settings icon
share icon
கேள்வி

பாவத்தின் சொற்பொருள் விளக்கம் என்ன?

பதில்


தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் என்றும் (1 யோவான் 3:4) மற்றும் தேவனுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுதலும் பாவம் (உபாகமம் 9:7; யோசுவா 1:18) பாவம் என்று வேதாகமம் விவரிக்கிறது. தூதர்களில் மிகவும் அழகும் வல்லமையும் வாய்ந்த லூசிபரில் இருந்து பாவம் ஆரம்பமானது. அவனுக்கு இருந்த பதவியில் திருப்தியாயிராமல், தேவனைவிட உயர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினான். இதுவே அவன் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று மற்றும் பாவத்தின் ஆரம்பமும் இதுதான் (ஏசாயா 14:12-15). சாத்தான் என்று பெயர் மாற்றப்பட்ட அவன், மனுக்குலத்திற்க்கு பாவத்தை கொண்டு வந்தான். ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளிடம் “நீங்கள் தேவனை போல ஆவீர்கள்” என்று சொல்லி, தனக்கிருந்த அதே ஆசையை அவர்களில் தூண்டி அவர்களை சோதித்ததினால், அவர்கள் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் அவரை எதிர்த்தார்கள் (ஆதியாகமம் 3). அதிலிருந்து பாவமானது ஆதாமிலிருந்து அவனது தலைமுறை தலைமுறையாக மனித இனத்தில் தொடர்ந்து வருகிறது. நாம் ஆதாமின் சந்ததிகளானபடியால், அவன் மூலமாக பாவம் நமக்கும் வந்திருக்கிறது. ரோமர் 5:12 சொல்லுகிறது என்னவென்றால், ஆதாம் மூலமாக பாவம் உலகத்தில் பிரவேசித்தது, மற்றும் மரணமும் எல்லா மனிதர்களுக்கும் கடந்துவந்தது, ஏனென்றால் “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23).

ஆதாம் மூலமாக, இயற்கையாகவே பாவம் செய்யவேண்டும் என்கிற பாவ இயல்பு மனுகுலத்திற்கு வந்தது, அதினிமித்தம் மனிதர்கள் சுபாவத்தில் இயற்கையாகவே பாவிகளானார்கள். ஆதாம் பாவம் செய்தபொழுது, அந்த பாவத்தினால் அவனது உள்ளான சுபாவம் மாற்றப்பட்டது, அது அவனுக்கு ஆவிக்குரிய மரணத்தையும் துன்மார்க்கத்தையும் கொண்டு வந்தது, இவைகள் அவனுக்கு பின் வரும் சந்ததிகளிலும் தொடர்ந்தது. நாம் பாவம் செய்கிறதினால் பாவிகள் அல்ல; மாறாக, நாம் பாவிகளாக இருக்கிறபடியினால் பாவம் செய்கிறோம். இப்படி நமக்கு அளிக்கப்பட்ட இந்த துன்மார்க்கமான பாவ சுபாவத்தை தான் சுதந்தரித்துக்கொள்ளப்பட்ட பாவம் என்று அழைக்கப்படுகிறது. எப்படி சரீரப்பிரகாரமான அம்சங்களை நாம் பெற்றோரிலிருந்து சுதந்தரிக்கிறோமோ, அப்படியே பாவ சுபாவத்தை ஆதாமிலிருந்து சுதந்தரிக்கிறோம். இந்த விழுந்துபோன சுபாவத்தின் நிலையைக் குறித்துதான் தாவீது இப்படியாக புலம்புகிறார்: “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” (சங்கீதம்51:5).

சுமத்தப்பட்ட பாவம் என்பது மற்றொரு விதமான பாவமாகும். கிரேக்க வார்த்தையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட “சுமத்துதல்” (impute) என்கிற வார்த்தை நிதி நிலையிலும் சட்ட அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால், “ஒருவருடையதை எடுத்து மற்றவரின் கணக்கில் செலுத்துவதாகும்.” மோசேயின் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படும் முன்பதாக, பாவம் மனிதனின் மேல் சுமத்தப்படவில்லை, சுதந்தரித்தறித்துக்கொண்ட பாவத்தின் நிமித்தமாக மனிதர்கள் பாவிகளாக இருந்தார்கள். ஆனால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பிறகு, நியாயப்பிரமாணத்தை மீறி செய்யபட்ட பாவங்கள் யாவும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டது (கணக்கிடப்பட்டது) (ரோமர் 5:13). ஆதாமிலிருந்து மோசே வரையும் இருந்த மனிதர்கள் மரித்தார்கள், ஆனால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மீறி பாவம் செய்ததினால் மரிக்கவில்லை, மாறாக அவர்கள் சுதந்தரித்திருந்த பாவ சுபாவத்தினால் மரித்தார்கள். மோசேயுக்குப் பிறகு வந்த மனிதர்கள் ஆதாம் மூலமாக சுதந்தரித்துக்கொண்ட பாவ சுபாவம் மற்றும் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை மீறினதினால் சுமத்தப்பட்ட பாவத்தினாலேயும் மரித்தார்கள்.

சுமத்தப்படுதல் என்கிற இந்த பிரமாணத்தை தேவன் மனிதர்களின் நன்மைக்காக பயன்படுத்தினார், எவ்வாறெனில் தேவன் விசுவாசிகாளின் பாவத்தை இயேசு கிறிஸ்துவின் கணக்கில் சுமத்தினார். இயேசு சிலுவையில் மரித்ததின் மூலமாக அந்த பாவத்திற்க்கான விலைக்கிரயத்தை செலுத்தினார். நம் பாவத்தை அவர் மேல் சுமத்தினபடியால், தேவன் இயேசுவை ஒரு பாவியை போல கருதி நடத்தினார், ஆனால் இயேசு பாவம் செய்யாதவராக இருந்தபோதிலும் இந்த முழு உலகத்தின் பாவத்திற்காக மரிக்கும்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் (1 யோவான் 2:2). இங்கே நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், இயேசுவின் மேல் பாவம் சுமத்தப்பட்டது ஆனால் அவர் ஆதாமின் பாவத்தை சுதந்தரிக்கவில்லை. அவர் பாவத்திற்கான விலைகிரயத்தை செலுத்தினார், ஆனால் அவர் பாவியாகவில்லை. அவரின் தூய்மையும் பரிசுத்தமான சுபாவம் பாவத்தால் தீட்டுபடவில்லை. அவர் ஒரு பாவமும் செய்யாதிருந்தபோதிலும், மனிதர்கள் செய்த எல்லா பாவத்தின் நிமித்தம் குற்றவாளியை போல நடத்தப்பட்டார். இதற்க்கு ஈடாக, தேவன் கிறிஸ்துவின் நீதியை விசுவாசிகளுக்கு சுமத்தி நமது பாவத்தை கிறிஸ்துவின் கணக்கில் செலுத்தினது போல நமது கணக்கில் இயேசுவின் நீதியை செலுத்தினார் (2 கொரிந்தியர் 5:21).

மூன்றாவது விதமான பாவம் என்னவென்றால், தனிப்பட்ட பாவம், அதாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் செய்யும் பாவம். நாம் ஆதாமில் இருந்த பாவ சுபாவத்தை சுதந்தரித்தபடியால், தனி நபராக, தனிப்பட்ட பாவங்களை செய்கிறோம். இது, அறியாமையில் சொல்லும் பொய்யிலிருந்து கொலை செய்யும் பாவம் வரை இருக்கும் எல்லா பாவங்களும் அடங்கியுள்ளது. இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்காதவர்கள், அவர்களின் தனிப்பட்ட, சுதந்தரிக்கபட்ட, மற்றும் சுமத்தப்பட்ட பாவங்களுக்காக அவர்கள் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் நித்திய தன்டனையான நரகம் மற்றும் ஆவிக்குரிய மரணத்தில் இருந்து விடுவிக்கபட்டிருக்கின்றார்கள். மேலும் பாவத்தை எதிர்க்கும் வல்லமையும் நமக்கு இருக்கின்றது. இந்த தனிப்பட்ட பாவங்களை செய்வதும் செய்யாமல் இருப்பதும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று, ஏனென்றால் பாவத்தை எதிர்த்து நிற்க பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு வல்லமை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நமக்குள் வாசம்பண்ணி, நம்மை பரிசுத்தப்படுத்துகிறார் மற்றும் நாம் பாவம் செய்யும்போது நம்மை உணர்த்துகிறார் (ரோமர் 8:9-11). நாம் செய்த தனிப்பட்ட பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்து மன்னிப்பைக் கேட்கும்போது, நாம் மீண்டும் அவரோடு பூரணமான உறவு கொள்ளும்படி மீட்கப்படுகிறோம். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9).

நாம் மூன்று முறையிலும் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டிருக்கிறோம் – அதாவது சுதந்தரிக்கப்பட்ட பாவம், சுமத்தப்பட்ட பாவம், மற்றும் தனிப்பட்ட பாவத்தின் நிமித்தமாக குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டிருக்கிறோம். இதற்கு நீதியுள்ள தண்டனை மரணம் (ரோமர் 6:23), அதாவது சரீர மரணம் மட்டுமல்ல நித்திய மரணமும் (வெளிப்படுத்தல் 20:11-15) அடங்கும். அதிர்ஷ்டவசமாக சுதந்தரிக்கப்பட்ட பாவம், சுமத்தப்பட்ட பாவம், மற்றும் தனிப்பட்ட பாவம், இவைகள் யாவும் இயேசுவில் சிலுவையில் அடிக்கப்பட்டன. இப்பொழுது இயேசுவை இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்வதினால், “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபேசியர் 1:7).

English



முகப்பு பக்கம்

பாவத்தின் சொற்பொருள் விளக்கம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries