கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்களா?
கேள்வி: கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்களா?
பதில்:
இயேசு கிறிஸ்து யார்? இயேசு கிறிஸ்து ஒர் தீர்க்கதரிசி என்று பலர் ஒப்புக்கொள்கின்றனர். இவைகள் சரியானதாக இருக்கலாம் ஆனால் உண்மையாக அவர் யார் என்று அனேகர் அறியவில்லை வேதம் சொல்கிறது இயேசு மாம்சத்தில் வந்த தேவன். மனிதரூபம் எடுத்த தேவன் என்று (யோ.1:1,14) தேவன் நமக்கு போதிக்க, நமக்கும் சுகம் கொடுக்க நம்மை சரிபடுத்த நம்மை மன்னிக்க நமக்காக மரித்தார். இந்த இயேசுவை உண்மையாக நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
இரட்சகர் யார்? நமக்கு இரட்சகர் ஏன் தேவை? வேதம் சொல்கிறது நாம் எல்லாம் தீமையான செயல்களையும், பாவங்களையும் செய்தோம் (ரோ.3:10,18) நம்முடைய பாவத்தினால் நாம் தேவ கோபத்துக்கும் நியாத் தீர்ப்புக்குள்ளானோம். நாம் நித்திய தண்டனையினின்று விடுதலை பெற நமக்கு இரட்சகர் தேவை. இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து நமக்கு பதிலாக நம்முடைய இடத்தில் மரித்தார் நம்முடைய பாவத்திர்காய் கிறிஸ்து நித்திய கிரயத்தை செலுத்தினார் (IIகொரி.5:21, ரோ.5:8). இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க போதுமானதாயிருந்தது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நிருபிக்கிறது கிறிஸ்து ஒருவர் மாத்திரமே இரட்சகர் (யோ. 14:6, அப். 4:12) இயேசுவே உன் இரட்சகர் என்று நம்புகிறாயா?
அனேக கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு செல்வது, சில கலாச்சாரங்களை கடைபிடிப்பது, சில பாவங்களை தவிர்ப்பது ஆகியன கிறிஸ்தவம் என்று கருதுகின்றனர். அது கிறிஸதவம் அல்ல, உண்மையான கிறிஸ்தவம் என்பது இயேசுவை நம்பி, விசுவாசித்து அவரை உன் வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்று கொள்ள வேண்டும். வேறொருவருடைய விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கபடமுடியாது. நம்முடைய நற்கிரியைகளினாலும் இரட்சிப்பு உண்டாகாது.
இயேசு கிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காய் மரித்தார் உயிருடன் எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் என்று நம்பி அவரை உன் வாழ்வின் இரட்சகராய் ஏற்றுக்கொள்வாயானால் நித்திய வாழ்வை நீ சதந்தரித்து கொள்ளலாம் (யோ.3:16). இயேசு உன் சொந்த இரட்சகரா? இல்லையென்றால் இன்றைக்கு உன்னை அவருக்கு ஒப்புக்கொடு.
நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்களா?
|