settings icon
share icon
கேள்வி

தேவதூத சாஸ்திரம் என்றால் என்ன?

பதில்


தேவதூத சாஸ்திரம் என்பது தேவதூதர்களைப் பற்றிய ஆய்வு ஆகும். தேவதூதர்களைப் பற்றி வேதாகமத்திற்கு விரோதமான பல பார்வைகள் இன்று உள்ளன. தேவதூதர்கள் மரித்துப்போன மனிதர்கள் என்று சிலர் நம்புகிறார்கள். மற்றவர்கள் தேவதூதர்கள் சக்தியின் ஆள்தன்மையற்ற ஆதாரங்கள் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர் தேவதூதர்கள் இருப்பதை முற்றிலும் மறுக்கிறார்கள். தேவதூதர்கள் குறித்த வேதாகமப் புரிதல் இந்த தவறான நம்பிக்கைகளை சரிசெய்யும். தேவதூதர்களைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை தேவதூத சாஸ்திரம் நமக்கு சொல்கிறது. தேவதூதர்கள் மனிதகுலத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் மற்றும் தேவனுடைய நோக்கங்களுக்கு எவ்வாறு சேவை செய்கிறார்கள் என்பதற்கான ஆய்வு ஆகும். தேவதூத சாஸ்திரத்தில் சில முக்கியமான பிரச்சினைகள் இதோ இங்கே:

தேவதூதர்களைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? தேவதூதர்கள் மனிதர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வரிசையுடையவர்கள். மனிதர்கள் மரித்த பிறகு தேவதூதர்களாக மாறமாட்டார்கள். தேவதூதர்கள் ஒருபோதும் மனிதர்களாக மாறவோ மாட்டார்கள், முன்னமே அவர்கள் ஒருபோதும் மனிதர்களாக இருக்கவுமில்லை. தேவன் மனிதர்களைப் போலவே தேவதூதர்களையும் படைத்தார்.

தேவதூதர்கள் ஆணா அல்லது பெண்ணா? தேவதூதர்களின் பாலினம் ஆண் அல்லது பெண் என்பதை வேதாகமம் ஆதரிக்கவில்லை. வேதாகமத்தில் பாலினம் ஒரு தேவதூதனுக்கு "கொடுக்கப்பட்ட" போதெல்லாம், அது ஆண்பால் என்பது குறிப்பிடத்தக்கது (ஆதியாகமம் 19:10,12; வெளிப்படுத்துதல் 7:2; 8:3; 10:7), தேவதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள் மிகாவேல் மற்றும் காபிரியேல் பொதுவாக ஆண்பால் பெயர்களாகக் கருதப்படுகிறது.

நமக்கு பாதுகாக்கும் தேவதூதர்கள் இருக்கிறார்களா? நல்ல தேவதூதர்கள் விசுவாசிகளைப் பாதுகாக்கவும், செய்தியை வெளிப்படுத்தவும், மக்களை வழிநடத்தவும், பொதுவாக, தேவனுடைய பிள்ளைகளுக்கு சேவை செய்து உதவுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. கடினமான கேள்வி என்னவென்றால், ஒவ்வொரு நபருக்கும் அல்லது ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு தேவதூதன் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதுதான்.

கர்த்தருடைய தேவதூதன் என்பது யார் / என்ன? "கர்த்தருடைய தூதன்" யார் என்கிற துல்லியமான அடையாளம் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், அவரது அடையாளத்தைப் பற்றி பல முக்கியமான "தடயங்கள்" உள்ளன.

கேருபீன்கள் என்றால் என்ன? கேருபீன்கள் தேவதூதர்களா? கேருபீன் / கேருபீன்கள் தேவனை ஆராதிப்பதிலும் துதிப்பதிலும் ஈடுபட்டுள்ள தேவதூதர்கள் ஆவர். தேவனுடைய புகழைப் பாடுவதோடு மட்டுமல்லாமல், தேவனுடைய மகிமை மற்றும் மாட்சிமை மற்றும் அவருடைய ஜனங்களோடு அவர் நிலைத்திருப்பதைக் காணக்கூடிய நினைவூட்டலாகவும் அவை செயல்படுகின்றன.

சேராபீன் என்றால் என்ன? சேராபீன்கள் தேவதூதர்களா? ஏசாயா 6-ஆம் அதிகாரம் மட்டுமே வேதாகமத்தில் சேராபீனைக் குறிப்பிடுகிறது. சேராபீன் ("நெருப்பை உமிழும், எரியும்") என்பது தேவதூதர்கள் ஆவார்கள், தேவாலயத்தில் உள்ள தேவனைப் பற்றிய தீர்க்கதரிசி ஏசாயாவின் தரிசனத்துடன் தொடர்புடையது.

தேவதூத சாஸ்திரம் தேவதூதர்கள் பற்றிய தேவனுடைய பார்வையை நமக்கு வழங்குகிறது. தேவதூதர்கள் தேவனை ஆராதிக்கும் மற்றும் கீழ்ப்படிகிற தனிப்பட்ட ஆள்தன்மை கொண்டவர்கள். மனிதகுலத்தின் போக்கில் "தலையிட" தேவன் சில சமயங்களில் தேவதூதர்களை அனுப்புகிறார். தேவனுடைய தேவதூதர்கள் மற்றும் சாத்தான் மற்றும் அவனது பிசாசுகளுக்கு இடையே இருக்கும் யுத்தத்தை கண்டரிந்துகொள்வதற்கு தேவதூத சாஸ்திரம் நமக்கு உதவுகிறது. தேவதூத சாஸ்திரம் பற்றிய சரியான புரிதல் மிகவும் முக்கியம். தேவதூதர்கள் நம்மைப் போலவே சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது, தேவதூதர்களை வணங்குவது அல்லது அவர்களிடம் ஜெபம் செய்வது தேவனுக்கு மட்டுமே உரித்தான மகிமையை அது பறித்துவிடும் என்பதை நாம் உணர்கிறோம். தேவனே, அவருடைய குமாரனை நமக்காக சிலுவையில் மரிக்கும்படி அனுப்பினார், தேவதூதர்கள் அல்ல, அவர் நம்மை நேசிக்கிறார் மற்றும் அக்கறை காட்டுகிறார், மேலும் அவர் மட்டுமே நம் ஆராதனைக்குத் தகுதியானவர்.

தேவதூதரைப் பற்றிய ஒரு முக்கிய வசனம் எபிரேயர் 1:14, "இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?"

English



முகப்பு பக்கம்

தேவதூத சாஸ்திரம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries