settings icon
share icon
கேள்வி

இரும்பை இரும்பு கருக்கிடும் என்றால் என்ன?

பதில்


"இரும்பை இரும்பு கருக்கிடும்" என்ற சொற்றொடர் நீதிமொழிகள் 27:17 இல் காணப்படுகிறது: "இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்." இரண்டு இரும்பு கத்திகளை ஒன்றாக தேய்ப்பதில் பரஸ்பர நன்மை உள்ளது; விளிம்புகள் கூர்மையாகி, கத்திகளை வெட்டுவதற்கும் அறுப்பதற்கும் அவற்றின் பணியை மிகவும் திறமையாக ஆக்குகிறது. அதுபோலவே, தேவனுடைய வார்த்தையும் ஒரு ‘இருபுறமும் கருக்குள்ள பட்டயம்’ (எபிரெயர் 4:12), மேலும் இதன் மூலம்தான் நாம் ஒருவரையொருவர் கருக்கிட வேண்டும்—-கூடி வருதலில், ஐக்கியங்கொள்வதில் அல்லது வேறு எந்த தொடர்பிலும் கருக்கிட வேண்டும்.

நீதிமொழி ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது. மனிதன் தனியாக இருக்கும்படி செய்யப்படவில்லை, ஏனென்றால், மனிதனின் பாவ வீழ்ச்சிக்கு முன்பே கர்த்தராகிய தேவன் இதைச் சொல்லவில்லையா (ஆதியாகமம் 2:18)? அப்படியானால், மனிதனின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஐக்கியம் மற்றும் ஜெபத்தின் போது நாம் கிறிஸ்துவுக்குள் நம் சகோதர சகோதரிகளுடன் கூடிவருவது எவ்வளவு அவசியம். தெளிவாக, இது ஆரம்பகால திருச்சபையின் பரிசுத்தவான்களால் அங்கீகரிக்கப்பட்டது (அப்போஸ்தலர் 2:42-47) அவர்கள் உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் “உறுதியாய்த் தரித்திருந்தார்கள்"—இவ்வனைத்து செயல்பாடுகளும் ஒருவரையொருவர் கருக்கிடுவதற்கான வாய்ப்புகளை வழங்கின. இதன் விளைவாக அவர்கள் "ஆச்சரியத்திற்குள் மூழ்கினார்கள்" மற்றும் அவர்கள் ஒன்றாக கூடிவந்த போது; அவர்கள் ஒருவருக்கொருவர் கிடைத்த தயவுக்காக தேவனைப் புகழ்ந்தார்கள்.

மேற்கூறிய நீதிமொழியைப் பற்றி இரண்டு குறிப்புகள் உள்ளன. முதலாவதாக, கர்த்தருடைய நாமத்தில் இருவரும் ஒன்றாகச் சந்திப்பது எப்போதும் ஆசீர்வாதத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். இது கர்த்தர் தாமே வாக்களித்த கிருபையின் ஒரு வழியாகும்—இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் (மத்தேயு 18:20). மேலும், கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார் (மல்கியா 3:16) என்கிற இதே போன்ற அர்த்தத்தை மல்கியாவிலும் காண்கிறோம். கிறிஸ்தவ ஐக்கியத்தில் நாம் ஒருவரையொருவர் கருக்கிடும்போது, கர்த்தர் பரலோகத்திலிருந்து செவிசாய்த்து மகிழ்ச்சியடைகிறார். அவருக்கு மகிமையைக் கொண்டுவரும் அவரைப் பற்றிய ஒரு வார்த்தை கூட அவர் புறந்தள்ளுவதில்லை.

தாவீதுக்கும் சவுலின் குமாரனான யோனத்தானுக்கும் உள்ள உறவில் தெய்வீக ‘ஒற்றுமையின்’ வாசனைகள் சிறப்பாக உணரப்படுகின்றன. தாவீதை சவுல் பின்தொடர்ந்தபோது, ஜொனத்தான் தாவீதை "தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்துவதற்கு" (1 சாமுவேல் 23:16) தேடினான், இது நமது இரண்டாவது குறிப்புக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இரும்பை இரும்பு கருக்கிடும் என்பது கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு. நாம் அன்றாடம் சந்திக்கும் பாரங்களைச் சுமந்துகொண்டு பகிர்ந்துகொள்ளவும், தனிப்பட்ட பாவங்களுக்காகப் புலம்பவும், அதிலிருந்து மனந்திரும்புவது எப்படி என்று ஆலோசனை செய்யவும், அதை அடைந்ததில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். யாக்கோபு 2:8 இல் குறிப்பிடப்பட்டுள்ள அதே “ராஜரீக பிரமாணம்” இதுதான், அங்கு நாம் ஒருவரையொருவர் அன்புகூரும்படி அறிவுறுத்தப்படுகிறோம்.

ஒப்புமைக்குத் திரும்புகையில், ஒரு கத்தி மழுங்கலாக இருந்தால், அது இன்னும் கத்தியாகவேத் தொடர்கிறது, இருப்பினும் அது குறைவான செயல்திறன், குறைவான நிலையில் பயனுள்ளது. ஆகவே, கர்த்தர் ஒவ்வொருவருக்கும் நியமித்துள்ள ஊழியத்தில் நாம் அதிகக் கருக்காக இருக்க, அதிக நேரத்தை ஒன்றாகச் செலவிடவும், போதனை செய்யவும், ஊக்கப்படுத்தவும், ஜெபிக்கவும், புத்திசொல்லவும், தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துகொள்ளவும், தேவனுடைய வார்த்தைக்காகவும், நம்முடைய உள்ளூர் சபையின் தேவைகளுக்காகவும் ஜெபிக்கவும் ஊக்குவிக்கப்படுவோம். நம்மில் பெரும்பாலும், நவீன திருச்சபை ஐக்கியம் என்பது உணவு மற்றும் வேடிக்கை களியாட்டுகளை மையமாகக் கொண்டது, தேவனுடைய வார்த்தையால் ஒருவரையொருவர் கருக்கிடுவதில் அல்ல.

இறுதியாக, கருக்கிடப்பட்ட ஒரு கத்தி மேலும் பிரகாசிக்கும், ஏனெனில் அனைத்து மந்தமான தன்மையும் அதன் மேற்பரப்பில் இருந்து தேய்க்கப்பட்டுள்ளது. அவ்வாறே, மேலே குறிப்பிட்டுள்ள செயல்களை நாம் தொடர்ந்து செய்தால், நம் தேவனுக்காக நாம் சிறப்பாக பிரகாசிப்போம், இவை அனைத்தும் நம்மை இணக்கமாக இணைக்கும். "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?" (சங்கீதம் 133:1). எனவே, எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் சொல்வது போல், “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்" (எபிரெயர் 10:24-25).

English



முகப்பு பக்கம்

இரும்பை இரும்பு கருக்கிடும் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries