settings icon
share icon
கேள்வி

நாம் ஏன் வேதாகமத்தை படிக்க / ஆராய வேண்டும்?

பதில்


வேதாகமம் என்பது தேவனுடைய வார்த்தையாகவே இருக்கிறபடியால் நாம்அதை படித்து ஆராய வேண்டும். வேதாகமம் என்பது ‘‘ தேவனுடைய சுவாசம்’’ (2திமோதேயு 3:16). மற்றொரு விதத்தில் கூறப்போனால் தேவனுடைய வாயிலிருந்து நமக்காக வந்த வார்த்தை தத்துவஞானிகள் கேட்டிருக்கிற பல கேள்விகளுக்கு வேதவாக்கியங்களில் தேவன் பதிலளிக்கிறார். நம்முடைய வாழ்வின் நோக்கம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? மரணத்திற்குப் பின்பு வாழ்க்கை உண்டா? நான் பரலோகத்திற்கு எப்படிச் செல்வது? உலகம் ஏன் தீமையினால் நிறைந்திருக்கிறது? நாம் நன்மை செய்ய ஏன் போராடுகின்றோம்? இந்தப் பெரிய கேள்விகளோடு, வேதாகமம் கீழ்கண்ட காரியங்களில் நடைமுறை விளக்கங்களையும் தருகின்றது.

எனக்கு துணை வேண்டும் என்று ஏன் நினைக்கின்றேன்? வெற்றிகரமான திருமண வாழ்வு வாழ்வதெப்படி? நான் ஒரு நல்ல நண்பனாக எப்படி இருக்க முடியும்? நான் ஒரு நல்ல தகப்பனாக எப்படி இருக்க முடியும்?வெற்றி என்றால் என்ன? அதை நான் எப்படி அடைவது? நான் எப்படி மாறுவது? வாழ்க்கையில் மிக முக்கியமான காரியம் எது? நான் எப்படி வாழ்ந்தால் பின்னிட்டு பார்க்கும்போது வருத்தப்படாமலிருக்க முடியும்? நியாயமில்லாத சூழ்நிலைகளையும், கெட்ட சம்பவங்களையும் நான் எப்படி வெற்றிகரமாகக் கொண்டாடுவது.

வேதாகமம் முற்றிலும் நம்பகமானதும் பிழையில்லாததுமாய் இருக்கிறபடியால் நாம் அதைப்பிடித்து ஆராய வேண்டும். எல்லா ‘‘பரிசுத்த’’ புத்தகங்களைக் காட்டிலும் வேதாகமம் தனித்துவம் வாய்ந்தது. அது ஒழுக்க நெறிமுறைகளை மட்டும் கொடுத்து ‘‘ என்னை நம்பு’’ என்று கூறுவதில்லை. மாறாக நாம் அதை சோதித்து அறிய முடியும். அதிலிருக்கிற நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களையும், வரலாற்று குறிப்புகளையும், அறிவியல் உண்மைகளையும் வைத்து நாம் சோதித்து அறிய முடியும்.

மனிதனுடைய சுபாவமும் விருப்பங்களும் மாறாமல் இருக்கின்றது. வேதாகமச் சரித்திரத்தை நாம் வாசிக்கும்போது, ஒரு தனிமனித உறவாக, அல்லது சமுதாயமானாலும் சரி ‘‘ சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை’’ (பிரசங்கி 1:9). மனுக்குலமே ஒட்டுமொத்தமாக அன்பையும், திருப்தியையும் தவறான இடங்களில் தேடும்போது, தேவன் – நல்ல, கிருபையான சிருஷ்டிகர் நமக்கு எது நீடித்த சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று கூறுகிறார். வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாகிய வேதாகமம் மிகவும் முக்கியமானது. ஆகவே இயேசு ‘‘ மனுஷன் அப்பத்தினாலே மாத்தரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்’’ (மத்தேயு4:4) என்று கூறுகிறார். தேவன் நம்மைக் குறித்து நினைத்த வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ வேண்டுமானால், நாம் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையை கவனித்து அதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

வேதாகமத்தில் பிழையுள்ளது என்று கூறுபவர்கள் சத்தியத்திற்கு தங்கள் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயேசு ஒருமுறை கேட்டார். ‘‘என் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து என் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது’’ பின்பு அவருக்கு பாவங்களை மன்னித்து ( நம் கண்களால் பார்க்க முடியாதது) திமிர்வாதக்காரனை சுகமாக்கினார். (தன்னை சுற்றியிருந்த வர்கள் தங்கள் கண்களால் பார்த்து சோதிக்கும்படி). இதைப்போலவே தேவனுடைய வார்த்தை சத்தியம் என்ற நிச்சயத்தை ஆவிக்குரிய காரியங்களை, நாம் காணக்கூடாமல் உணர்ச்சிகளால் சோதிக்க முடியாதவைகளை, நாம் சோதிக்க கூடியவைகளாகிய காரியங்களான வரலாற்று துல்லியம், அறிவியல் துல்லியம் மற்றும் தீர்க்கதரிசன துல்லியம் ஆகியவற்றை வைத்து அதை சத்தியம் என்று புரிய வைக்கின்றது.

றாம் வேதாகமத்தை படித்து ஆராய வேண்டும். ஏனென்றால் தேவன் மாறாதவராயிருக்கிறார். மனிதனுடைய சுபாவமும் மாறாததாயிருக்கிறது. நமக்கு எழுதப்பட்டபோது இருந்தது போலவே இன்றும் இருக்கின்றது. தொழில்நுட்பங்கள் மாறும்போதும் அநேக தவறான போதனைகள் இருப்பதால் நாம் வேதாகமத்தை படித்து ஆராய வேண்டும். வேதாகமம் சத்தியத்திலிருந்து தவறான காரியங்களை வேறுபடுத்திக்கொள்ள ஒரு அளவுகோலை நமக்கு தருகின்றது. தேவன் எப்படிப்பட்டவர் என்று கூறுகின்றது. தேவனைக்குறித்த தவறான அபிப்பிராயம் கொண்டிருப்பதே விக்கிரகத்தை வணங்குவதற்கும் தவறான கடவுளை வணங்குவதற்கும் சமானம். அவர் எப்படி இல்லையோ அப்படியே நாம் தவறாக புரிந்து அவரை ஆராதிக்கின்றோம். வேதாகமம் ஒருவர் பரலோகத்திற்கு உண்மையாகவே எப்படி செல்கிறார் என்று கூறுகின்றது. அது நற்கிரியைகள் மூலமாக அல்ல, ஞானஸ்நானம் மூலமாக அல்ல, அல்லது வேறு எந்தக் காரியத்தினாலும் அல்ல (யோவான் 14:6,எபேசியர் 2:1-10, ஏசாயா 53:6, ரோமர் 3:10-18, 5:8, 6:23, 10:9-13). இந்த வரிசையில் தேவனுடைய வார்த்தை தேவன் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்றும் காட்டுகின்றது. (ரோமர் 5:6-8, யோவான் 3:16) இதைக் கற்றுக் கொள்வதன் மூலமாகவே நாம் அவரை பிரியுத்திரமாக நேசிக்கும்படி இழுக்கப்படுகிறோம். (I யோவான் 4:19).

வேதாகமம் தேவனுக்கு ஊழியம் செய்யும்படி நம்மை தகுதிப்படுத்துகின்றது. (2 திமோத்தேயு 3:17, எபெசியா 6:17, எபிரேயர்4:12) நம்முடைய பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவது எப்படி என்றும் அமதன் பின்விளைவுகள் என்ன என்றும் நாம் அறிந்துக்கொள்ள உதவுகின்றது. (2 திமோத்தேயு 3:15). தேவனுடைய வார்த்தையை தியானித்து அந்த போதனைகளுக்குக் கீழ்படிவது வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டு வரும் (யோசுவா 1:8, யாக்கோபு 1:25). தேவனுடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையிலிருக்கும் பாவங்களைக் கண்டுனர்ந்து அதை அகற்ற உதவுகின்றது. (சங்கீதம் 119:9,11). நம்முடைய வாழ்க்கையில் வழி நடத்தி, நமக்கு போதித்தவர்களைக் காட்டிலும் ஞானவான்களாய் மாற்றுகின்றது. (சங்கீதம் 32:8, 119:99, நீதிமொழிகள் 1:6). வேதாகம்ம் நம்முடைமய வாழ்நாளின் வருஷங்களை நிரந்தரமில்லாத காரியங்களில் வீணடிக்காமல் பாதுகாக்கின்றது. (மத்தேயு 7:24-27).

வேதாகமத்தை நாம் ஆராய்ந்து படிக்கும்போது, அது நம்முடைய கவர்ச்சிகரமான ‘தூண்டுதலுக்கு’ பின்னால் தவறு செய்யாமல் மற்றவர்களுடைய தவறிலிருந்து நாம் கற்றுக்கொள்ள உதவுகின்றது. அனுபவமே நல்ல ஆசான், ஆனால் பாவத்திலிருந்து கற்றுக்கொள்வதென்பது ஒரு கொடூரமான ஆசானாக இருக்கின்றது. மற்றவர்களுடைய தவறிலிருந்து கற்றுக்கொள்வதே நலமானது. வேத்த்திலுள்ள அநேக பாத்திரங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். சிலர் தங்களுடைய வாழ்க்கை வெவ்வேறு காலக்கட்டத்திலு நமக்கு நெர்மறையான, எதிர்மறையான உதாரணங்களாக இருக்கிறார்கள். ( எ.கா.) தாவீது கோலியாத்தை வீழ்த்தியபோது, தேவன் நம்மை எதிர்கொள்ளச்செய்கிற எந்த காரியத்தையும் விட பெரியவர் என்று போதிக்கிறார். ( 1சாமுவேல் 17) ஆனால் பத்சேபாளுடனான தற்காலிக பாவச் செயலால் எவ்வளவு அதிகமான, கொடூரமான பின்விளைவுகளைச் சந்திக்க முடியும் என்று நமக்கு காட்டுகின்றது. (2 சாமுவேல் 11).

வேதாகமப் புத்தகம் என்பதை படிக்க மட்டும் கூடாது. இதை ஆராய்ந்து பின் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்த வேண்டும். அல்லது உணவை வெறுமனே மென்று துப்புவதற்கு சமமாகிவிடும். அதனால் ஒரு சத்தும் உடம்பிற்குக் கிடைக்காது. வேதாகமம் தேவனுடைய வார்த்தை. அது இயற்கையின் சட்டங்களைப்போல நம்மையும் இமணக்கிறதாயிருக்கிறது. இதை நாம் உதாசீனப்படுத்தவும் முடியும். அப்படி செய்வோமானால் அது நம்முடைய சொந்த அழிவுக்கு நாமே காரணமாகிவிடுவோம். புவிஈர்ப்பு விசையை உதாசீனப்படுத்தினால் என்ன ஆகும்! வேதாகமம் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்று இதைவிட அதிகமாக வலியுறுத்த முடியாது. வேதாகமத்தை ஆராய்வது ஒரு குகையில் பொன்னைக் கண்டுபிடிப்தற்கு சமம். நாம் சிறிய முயற்சியை எடுப்போமானால் அங்கிருக்கிற நீரோட்டத்தில் ‘‘சிறு கூழாங்கல்லை அகற்றிப் பார்த்தால்’’ நாம் தங்க துகள்களைத்தான் பார்க்கமுடியும், ஆனால் அதை தோண்டி எடுக்க முயற்சித்தால், அதிக பலனைப் பெறுவோம்.

English



முகப்பு பக்கம்

நாம் ஏன் வேதாகமத்தை படிக்க / ஆராய வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries