மறுபடி பிறந்த கிறிஸ்தவன் என்றால் என்ன?
கேள்வி: மறுபடி பிறந்த கிறிஸ்தவன் என்றால் என்ன?
பதில்:
இந்த கேள்விக்கான சிறந்ததொரு பதிலை யோவான் எழுதின சுவிசேஷம் 3:1-21 பகுதியில் பெற்றுக் கொள்கிறோம். சனகெரிட் சங்கத்தைச் சார்ந்த, ஒரு பிரபலமான பரிசேயர் நிக்கோதேமுவிடம் இயேசு கிறிஸ்து பேசிக் கொண்டிருக்கும் போது இதைக் குறித்து விளக்குகின்றார். நிக்கோதேமு இராத்திரி வேலையிலே இயேசுவிடம் வந்தான். நிக்கோதேமு இயேசுவிடத்தில் கேட்கும்படியாக அநேக கேள்விகளையுடையவனாக இருந்தான்.
இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் பேசும்பொழுது, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்.” “அதற்கு நிக்கோதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படி பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து, பிறக்கக்கூடுமோ? என்றான். இயேசு பிரதியுத்தரமாக, ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டானெ;று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உனக்கு சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.” (யோ. 3:3-7)
‘மறுபடியும் பிறத்தல்’ என்ற அந்த வார்த்தை ‘மேலிருந்து பிறத்தல்’ என்று பொருள் படுகிறது. உண்மையிலேயே, நிக்கோதேமுவுக்கு ஒரு தேவையிருந்தது. அவனுக்கு இருதயத்தில் ஒரு மாற்றமும் ஆவியில் மறுரூபமாக்கப்படுதலும் அவசியமாயிருந்தது. புதுப்பிறப்பு அதாவது மறுபடியும் புதிதாக பிறத்தல் என்பது தேவனால் உண்டாகிறது. அது விசுவாசிக்கிறவர்களுக்குள் நித்திய ஜீவனைக் கொண்டு வருகிறது (II கொரி. 5:7, தீத்து. 3:5, II பேது. 1:3, I யோ. 2:29, 3:9, 4:7, 5:1-4, 18, யோ. 1:12,13 வசனங்களில் “தேவனுடைய பிள்ளைகள்” என்பதை மறுபடிப் பிறத்தல் என்பதோடு இணைத்துக் குறிப்பிடப்படுகிறது. ஆது இயேசு கிறஸ்துவின் நாமத்தை விசுவாசிப்பதன் மூலமாக உண்டாக்கியது.
ஏன் ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டும் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இயற்கையாகவே வரும். அதற்கு பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் இப்படியாக பதில் சொல்கிறார்: “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்த்தார்” (எபே. 2:1). மேலும் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்” (ரோ. 3:23). ஆகவே பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கும், தேவனோடு உள்ள உறவைப் புதிப்பித்துக் கொள்ளும்படிக்கும், மறுபடியும் பிறத்தல் அவசியமாகிறது.
இது எப்படி நடக்கும்? எபே. 2:8, 9ல் “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” என்று பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் எழுதுகிறார். ஒருவன் இரட்சிக்கப்படும்பொழுது, அவன் அல்லது அவள் மறுபடியும் பிறக்கின்றனர், ஆவியில் புதுப்பிக்கப்படுகின்றனர். மேலும் தேவன் தந்த அதிகாரத்தின்படி, மறுபடி பிறந்ததினாலே, தேவனுடைய பிள்ளைகளாகின்றனர். ‘ஆவியில் மறுபடியும் பிறத்தல்’ என்பது இயேசு கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசம் - அதாவது, என் பாவங்களுக்காக விலைக்கிரயமாய், தமது ஜீவனையே சிலுவையில் மரணத்துக் ஒப்புக் கொடுத்தார் என்பதுவே ஆகும். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்” (II கொரி. 5:17a.)
இதுவரை இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசியாமல் இருந்திருந்தால், ஆவியானவர் உங்கள் இருதயங்களில், இப்பொழுது ஏவினால் அதற்கு நீங்கள் ஒப்புக் கொடுப்பீர்களா? நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மனந்திரும்புதலுக்கென்று, இந்த ஜெபத்தை ஏறெடுப்பீர்களா? கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக இன்று மாற ஜெபிப்பீர்களா? அவருடைய நாமத்தின்மேல விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள் (யோ. 1:12, 13).
நீங்கள் மறுபடியும் பிறக்க, இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்பினால் இதில் ஒரு மாதிரி ஜெபத்தை தருகிறோம். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜெபத்தையோ அல்லது மற்ற ஏதாவது ஜெபம் உங்களை இரட்சிக்காது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது மாத்திரமே, உங்களை பாவத்திலிருந்து இரட்சிக்கும். இந்த ஜெபம், உங்கள் விசுவாசத்தை ஆண்டவருக்கு வெளிப்படுத்துவதற்கும், அவர் கொடுத்த இரட்சிப்புக்கு நன்றி செலுத்துவதற்கு மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. “ஆண்டவரே உமக்கு விரோதமாக பாவம் செய்தேனென்று அறிந்திருக்கிறேன். நான் தண்டனைக்கு பாத்திரமானவன். ஆனால் நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய தண்டனையை இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொண்டார். ஆகவே கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தினாலே, நான் மன்னிக்கப்பட முடியும். நான் பாவத்தைவிட்டு மனந்திரும்புகிறேன். என் இரட்சிப்பிற்காக உம்மை நான் விசுவாசிக்கிறேன். ஆச்சரியமான உமது கிருபைக்காக, மன்னிப்புக்காக நீர் கொடுத்த நித்திய ஜீவனுக்காக நன்றி சொல்கிறேன். ஆமென்!
நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
மறுபடி பிறந்த கிறிஸ்தவன் என்றால் என்ன?
|