இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாகிய அந்த பன்னிரண்டு (12) சீஷர்கள் யார்?


கேள்வி: இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாகிய அந்த பன்னிரண்டு (12) சீஷர்கள் யார்?

பதில்:
சீஷர்கள் என்கிற வார்த்தை பயிளுபவர்களை அல்லது பின்பற்றிகிறவர்களை குறிக்கிறது. அப்போஸ்தலர் என்ற வார்த்தைக்கு வெளியே அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். இயேசு பூமியில் இருந்த நாட்களிலே அவரை பின்பற்றிய பன்னிரண்டு சீஷர்களும் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட்டனர். இயேசுகிறிஸ்துவை பின் பற்றிய பன்னிரண்டு சீஷர்களும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டனர் மற்றும் அவரால் பயிற்சிவிக்கப்பட்டனர். அவருடைய உயிர்தெழுதல் மற்றும் பரமேரியதற்கு பின்பு இயேசு சீஷர்களை அவருடைய சாட்சியாக இருக்கும் படி வெளியே அனுப்பினார் (மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர் 1:8). அப்பொழுது அவர்கள் பன்னிரண்டு சீஷர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் இயேசு இப்பூமியில் இருந்த நாட்களில் கூட சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் என்கிற வார்த்தை மாறி மாறி பயன்படுத்தப்பட்டது.

மத்தேயு 10:2-4ல் சீஷர்கள் அல்லது அப்போஸ்தாலர்களுடைய பட்டியல் உள்ளது, “அந்த பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு எனப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான். பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.” வேதாகமத்தில் இந்த பன்னிரண்டு சீஷர்களை அல்லது அப்போஸ்தலர்களின் பட்டியலை மாற்கு 3;1:6-19 மற்றும் லூக்கா 6:13-16 ஆகிய அதிகாரங்களில் வாசிக்கிறோம். இந்த முறையில் ஒப்பிட்டு பார்க்கும் போது பெயர்களில் உள்ள சிறய மாறுதல்களை பார்க்க முடியும். ததேயு என்பவன் யாக்கோபின் குமாரன் யூதா (லூக்கா 6:16) என்றும் லெபேயு (மத்தேயு 10:3) அழைக்கப்பட்டான். செலோத்தே எனப்பட்ட சீமோன் கானானியனாகிய சீமோன் என்றும் அழைக்கப்பட்டான் (மாற்கு 3:18). இயேசு காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்தின் இடத்தில் மத்தியா என்பவன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களால் மாற்றப்பட்டான் (அப்போஸ்தலர் 1;:20-26). மத்தியாவை பயனில்லாத அப்போஸ்தலன் என்றும் பவுலே யூதாஸ் காரியோத்தின் இடத்தில் மாற்று நபராக தேவனால் தெரிந்தேடுக்கப்பட்டான் என்றும் சில வேதாகம ஆசிரியர்கள் விசுவாசிக்கின்றனர்.

பன்னிரண்டு சீஷர்கள் அல்லது அப்போஸ்தலர்கள் சாதாரண மனிதர்கள் அவர்களை தேவன் அசாதாரணமான முறையிலே பயன்படுத்தினார். இந்த பன்னிரண்டு பேர்களில் சிலர் மீனவர்கள், வரிவசுலிப்பவர்கள் மற்றும் புரட்சியாளர்கள். இயேசுகிறிஸ்துவை பின்பற்றிய இந்த பன்னிரண்டு நபர்களின் தொடர்ச்சியான தோல்விகள், தடுமாற்றங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றை சுவிசேஷ புத்தகத்தில் வாசிக்கிறோம். இயேசுவின் உயிர்தெழுதல் மற்றும் பரலோகத்திற்கு போனதை சாட்சியாக இவர்கள் பகிர்ந்த பின்பு அவர்கள் இந்த உலகத்தை மாற்றி போடும்படியாக பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை அல்லது அப்போஸ்தலர்களை மறுரூபமாக்கினார் (அப்போஸ்தலர் 17:6). மாற்றங்கள் என்ன? இந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் அல்லது சீஷர்களும் இயேசுவோடு கூட இருந்தார்கள் (அப்போஸ்தலர் 4:13). அதுவே நமக்கும் சொல்லப்பட்டிருக்கிறது.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாகிய அந்த பன்னிரண்டு (12) சீஷர்கள் யார்?