settings icon
share icon
கேள்வி

தேவனுடைய சத்தத்தை நான் எப்படி அடையாளம் கண்டு கொள்ள முடியும்?

பதில்


பல யுகங்களாக எண்ணற்ற ஜானங்கள் இந்த கேள்வியை கேட்கின்றார்கள். சாமுவேல் தேவனுடைய சத்தத்தை கேட்டான், ஆனால் ஏலி அவனை அறிவுறுத்தும் வரையில், அது தேவனுடைய சத்தம் என்பதை அவன் அறியாமல் இருந்தான் (1 சாமுவேல் 3:1–10). கிதியோன் தேவனிடம் இருந்து பிரத்தியட்சமான வெளிப்பாடைப் பெற்றான், என்றாலும் அவன் தொடர்ந்து சந்தேகப்பட்டு, ஒரு அடையாளத்தை காண்பிக்கும்படி தேவனிடம் மூன்று முறை கேட்டான் (நியாயாதிபதிகள் 6:17–22, 36–40). தேவ சத்தத்தை கேட்கும்போது, தேவன் தான் நம்மிடம் பேசுகின்றாரா என்று நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? முதலாவதாக, கிதியோன் மற்றும் சாமுவேலுக்கு இல்லாத ஒன்று நமக்கு இருக்கிறது. அதுதான் தேவ உந்துதலினால் அருளப்பட்ட பரிபூரணமான முழு வேதாகமம். இதை நாம் வாசித்து, படித்து, தியானம் செய்யும்படிக்கு தேவனால் அருளப்பட்ட அவருடைய வார்த்தையாகும். “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16–17). ஒரு தலைப்பைக் குறித்து அல்லது நமது வாழ்வின் தீர்மானத்தைக் குறித்த ஒரு கேள்வி நமக்கு எழும்போது, வேதாகமம் அதைக்குறித்து என்ன சொல்லுகிறது என்று நாம் பார்க்கவேண்டும். வேதாகமத்தில் தேவன் சொல்லியிருகிற காரியங்களுக்கு எதிர்மாராக அவர் நம்மை ஒருபோதும் நடத்துவதில்லை (தீத்து 1:2).

தேவனுடைய சத்தத்தை நாம் கேட்கவேண்டுமானால், நாம் அவருடையவர்களாக இருக்க வேண்டும். இயேசு சொன்னார், “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27). தேவனுடைய சத்தத்தை கேட்கிறவர்கள் அவருடையவர்களாக இருக்கிறார்கள், அதாவது அவர்கள் தேவ கிருபையினால் இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டவர்கள். இந்த ஆடுகள் தான் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு அது அவரின் சத்தம் என்று புரிந்துகொள்கிறது, ஏனென்றால் அவரை அவர்கள் மேய்ப்பராக அறிந்திருக்கிறார்கள். நாம் அவருடைய சத்தத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால், நாம் அவருடையவர்களாய் அவருக்கு சொந்தமானவர்களாக இருக்கவேண்டும்.

நாம் வேதாகமத்தை வாசித்து அமைதியாக தியானிக்கும்போது, தேவனுடைய சத்தத்தை நாம் கேட்க முடியும். அதிக நேரம் நாம் தேவனோடு நெருங்கி உறவாடுவதினால் மற்றும் அவர் வார்த்தையில் அதிக நேரம் செலவிடுவதினால், அவரின் சத்தத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும் மற்றும் நம் வாழ்கையில் அவரின் வழி நடத்துதலையும் அறிந்துகொள்ள முடியும். வங்கியில் வேலை செய்கிறவர்கள், உண்மையான ரூபாய் நோட்டுகளை அதிக கவனம் செலுத்தி தெரிந்துகொள்வதின் மூலம், கள்ள நோட்டுகளை மிக எளிதில் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அது போலவே நாமும் தேவனுடைய வசனத்தை அதிகமாய் அறிந்திருக்கும் போது, யாராவது தவறானதை பேசும்போது, அது தேவனுக்கடுத்தது அல்ல என்று மிகவும் தெளிவாக கண்டுகொள்ள முடியும்.

தேவன் இன்று வாய்மொழியாக கேட்கும்வண்ணம் ஜனங்களோடு பேச முடியும் என்றாலும், தேவன் முதன்மையாக தமது எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகத் தான் பேசுகின்றார். சில நேரங்களில் தேவனுடைய நடத்துதல்கள் பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும், நமது மனசாட்சியின் மூலமாகவும், சூழ்நிலைகள் மூலமாகவும், மற்றும் தேவ ஜனங்களுடைய தேற்றுகிற வார்த்தைகள் மூலமாகவும் வருகிறது. நாம் கேட்பதை வேதவாக்கியங்களுடைய சத்தியத்தோடே ஒப்பிட்டு பார்க்கும்போது, தேவனுடைய சத்தத்தை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

English



முகப்பு பக்கம்

தேவனுடைய சத்தத்தை நான் எப்படி அடையாளம் கண்டு கொள்ள முடியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries