எனக்கு சரியான மார்க்கம்
 
 

எனக்கு சரியான மார்க்கம் எது?



கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது?

பதில்:
துரித உணவு விடுதியில் நாம் சரியான உணவிற்கு நாம் எப்படி விரும்புகிறோமே. அதன்படியே அவர்கள் தயார் செய்து தந்து நம்மை உற்சாகபடுத்துகிறார்கள். சில காப்பி கடைகள் தங்களிடம் பலவிதமான (மணங்களில்) வாசனைகளில் காப்பி தருகிறோம் என்று சொல்லி பெருமைபட்டு கொள்கின்றனர். அப்படியே வீடுகளையும், கார்களையும் வாங்கும் போதும் நாம் விரும்புகிறபடி நாம் நமக்கு ஏற்ற விதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தே வாங்குகிறோம்.

ஏதோ கிடைப்பது போதும் என்ற மகிழ்ச்சியில் வாழும் காலம் அல்ல இது நாம் தெரிந்து கொள்வதை பெற்றுக்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். உங்கள் தேவை, விருப்பத்திற்குத்தக்கதாக உங்களுக்கு வேண்டியவைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

அப்படியே உங்களுக்கு எது சரியான மார்க்கம் என்று தெரிகிறதோ அதை எப்படி தெரிந்து எடுப்பது? குற்றங்கள் இல்லாத நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காது இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்று பாகுபடுத்தாத மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது?

மேலே கூறயபடி இவைகள் உள்ளன ஆனால் நாம் விரும்பத்தக்க, நமக்கு மனோரம்மியமாக இருக்கிற மார்க்கத்தை எப்படி கண்டு கொள்வது?

எத்தனையோ குரல்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. ஏன் இயேசுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது? அல்லது முகமது, கன்பூசியஸ், புத்தர், அல்லது ஜோசப் சுமித் என்பதுபோன்ற குரல்கள் கேட்கத்தான் செய்கின்றன. எல்லாசாலைகளும் பரலோகத்திற்கு போவது இல்லையா? எல்லா மார்க்கங்களும் அடிப்படையில் ஒன்றைத்தானே குறிப்பிடுகின்றன? உண்மையில் மற்ற நாடுகளிலிருந்து எப்படி எல்லா சாலைகளும் இந்தியாவுக்கு வருவது இல்லையோ அதைப்போலவே எல்லா மார்க்கங்களும் பரலோகத்திற்கு போவது இல்லை.

இயேசுகிறிஸ்து மாத்திரமே தேவன் கொடுத்த அதிகாரத்தோடு பேசுகிறார் ஏனெனில் இயேசுகிறிஸ்து மாத்திரமே மரணத்தை ஜெயித்தவர். முகமது, கன்பூசியஸ், மற்றவர்கள் இந்த நாள்வரை கல்லறையிலேயே இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ ரோமர்களின் கொடுரமான சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்கு பின்பு, தமது சொந்த வல்லமையினாலே உயிர்த்து கல்லறையை விட்டு வெளியே வந்தார். மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள் தான் அப்படியே மரணத்தின் மீது வல்லமை உடையவர்கள் சொல்வதை நாம் கேட்கலாம்.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்த சாட்சிகள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. முதலாவதாக ஏறத்தாழ 500 பேருக்கு மேற்பட்ட சாட்சிகள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்கூடாகக் கண்டனர் என்று சாட்சி கூறுகிறார்கள். 500 குரல்கல் ஒருமிக்க ஒலிக்கும் போது அதைக்கண்டு கொள்ளாமல் நம்மால் இருக்க முடியாது. அதுமாத்திரமல்ல, திறக்கப்பட்ட கல்லறையும், வெறுமையானகல்லறையும் இது வரை சாட்சியாகவே நிற்கிறது. இயேசு கிறிஸ்துவின் எதிரிகள் இயேசு உயிர்த்து எழுந்தார் என்ற அந்த பேச்சை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமே, யாரும் மரித்து போன சிதைந்த நிலையில் உள்ள இயேசுகிறிஸ்துவின் சடலத்தை திரும்ப ஒப்படைத்து இருக்கவேண்டும். ஆனால் ஒப்படைக்க அவர்களுக்கு ஒரு சடலமும் கிடைக்க வில்லை.

கல்லறைகாலியாக இருக்கிறது. சீசர்களால் அவருடைய சரீரத்தை களவாடி இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில் இயேசுகிறிஸ்துவின் கல்லறை மூன்று நாட்களும் இராணுவவீரர்களால் பாதுகாக்கப்பட்டு இருந்ததும், மேலும் அவரது நெருங்கிய சகாக்கள் இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவுடன் பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டார்கள் ஆகவே அந்த பாமர மீனவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ வீரர்களோடு நேருக்குநேர் மோதி சடலத்தை திருடிச் செல்வது என்பது, இயலாத காரியம். இதை மிக எளிதாகச் சொல்லவேண்டுமேயானால். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை விவரிக்க முடியாது.

மேலும் மரத்தின்மேல் அதிகாரம் உள்ளவர்கள் கேட்கப்படத்தக்கவர்களே, இயேசுகிறிஸ்து மரணத்தின் மேல் உள்ள தனது அதிகாரத்தை நிரூபித்து உள்ளார். ஆகவே அவர் சொல்வதை நாம் கேட்க வேண்டும். இயேசு இரட்சிக்கப்படுவதற்கு நானே வழி என்று சொல்லி இருக்கிறார். (யோ.14:6) அவர் ஒரு வழியல்ல, பல வழிகளில் அவர் ஒரு வழியல்ல ஆனால் இயேசு கிறிஸ்துவே வழி. அந்த இயேசு சொல்லுகிறார் “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பறுதல் தருவேன்.” (மத். 11:28) நாம் வாழுகிற உலகம் கடினமான போராட்டம் நிறைந்த உலகம். அநேகர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, புண்படுத்தப்பட்டே இருக்கிறோம். அப்படித்தானே? இப்போது நமக்கு என்ன தேவை? மீட்பா அல்லது ஏதோ ஒரு மார்க்கமா? ஜீவிக்கிற இரட்சகரா அல்லது ஏதோ ஒரு செத்துப்போன தீர்க்கதரிசியா? அர்த்தமுள்ள ஒரு உறவா? அல்லது வெறுமையான சடங்காச்சாரங்களா? இயேசு தெரிந்து கொள்ளப்படத்தக்கவர் இல்லை. அவரே தான் எல்லாம்.

பாவமன்னிப்புக்காக முயற்சி செய்து கொண்டு இருக்கீறீர்களா? இயேசுகிறிஸ்துவே சரியான மார்க்கம் (அப் 10;:43) உங்களுக்கு அர்த்தமுள்ள ஒரு நல்ல உறவு தேவனோடு ஏற்படுத்திக்கொள்ளுவதற்கு இயேசு கிறிஸ்துவே சரியான மார்க்கம். (யோ. 10:10) அவர், நித்திய வீட்டை உங்களுக்கு பரலோகத்தில் கட்டவிரும்புகிறீர்களா? அதற்கும் இயேசு கிறிஸ்துவே சரியான மார்க்கம் (யோ. 3:16)

உங்கள் விசுவாசத்தை, இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் வையுங்கள். அப்போது நீங்கள் வருத்தப்படவேண்டிய சூழு;நிலை வராது. உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவரையே நம்புங்கள். நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்கமாட்டீர்கள்.

உங்களுக்கு தேவனோடு கூட ஒரு நல்ல உறவு அவசியம் என்று நீங்கள் உணர்வீர்களேயானால் உங்களுக்கு ஒரு மாதிரி ஜெபத்தை தருகிறோம். ஓன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஜெபமோ அல்லது வேறு ஏதாவது ஒரு ஜெபமோ உங்களை இரட்சிக்காது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது மட்டுமே, பாவத்திலிருந்து உங்களுக்கு இரட்சிப்பை கொண்டுவரும். இ�����்த ஜெபம் ஆனது உங்கள் விசுவாசத்தை தேவனுக்கு வெளிப்படுத்துவதற்கும், நீங்கள் பெற்றுக்கொள்கிறதற்கு நன்றி செய்வதற்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெபம்:- ஆண்டவரே நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன் என்றும் நான் தண்டனைக்கு பாத்திரவான் என்றும் அறிந்து இருக்கிறேன். என் மேல் வரவேண்டிய தண்டனையை இயேசு சிறிஸ்து ஏற்றுக்கொண்டார் என்பதை நான் விசுவாசிக்கும்போது என் பாவத்தை விட்டு மனம் திரும்பி இருக்கிறேன். இரட்சிப்புக்காக உம்மையே நான் விரும்புகிறேன். நீர் எனக்கு கொடுத்த ஆச்சரியமான கிருபைக்காக, பாவமன்னிப்புக்காக, நித்திய ஜீவனுக்காக உமக்கு நன்றி சொல்கிறேன். ஆமென்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க



எனக்கு சரியான மார்க்கம் எது?