மரணத்திற்கு பின் வாழ்க்கை
 
 

மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா?



கேள்வி: மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா?

பதில்:
ஸ்திரியினிடத்தில் பிறந்தவன் வாழ்நாள் குறுகினவனும் அவன் பூவைப்போல் பூத்து அறுப்புண்கிறான் நிழலைப்போல நிற்காமல் ஒடிப்போகிறான். என்று வேதம் சொல்கிறது (யோபு. 14:1-2,14) யோபுவைப் போல் நம்மில் அனேகருக்கு இன்கேள்விகள் சவாலாய் இருக்கலாம்.

நம்மரணத்திற்கு பின் என்ன நிகழும்? நாம் உயிர்வாழ தடைகொண்டுவருகிறோமா? மரித்தபின் நாம் ஒரே இடம் செல்கிறோமா அல்லது வெவ்வேறு இடங்களுக்கு செல்கிறோமா? மரணத்திற்கு பின் நித்திய வாழ்க்கை மாத்திரம் அல்ல நித்திய மகிமையும் உண்டு (Iகொரி. 2:9)ல் எழுதியிருக்கிறபடி தேவன் தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை. அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. தேவனாகிய கிறிஸ்து நமக்கு நித்திய வாழ்க்கை அருளும் பொருட்டு இவ்வுலகத்தில் அவதரித்து.

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா. 53:5) நம்முடைய பாவங்களை அவர் ஏற்றுக்கொண்டு மரணத்தை சிலுவையில் ஜெயமாக வழங்கினார் (ரோ.4:25) ன் படி நம்மை நீதிமான்களாக்கும்படி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். அவர் தன்னுடைய நித்திய வீட்டிற்கு போகுமளவும் நாறபது நாள் பூமியின் மீது தங்கி அப்போஸ்தலருக்கும் மற்ற அனேகருக்கும் தம்மை உயிரோடு இருக்கிறவராக காண்பித்தார்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஓர் உண்மை நிகழ்ச்சி ஒருவராலும் அவ்வுண்மை சம்பவத்தை எதிர்த்து விவாதிக்க முடியாது உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் மூலைக்கல், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நமக்கு உயிர்த்தெழுதல் உண்டு என்று விசுவாசிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் "கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுத்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதலின் முதற்பாலனானவர் மரணம் ஒரு மனிதன் (ஆதாம்) மூலம் பிரவேசித்தது. நாம் எல்லோரும் ஆதாம் மூலம் மரித்து கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவோம் (Iகொரி. 15:20-22, 6:14) எல்லோரும் பரலோகம் செல்லமுடியாது ஒருவன் நித்தியத்தை எங்கே கழிப்பது என்பது அவன் வாழும் இந்த வாழ்க்கையின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. மனிதன் ஒருமுறை மரிப்பதும் அதன்பின் நியாயத்தீர்ப்பு அடைவதும் அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்றும் (எபி. 9:27) நீதிமான்கள் நித்திய வாழ்க்கையடையவும் அவிசுவாசிகள் நித்திய அக்கினியை அடையவும் போவார்கள் (மத்.25:46) நரகம் தேவனுடைய கோபத்திற்குள்ளானவர்கள் நித்தமும் தண்டனை அனுபவிக்கும் இடம்.

நரகம் பாதாளம் என்று விவரிக்கப்பட்டுள்ளது (லூக்.8:31, வெளி.9:1) நரகம் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் இரவும், பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கபடுகின்ற இடம் (வெளி.20:10) (நரகத்தில்) அங்கே கோபமும், துக்கமும் அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத். 13:42), அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலும் இருக்கும் (மாற்.9:48), தேவன் துன்மார்க்கர்களின் மரணத்தை விரும்பாத தெவன் துன்மார்க்கன் தன் வழியைவிட்டு திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறார்.

பூமியின் மீது நம் வாழ்க்கை ஒரு சோதனையே வருங்காலங்களுக்கு நம்மை நாமே ஆயத்தபடுத்திக் கொள்ளவேண்டும். நாம் நீதிமான்களாய் மாற்றப்பட்டு எப்படி நித்திய வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வது? ஓரெ வழி தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். நானே வழியும் சத்தியமும் என்றென்;றைக்கும் மரியாமலும் இருப்பான் (யோ.11:25-26) இலவசமான நித்திய வாழ்க்கை எல்லோருக்கும் உண்டு அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நம்மை தேவனுக்கு அற்பணித்து உலகத்தின் ஆசைகளை வெறுத்து தள்ளவேண்டும் தேவகுமாரனிடத்தில் விசுவாசம் வைக்கிறவர்கள் நித்திய ஜீவனடைவார்கள்.

குமாரனை விசுவாசியாதவனோ நித்திய ஜீவனை காண்பதில்லை தேவ கோபாக்கினை அவன்மேல் நிற்கும். மரணத்திற்கு பின் வேறு தருணம் தரப்படாது. இப்பொழுதே அவர் மீது விசுவாசம் வைத்து அவரை நாம் நேசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். கிறிஸ்து எனக்காக மரித்தார், உயிரோடு எழுந்து ஜீவித்து கொண்டிருக்கிறார் என்று விசுவாசிப்பாயானால் பூமியில் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல தேவனாகிய கிறிஸ்துவோடும் அவருடைய சமூகத்தில் நிச்சயமாய் நம்முடைய நித்தியத்தை கழிக்கலாம்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க



மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா?