settings icon
share icon
கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்


டோட் பர்போ எழுதிய ஹெவன் இஸ் ஃபார் ரியல் (Heaven is for Real), டான் பைப்பர் எழுதிய 90 மினிட்ஸ் இன் ஹெவன் (90 Minutes in Heaven) மற்றும் பில் வைஸ் எழுதிய 23 மினிட்ஸ் இன் ஹெல் (23 Minutes in Hell) ஆகிய புத்தகங்கள் கேள்விகளை எழுப்புகின்றன — தேவன் இன்று பரலோகம் மற்றும் நரகத்தைப் பற்றிய தரிசனங்களை ஜனங்களுக்குத் தருகிறாரா? தேவன் ஜனங்களை பரலோகம் மற்றும்/அல்லது நரகத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் நமக்கு ஒரு செய்தியை வழங்குவதற்காக அவர்களை திருப்பி அனுப்புவது சாத்தியமா? இந்தப் புதிய புத்தகங்களின் புகழ் இந்த கருத்தை முன்னுக்குக் கொண்டுவரும் அதே வேளையில், இவற்றில் காணப்படும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று ஒன்றும் புதிதல்ல. மேரி பாக்ஸ்டர் எழுதிய எ டிவைன் ரெவலேஷன் ஆஃப் ஹெல் (A Divine Revelation of Hell) மற்றும் எ டிவைன் ரெவலேஷன் ஆஃப் ஹெவன் (A Divine Revelation of Heaven) மற்றும் ராபர்ட் லியார்டன் எழுதிய வீ சா ஹெவன் (We Saw Heaven) போன்ற புத்தகங்கள் பல ஆண்டுகளாக கிடைக்கின்றன. இங்கே முக்கிய கேள்வி என்னவென்றால் - இத்தகைய கூற்றுக்கள் வேதாகமத்தின்படி உறுதியானதா?

முதலாவதாக, எவ்வித சந்தேகமுமின்றி ஒரு நபருக்கு பரலோகம் அல்லது நரகத்தைப் பற்றிய தரிசனத்தைக் தேவனால் கொடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2 கொரிந்தியர் 12:1-6ல் தேவன் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு அத்தகைய ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். ஏசாயா 6 ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி ஏசாயாவுக்கு ஒரு அற்புதமான அனுபவம் இருந்தது. ஆம், பைபர், வைஸ், பாக்ஸ்டர் மற்றும் பலர் உண்மையிலேயே பரலோகம் / நரகத்திற்குச் சென்று திரும்பி வந்திருக்கலாம். இறுதியில், இந்தக் கூற்றுகள் உண்மையா அல்லது தவறான புரிதலா, மிகைப்படுத்தலா அல்லது மோசமான மற்றும் வெளிப்படையான ஏமாற்றத்தின் விளைவா என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும். ஆகவே தரிசனங்களையும் அனுபவங்களையும் தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் நாம் பகுத்தறிவதற்கான ஒரே வழி.

தேவன் உண்மையிலேயே ஒரு நபருக்கு பரலோகம் அல்லது நரகத்தைப் பற்றிய தரிசனத்தைக் கொடுத்தால், அது அவருடைய வார்த்தையுடன் முழுமையாக ஒத்துப்போகும் என்பதை நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியும். பரலோகத்தைப் பற்றிய தேவன் கொடுத்த தரிசனம், வெளிப்படுத்துதல் 21-22 அதிகாரங்கள் போன்ற வேதவசனங்களுக்கு எந்த வகையிலும் முரண்படாது. மேலும், தேவன் உண்மையிலேயே பல நபர்களுக்கு பரலோகம் அல்லது நரகத்தின் தரிசனங்களைக் கொடுத்தால், தேவன் கொடுத்த தரிசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாது. ஆம், தரிசனங்கள் வேறுபட்டிருக்கலாம் மற்றும் வெவ்வேறு விவரங்களில் கவனம் செலுத்தலாம், ஆனால் அவை முரண்படாது.

எந்தவொரு எழுத்தாளரால் எழுதப்பட்ட எந்த புத்தகத்தையும் போலவே, "எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:21-22). நீங்கள் இந்தப் புத்தகங்களைப் படித்தால், விவேகமான மனதுடன் படியுங்கள். எழுத்தாளர் சொல்வதை எப்போதும் வேதத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மிக முக்கியமாக, வேதாகமத்தைப் பற்றிய உங்கள் புரிதலை வடிவமைக்க வேறொருவரின் அனுபவத்தையும் அந்த அனுபவத்தைப் பற்றிய அவரது விளக்கத்தையும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அனுபவத்தை விளக்குவதற்கு வேதம் பயன்படுத்தப்பட வேண்டும், வேறு வழியில் அல்ல அதாவது வேதத்தை விளக்குவதற்கு அனுபவத்தைப் பயன்படுத்தக்கூடாது. மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டு உற்சாகப்படுங்கள், ஆனால் அவர்களின் அனுபவங்களை உங்கள் விசுவாசத்தின் அடித்தளமாகவோ அல்லது தேவனுடன் நடக்கவோ அனுமதிக்காதீர்கள்.

மொத்தத்தில், டான் பைப்பர் எழுதிய 90 மினிட்ஸ் இன் ஹெவன், டோட் பர்போ எழுதிய ஹெவன் இஸ் ஃபார் ரியல் புத்தகத்திலும் வேதாகமம் சார்ந்ததாகவும் நம்பக்கூடியதாகவும் இருப்பதைக் கண்டறிந்தோம். பைப்பர் மற்றும் பர்போ பிரச்சினையை பணிவு மற்றும் நேர்மையுடன் அணுகுகிறார்கள். தரிசனங்கள் உண்மையிலேயே தேவனிடமிருந்து வந்ததா இல்லையா எனத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் கூறுகிற அனுபவங்கள் அற்புதமாகத் தோன்றுகிறது இருப்பினும், மீண்டும், ஒரு ஆரோக்கியமான அளவு பகுத்துணர்வு மற்றும் சத்தியத்தின் முழுமையான ஆதாரமாக வேதாகமத்தை அர்ப்பணிப்புடன் படிக்கவும்.

அப்போஸ்தலனாகிய பவுல் "மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டபோது", "அவர் மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டார்" (2 கொரிந்தியர் 12:4). அதேபோல், அப்போஸ்தலனாகிய யோவான் (வெளிப்படுத்துதல் 10:3-4) மற்றும் தானியேல் தீர்க்கதரிசி (தானியேல் 8:26; 9:24; 12:4) அவர்கள் பெற்ற தரிசனங்களின் அம்சங்களை முத்திரையிட அறிவுறுத்தப்பட்டனர். பவுல், தானியேல் மற்றும் யோவான் அவர்களுக்கு வெளிப்படுத்தியவற்றின் அம்சங்களை தேவன் தடுத்து நிறுத்துவது மிகவும் விசித்திரமாக இருக்கும், 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்னும் பெரிய தரிசனங்களை, முழு வெளிப்படுத்தலுக்கான அனுமதியுடன், இன்று ஜனங்களுக்கு வழங்க வேண்டும். பரலோகம் மற்றும் நரகத்திற்கான தரிசனங்கள் மற்றும் பயணங்களைக் கூறும் இந்த புத்தகங்கள் சந்தேகத்திற்குரியதாகவும், மிக முக்கியமாக, வேதாகாமத்தின்படியானதா என்று ஆராய்ந்தும் பார்க்கப்பட வேண்டும் என்பது எங்கள் கருத்து.

English



முகப்பு பக்கம்

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries