settings icon
share icon
கேள்வி

நித்திய ஜீவன் கிடைத்ததா?

பதில்


நித்திய ஜீவனுக்கு போகிறதான தெளிவான பாதையை வேதாகமம் காண்பிக்கிறது. முதலாவதாக, நாம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்திருகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்: "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்" (ரோமர் 3:23). நாம் எல்லாரும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களையும் நமக்கு தண்டனை அளிக்கிற காரியங்களையுமே செய்திருக்கிறோம். நம்முடைய எல்லா பாவங்களும் ஒரு நித்தியமான தேவனுக்கு எதிரானதாக இருப்பதால், நித்தியமான தண்டனையை அடைவது மட்டுமே அதற்கு தீர்வாக இருக்கிறது. "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23).

எனினும், பாவமில்லாத இயேசு கிறிஸ்து (1 பேதுரு 2:22), நித்திய குமாரனானவர் மனிதனானார் (யோவான் 1:1, 14) மேலும் நம்முடைய பாவத்தின் தண்டனைக்குரிய விலையை செலுத்த சிலுவையில் பலியானார். "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5:8). இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (யோவான் 19:31-42), நாம் அடையப்போகிற எல்லா தண்டனையையும் தான் ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார் (2 கொரிந்தியர் 5:21). மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் (1 கொரிந்தியர் 15:1-4), அதினிமித்தம் பாவம் மற்றும் மரணத்தின் மீது அவரது வெற்றியை நிரூபித்தார் (1 பேதுரு 1:3).

நமது இரட்சிப்பின் நிமித்தமாக, கிறிஸ்து யார், அவர் என்ன செய்தார், ஏன் அப்படி செய்தார் – போன்ற காரியங்களில் விசுவாசத்தின் மூலமாக நாம் நமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் (அப்போஸ்தலர் 3:19).

நாம் நமது விசுவாசத்தை அவர்மேல் வைத்து, அவரது சிலுவை மரணம் மற்றும் நம்முடைய பாவங்களுக்காக அவர் செலுத்திய விலைக்கிரயம் போன்றவற்றில் நம்பிக்கை வைப்போமானால், நாம் நமது பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவதோடு பரலோகத்தில் நித்தியக்காலமாய் அவரோடு வாழ்கிறதான நித்திய ஜீவனைக் குறித்த வாக்குத்தத்ததையும் பெறுவோம். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:9). சிலுவையில் கிறிஸ்து செய்து முடித்த வேலையின்மேலுள்ள விசுவாசம் மட்டுமே நித்திய வாழ்வுக்கான ஒரே உண்மையான பாதை! “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபேசியர் 2:8-9).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினால், நீங்கள் ஜெபிக்க வேண்டிய ஒரு மாதிரி ஜெபம் இதோ. நீங்கள் ஜெபிக்கிற இந்த ஜெபமோ அல்லது இதுபோன்ற மற்ற ஜெபங்களோ உங்களை இரட்சிப்பது இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்பை வெளிப்படுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். "ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். ஈவாகிய நித்திய ஜீவனுக்காக நீர் காண்பித்திருக்கிற அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

நித்திய ஜீவன் கிடைத்ததா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries