settings icon
share icon
கேள்வி

வேதாகமத்தின் எந்தப் பகுதிகள் இன்று நமக்குப் பொருந்தும் என்பதை நாம் எப்படி அறிவது?

பதில்


நாம் "யுகம்-சார்ந்தவை" என்று பின்பற்ற வேண்டிய கட்டளைகளை ஒதுக்கும்போது, தவறான புரிதல் ஏற்படுகிறது, அல்லது முதல் வாசகர்களுக்கு மட்டுமே பொருந்தும், அல்லது குறிப்பிட்ட வாசகர்களுக்கு குறிப்பிட்ட கட்டளைகளை எக்காலத்துக்கும் பொருந்து சத்தியங்கள் என்று தவறாக நினைக்கிறோம். வித்தியாசத்தை நாம் எவ்வாறு கண்டறிவது? கவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், வேதத்தின் நியதி கி.பி. 1-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுற்றது. இதன் அர்த்தம் என்னவென்றால், வேதாகமம் முதலில் நமக்கு எழுதப்படவில்லை. எழுத்தாளர்கள் மனதில் அன்றைய வாசகர்களையே மனதில் வைத்திருந்தார்கள் மற்றும் அவர்களின் வார்த்தைகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள மக்களால் வாசிக்கப்படும் என்பதை அறிந்திருக்கவில்லை. இன்றைய கிறிஸ்தவர்களுக்கு வேதாகமத்தை விளக்கும் போது அது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சமகால பிரசங்கத்தின் பெரும்பகுதி மிகவும் பொருத்தமானது என்று தோன்றுகிறது, வேதாகமத்தை ஒரு ஏரியாகவும் அதிலிருந்து மீன் பொருந்துதலைப் போல நாம் கருதுகிறோம், அதில் இருந்து இன்றைய கிறிஸ்தவர்களுக்கு உகந்ததாய் கூறலாம் என எண்ணுகிறோம். இது சரியான வேதாகம விளக்கம் மற்றும் வியாக்கியானத்தின் இழப்பில் செய்யப்படுகிறது.

வியாக்கியானத்தின் பிரதான மூன்று விதிகள் (வேதாகம வியாக்கியானத்தின் கலை மற்றும் அறிவியல்) 1) பின்னணி; 2) பின்னணி; மற்றும் 3) பின்னணி. 21 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் எவ்வாறு பொருந்துகிறது என்பதை நாம் சொல்வதற்கு முன், வேதாகமம் அதன் முதல் பார்வையாளர்களுக்கு என்ன அர்த்தம் கொண்டிருந்தது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முதல் பார்வையாளர்களுக்கு அந்நியமான நிலையில் ஒரு பொருந்துதல் வருகிறதென்பதாக நாம் கொண்டு வந்தால், நாம் அந்த வேதப்பகுதியை சரியாக வியாக்கியானம் செய்யவில்லை என்னும் ஒரு மிக வலுவான வாய்ப்பு உள்ளது. வேதப்பகுதி அதன் முதல் வாசகர்களுக்கு என்ன அர்த்தம் கொண்டிருந்தது என்பதை நாம் சரியாகப் புரிந்துகொண்டோம் என்று உறுதியாக நம்பியவுடன், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மொழி, காலம், கலாச்சாரம், புவியியல் அமைப்பு, கட்டமைப்பு மற்றும் சந்தர்ப்ப பின்னணியில் உள்ள வேறுபாடுகள் என்ன? பொருத்தம் செய்வதற்கு முன்பு இவை அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நமது கலாச்சாரங்களின் வேறுபாட்டை நாம் புரிந்துகொண்டவுடன், முதல் பார்வையாளர்களுக்கும் நமக்கும் உள்ள ஒற்றுமைகளைக் காணலாம். இறுதியாக, நம்முடைய காலத்திலும் சூழ்நிலையிலும் அவை நமக்கும் பொருந்துவதைக் காணலாம்.

மேலும், ஒவ்வொரு எந்த வேதப்பகுதியாக இருந்தாலும் அது ஒரே ஒரு சரியான விளக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இது ஒரு பரவலான பயன்பாட்டைக் கொண்டிருக்கலாம், ஆனால் ஒரே ஒரு விளக்கம் மட்டுமே அந்த பகுதிக்கு உள்ளது என்பது கருத்தில் கொள்ளவேண்டும். இதன் பொருள் சில பயன்பாடுகள் மற்றவற்றை விட சிறந்தவை. ஒரு பயன்பாடு மற்றொன்றை விட சரியான விளக்கத்திற்கு நெருக்கமாக இருந்தால், அது அந்த வேதப்பகுதியின் சிறந்த பயன்பாடாகும். உதாரணமாக, "உங்கள் வாழ்க்கையில் இராட்சதர்களை தோற்கடிப்பது" சம்பந்தப்பட்ட 1 சாமுவேல் 17 (தாவீது மற்றும் கோலியாத் கதை) இல் பல பிரசங்கங்கள் பிரசங்கிக்கப்பட்டுள்ளன. அவர்கள் கதையின் விவரங்களை லேசாகத் தவிர்த்து, நேராகப் பயன்பாட்டுக்குச் செல்கிறார்கள், இது பொதுவாக கோலியாத்தை ஒரு கடினமான, பயமுறுத்தும் சூழ்நிலையில் உருவகப்படுத்துவதை உள்ளடக்கியது, இது விசுவாசத்தால் கடக்கப்பட வேண்டும். தாவீது எடுத்த ஐந்து கற்களை உருவகப்படுத்தி ஆவிக்குரிய அர்த்தம் கொடுக்கும் முயற்சிகள் உள்ளன. இந்த பிரசங்கங்கள் பொதுவாக தாவீதைப் போல உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதன் மூலம் முடிவடையும்.

இந்த விளக்கங்கள் கவர்ந்திழுக்கும் பிரசங்கங்களை உருவாக்கும் அதே வேளையில், இந்த கதையிலிருந்து முதல் பார்வையாளர்களுக்கு அந்த செய்திதான் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. 1 சாமுவேல் 17 இன் சத்தியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, முதல் பார்வையாளர்கள் அதை எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், அதாவது 1 சாமுவேலின் ஒட்டுமொத்த நோக்கத்தை ஒரு புத்தகமாக தீர்மானிப்பது. ஒரு விரிவான விளக்கத்திற்கு செல்லாமல், அதாவது இது உங்கள் வாழ்க்கையில் இராட்சதர்களை தோற்கடிப்பது அல்ல என்று சொல்லலாம். அது இந்த வேதப்பகுதியின் தொலைதூர பயன்பாடாக இருக்கலாம், ஆனால் ஒரு வியாக்கியானமாக, அது வேதப்பகுதிக்கு அந்நியமானது ஆகும். தேவனே கதையின் நாயகன் மற்றும் தாவீது தனது மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு அவர் தேர்ந்தெடுத்த முகாந்திரம். இந்த கதை மக்களின் ராஜா (சவுல்) தேவனின் ராஜா (தாவீது) ஆகியோருடன் முரண்படுகிறது, மேலும் இது நம் இரட்சிப்பை வழங்குவதில் கிறிஸ்து (தாவீதின் குமாரன்) என்ன செய்வார் என்பதை முன்னறிவிக்கிறது.

யோவான் 14:13-14 வரையிலான பின்னணியை அல்லது சந்தர்ப்ப சூழலைப் புறக்கணித்து விளக்குவதற்கான மற்றொரு பொதுவான உதாரணம் ஆகும். இந்த வசனத்தை பின்னணிக்கு வெளியே படிப்பது தேவனிடம் எதைக் கேட்டாலும், "இயேசுவின் நாமத்தில்" என்னும் விதிமுறையைப் பயன்படுத்தும் வரை அதைப் பெறுவோம் என்று தோன்றுகிறது. இந்த பகுதியில் முறையான வியாக்கியான விதிகளைப் பயன்படுத்தும்போது, இயேசு தான் காட்டிக்கொடுக்கப்பட இராத்திரியில் மேல் அறையில் தனது சீடர்களுடன் பேசுவதைப் பார்க்கிறோம். இங்கே உடனடிப் பார்வையாளர்கள் சீடர்கள். இது இயேசுவின் சீடர்களுக்கு அவர்களின் வேலையை முடிக்க தேவையான மூலங்களை தேவன் வழங்குவார் என்கிற வாக்குறுதியாகும். இயேசு விரைவில் அவர்களை விட்டு விலகிப்போவார் என்பதால் இது ஆறுதலின் ஒரு வேதப்பகுதியாகும். இங்கே 21-ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பயன்பாடு உள்ளதா? நிச்சயமாக! தேவனுடைய விருப்பத்தின்படி (இயேசுவின் நாமத்தில்) ஜெபம் செய்தால், தேவன் நமக்குள்ளும் நம் மூலமும் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையானதை நமக்குக் கொடுப்பார். மேலும், நாம் பெறும் பதில் எப்போதும் தேவனை மகிமைப்படுத்தும். நாம் எதை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு பதிலாக, இந்த பகுதியில் ஜெபத்தில் தேவனின் சித்தத்திற்கு அடிபணியக் கற்றுக்கொடுக்கிறோம், மேலும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு நமக்குத் தேவவயான தேவைகளை அவர் எப்போதும் வழங்குவார்.

சரியான வேதாகம விளக்கம் பின்வரும் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது:

1. பின்னணி. முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, சிறியதாகத் தொடங்கி பின்பு வெளிப்புறமாக காணவேண்டும்: அதாவது வசனம், பத்தி, அதிகாரம், புத்தகம், எழுத்தாளர் மற்றும் ஏற்பாடு/உடன்படிக்கை.

2. முதல் பார்வையாளர்கள் வேதப்பகுதியை எவ்வாறு புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.

3. உங்கள் கலாச்சாரத்திற்கும் முதல் பார்வையாளர்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கவனியுங்கள்.

4. பழைய ஏற்பாட்டில் இருந்து ஒரு தார்மீக கட்டளை புதிய ஏற்பாட்டில் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டால், அதை "காலவரையற்ற சத்தியம்" என்று கருதுங்கள்.

5. ஒவ்வொரு பத்தியிலும் ஒரே ஒரு சரியான விளக்கம் மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் பல பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம் (சில மற்றவற்றை விட சிறந்ததாகவும் இருக்கலாம்).

6. எப்போதும் தாழ்மையுடன் இருங்கள் மற்றும் வியாக்கியானத்தில் பரிசுத்த ஆவியானவரின் பங்கை மறந்துவிடாதீர்கள். அவர் நம்மை எல்லா சத்தியங்களுக்கும் வழிநடத்திச் செல்வதாக உறுதியளித்தார் (யோவான் 16:13).

முன்பு குறிப்பிட்டது போல், வேதாகம வியாக்கியானம் அறிவியலைப் போலவே ஒரு கலையும் ஆகும். விதிகள் மற்றும் கோட்பாடுகள் உள்ளன, மேலும் சில கடினமான பத்திகளுக்கு மற்றவைகளை விட அதிக முயற்சி தேவைப்படுகிறது. ஆவியானவர் கண்டித்து உணர்த்தி மற்றும் மூலங்களை ஆதரித்தால் நாம் எப்போதும் ஒரு விளக்கத்தை மாற்றத் தயாராக இருக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

வேதாகமத்தின் எந்தப் பகுதிகள் இன்று நமக்குப் பொருந்தும் என்பதை நாம் எப்படி அறிவது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries