இருந்தன, ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே மெய்த்தேவனைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவினால் வருகிற – இரட்சிப்பின் ஒரே வழியைக் குறித்துமே எழுதினார்கள் (யோவான் 14:6; அப்போஸ்தலர் 4:12). வேதாகமத்திலுள்ள சில புத்தகங்கள் அவைகளுடைய எழுத்தாளரை குறிப்பிட்டு கூறுகின்றன. பெரும்பாலான வேத அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, வேதாகம புத்தகங்களின் எழுத்தாளர்கள் மற்றும் அவர்கள் எழுதிய தோராயமான தேதியுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் = மோசே – கி.மு. 1400.
யோசுவா = யோசுவா - கி.மு. 1350.
நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவேல், 2 சாமுவேல் = சாமுவேல் / நாத்தான் / காத் - கி.மு. 1000 - 900.
1 ராஜாக்கள், 2 ராஜாக்கள் = எரேமியா - கி.மு. 600.
1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா = எஸ்றா - கி.மு. 450.
எஸ்தர் = மொர்தெகாய் - கி.மு. 400.
யோபு = மோசே - கி.மு. 1400.
சங்கீதம் = பல்வேறு வேறுபட்ட எழுத்தாளர்கள், பெரும்பாலானவைகள் தாவீதினால் எழுதப்பட்டது - கி.மு. 1000 - 400.
நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு = சாலமோன் - கி.மு. 900.
ஏசாயா = ஏசாயா - கி.மு. 700.
எரேமியா, புலம்பல் = எரேமியா - கி.மு. 600.
எசேக்கியேல் = எசேக்கியேல் - கி.மு. 550.
தானியேல் = தானியேல் - கி.மு. 550.
ஓசியா = ஓசியா - கி.மு. 750.
யோவேல் = யோவேல் - கி.மு. 850.
ஆமோஸ் = ஆமோஸ் - கி.மு. 750.
ஒபதியா = ஒபதியா - கி.மு. 600.
யோனா = யோனா - கி.மு. 700.
மீகா = மீகா - கி.மு. 700.
நாகூம் = நாகூம் - கி.மு. 650.
ஆபகூக் = ஆபகூக் - கி.மு. 600.
செப்பனியா = செப்பனியா - கி.மு. 650.
ஆகாய் = ஆகாய் - கி.மு. 520.
சகரியா = சகரியா - கி.மு. 500.
மல்கியா = மல்கியா - கி.மு. 430.
மத்தேயு = மத்தேயு – கி.பி. 55.
மாற்கு = யோவான் மாற்கு - கி.பி. 50.
லூக்கா = லூக்கா - கி.பி. 60.
யோவான் = யோவான் - கி.பி. 90.
அப்போஸ்தலருடைய நடபடிகள் = லூக்கா - கி.பி. 65.
ரோமர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1 தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன் = பவுல் - கி.பி. 50-70.
எபிரேயர் = எழுதியர் யாரென்று தெரியவில்லை, பெரும்பாலும் பவுல், லூக்கா, பர்னபா, அல்லது அப்பொல்லோ - கி.பி. 65.
யாக்கோபு = யாக்கோபு - கி.பி. 45.
1 பேதுரு, 2 பேதுரு = பேதுரு - கி.பி. 60.
1 யோவான், 2 யோவான், 3 யோவான் = யோவான் - கி.பி. 90.
யூதா = யூதா - கி.பி. 60.
வெளிப்படுத்தின விசேஷம் = யோவான் - கி.பி. 90.

English



முகப்பு பக்கம்

வேதாகமப் புத்தகங்களின் எழுத்தாளர்கள் யார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries