settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவத்திற்கு நான் எப்படி மாறுவது?

பதில்


கிரேக்க நகரான பிலிப்புவில் இருந்த ஒரு மனிதன் பவுலுக்கும் சீலாவுக்கும் இதேபோன்ற கேள்வியைக் கேட்டார். இந்த மனிதனைப் பற்றி குறைந்தபட்சம் மூன்று விஷயங்களை நாம் அறிந்திருக்கிறோம்: அவர் ஒரு சிறைச்சாலை அதிகாரி, அவர் ஒரு அஞ்ஞானி, மற்றும் அவர் ஒரு நம்பிக்கை இழந்தவராக இருந்தார். பவுல் அவரை தடுத்தபோது அவர் தன்னை தற்கொலை செய்துகொள்ளும் தருவாயில் இருந்தார். அப்பொழுதுதான் அந்த மனிதன், “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்” (அப்போஸ்தலர் 16:30).

அந்த மனிதன் இந்த கேள்வியைக் கேட்டதிலிருந்து அவன் தன்னுடைய இரட்சிப்பின் தேவையை உணர்ந்து கொண்டான் என்கிற உண்மை தெளிவாகிறது - அவன் தனக்கான மரணத்தை மட்டுமே அப்பொழுது கண்டான், மேலும் அவனுக்கு அப்பொழுது உதவி தேவை என்பதையும் அவன் அறிந்திருந்தான். பவுல் மற்றும் சீலாவிடம் அவர் இப்படி கேட்பத்திலிருந்து அவர்களிடத்தில் பதில் இருப்பதாக அவர் நம்பினார்.

அந்த பதில் விரைவாகவும் எளிமையாகவும் வருகிறது: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (வசனம் 31). அந்த மனிதன் எப்படி தொடர்ந்து விசுவாசித்து, மாற்றப்பட்டான் என்பதை இந்த பகுதி காண்பிக்கிறது. அந்த நாளிலிருந்து அவரது வாழ்க்கை வித்தியாசத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது.

மனிதனின் மாற்றம் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கவனியுங்கள் ("விசுவாசம்"). அவர் இயேசுவை நம்புவதையல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. இயேசு தேவனுடைய குமாரன் ("கர்த்தர்") மற்றும் வசனங்களை நிறைவேற்றிய மேசியா ("கிறிஸ்து") என்று அந்த மனிதன் நம்பினார். அவனுடைய விசுவாசம் இயேசு பாவத்திற்காக மரித்தார் மற்றும் உயிரோடு எழுந்தார் என்பதை விசுவாசிப்பதையும் உள்ளடக்கியிருந்தது, பவுலும் சீலாவும் பிரசங்கித்த செய்தியும் இதுவேயாகும் (ரோமர் 10:9-10 மற்றும் 1 கொரிந்தியர் 15:1-4).

"மாறுதல்" என்பது எழுத்தியல் பிரகாரம் "திரும்புதல்" என்னும் அர்த்தமாகும், ஒரு காரியத்தை நோக்கி திரும்பும்போது, நாம் வேறு எதையாவது விட்டு விலகிவிடுகிறோம் என்கிற அர்த்தமாகிறது. நாம் இயேசுவிடம் திரும்பும்போது, நாம் பாவத்திலிருந்து திரும்ப வேண்டும். பாவத்திலிருந்து திரும்புதலை "மனந்திரும்புதல்" என்றும் இயேசுவிடம் திரும்புதலை "விசுவாசம்" என்றும் வேதாகமம் அழைக்கிறது. ஆகவே, மனந்திரும்புதலும் விசுவாசமும் ஒன்றுக்கொன்று நிறைவு உண்டாக்குகிறவைகளாக இருக்கின்றன. மனந்திரும்புதலும் விசுவாசமுமாகிய இவைகள் இரண்டையும் 1 தெசலோனிக்கேயர் 1:9-ல் சுட்டிக்காட்டுகின்றன - “நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினீர்கள்.” ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய முன்னாள் வழிகளையும் கிறிஸ்தவத்திற்கு உண்மையாக மாறின மாற்றத்தின் விளைவாக பொய்யான மதம் சம்பந்தப்பட்ட எதையுமே விட்டுவிடுவார்.

எளிய நடையில் கூறவேண்டுமானால், கிறிஸ்தவத்திற்கு மாறுவதற்கு, இயேசு உங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும், மறுபடியும் உயிர்த்தெழுந்த தேவனுடைய குமாரன் என்று நீங்கள் நம்பவேண்டும். நீங்கள் இரட்சிப்பின் தேவைக்காக நீங்கள் ஒரு பாவி என்பதை தேவனிடத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும், மேலும் உங்களை இரட்சிக்க இயேசு ஒருவரையே நீங்கள் நம்பவேண்டும். நீங்கள் பாவத்திலிருந்து கிறிஸ்துவுக்குத் திரும்பும்போது, உங்களை இரட்சிக்கவும் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்கு அளிக்கவும் தேவன் வாக்களிக்கிறார், அவர் உங்களை ஒரு புதிய சிருஷ்டியாக உருவாக்குகிறார்.

கிறிஸ்தவம், அதன் உண்மையான வடிவத்தில், ஒரு மதம் அல்ல. வேதாகமத்தின்படி கிறிஸ்தவம் இயேசு கிறிஸ்துவுடன் உள்ள ஒரு உறவாக இருக்கிறது. கிறிஸ்தவம் என்பது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் விசுவாசிக்கிற யாவருக்கும் தேவன் இலவசமாக அருளுகிற ஒரு இரட்சிப்பாகும். கிறிஸ்தவத்திற்கு மாறும் ஒரு நபர் மற்றொரு மதத்திற்கு ஒரு மதத்தை விட்டு மாறுகிறதில்லை. கிறிஸ்தவத்திற்கு மாறுவது என்பது தேவன் அளிக்கும் ஈவைப்பெற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவைத் துவங்கி, அதன் விளைவாக பாவமன்னிப்பு மற்றும் மரணத்திற்குப் பிறகு நித்தியத்தையும் அடைகிறதாகும்.

இந்த கட்டுரையில் நீங்கள் வாசித்திருக்கும் காரணத்தினால் நீங்கள் கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்கள் பதில் ஆம் எனில், நீங்கள் தேவனிடத்தில் ஏறெடுக்கவேண்டிய ஒரு மாதிரி ஜெபம் இதோ. நீங்கள் ஜெபிக்கிற இந்த ஜெபமோ அல்லது இதுபோன்ற மற்ற ஜெபங்களோ உங்களை இரட்சிப்பது இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்பை வெளிப்படுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். "ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். ஈவாகிய நித்திய ஜீவனுக்காக நீர் காண்பித்திருக்கிற அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவத்திற்கு நான் எப்படி மாறுவது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries