நான் மரித்தால் பரலோகம் போவேன் என்று எப்படி எனக்கு தெரியும்?
கேள்வி: நான் மரித்தால் பரலோகம் போவேன் என்று எப்படி எனக்கு தெரியும்?
பதில்:
நீங்கள் மரித்தபின்பு பரலோகம் போவீர்கள் உங்களுக்கு நித்தியவாழ்க்கை உண்டென்று நிச்சயமாய் அறிய வேண்டும் "உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும் இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்" (Iயோ.5:13) ஒருவேளை இப்பொழுது நீங்கள் தேவனுக்கு முன்பாக நிற்கிறீர்கள் தேவன் உங்களை பார்த்து கேட்கிறார் "நான் ஏன் உன்னை பரலோகத்தில் அனுமதிக்க வேண்டும்? நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?" என்ன சொல்வதென்று உங்களுக்கு தெரியாது நீங்கள் அறிய வேண்டியது என்ன? நித்தியத்தை எங்கு கழிக்க வேண்டும் என்று தேவனுடைய அன்பு வழிகாட்டுகிறது. தேவனுடைய அன்பு வழிகாட்டுகிறது என்று மேற்கோள்காட்டுகிற வசனமே (யோ.3:16) நாம் பரலோக செல்லமுடியாதபடி வரும் தடைகள் என்ன என்பதை நாம் உணரவேண்டும். "நம்முடைய பாவங்களே தடைகள்". எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகி"(ரோ. 3:23) "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோ.6:23) ஆனாலும் அவருடைய கிருபையினால் நாம் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டோம் (எபே.2:8-9).
தேவன் பரிசுத்தர். நீதிபரர் அவர் பாவத்தை கண்டிக்கிறவர். ஆனாலும் அவருடைய அன்பை கொண்டு நம்மை மன்னிக்கிறவர். தேவனிடத்தில் நம்மை சேர்க்கும்படி அநீதியில்லாத தேவன் நீதியுள்ளவராய் நம்முடைய பாவங்களின்நிமித்தம் பாடுபட்டார். (Iபேதுரு 3:18) "நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டு நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
நான் மரித்த பின்பு பரலோகம் போவேன் என்ற நிச்சயம் எப்படி உண்டாகும்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் (அப்.16:31) (யோ. 1:12) நீங்கள் நித்திய வாழ்வை இலவசமாய் பெற்றுப்கொள்ள முடியும் (ரோ.6:23) (யோ. 10:10) நீங்கள் நித்தியத்தை இயேசுவோடு பரலோகத்தில் கழிக்கலாம். "நான் போய் உங்களுக்கு ஓர் இடத்தை ஆயத்தம் பண்ணி உங்களை என்னிடம் சேர்த்து கொள்வேன்" (யோ. 14:3).
நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
நான் மரித்தால் பரலோகம் போவேன் என்று எப்படி எனக்கு தெரியும்?
|