settings icon
share icon
கேள்வி

அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாடு என்றால் என்ன?

பதில்


சிக்கலான, தகவல்நிறைந்த உயிரியல் கட்டமைப்புகளை விளக்க அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாடு தேவை மற்றும் இந்த காரணங்கள் அனுபவத்தால் கண்டறியக்கூடியவைகள் என்று அறிவார்ந்த வடிவமைப்பு கோட்பாடு கூறுகிறது. சில உயிரியல் அம்சங்கள் திட்டமான டார்வினின் நிலையற்ற வாய்ப்பின் விளக்கத்தை மீறுகிறது. ஏனென்றால் அவர்கள் வடிவமைக்கப்படுவதற்காக தோன்றியிருக்கிறது. ஒரு வடிவமைப்பிற்கு அறிவுத்திறன் படைத்த ஒரு வடிவமைப்பாளர் அவசியமானதால் அந்த வடிவமைப்பின் தோற்றம் அந்த வடிவமைப்பாளர் யார் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. அறிவார்ந்த வடிவமைப்பு கோட்பாட்டில் மூன்று முதன்மையான விவரங்கள் உள்ளன: 1) குறைக்க முடியாத சிக்கல்கள் 2) குறிப்பான சிக்கல்கள் மற்றும் 3) மனிதப் பண்புகளின் கொள்கை.

குறைக்க முடியாத சிக்கல்களின் வரையறை என்பது, “நன்கு பொருந்தக் கூடிய ஒன்றோடொன்று தொடர்புடைய அடிப்படை செயல்பாட்டிற்கு பங்களிக்கிற பகுதிகள் இசைந்த ஒரு அமைப்பு. இது ஏதேனும் ஒரு பகுதியை அகற்றும் போது அது செயல்பாட்டிலிருந்து அமைப்பை திறம்பட நிறுத்துகிறது. எளிதாக சொன்னால் வாழ்க்கை, பயனுள்ளதாய் இருக்கும் படி ஒருவருக்கொருவர் இசைந்திருக்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய பகுதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. நிலையற்ற மாற்றம் ஒரு புதிய பகுதியின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம், ஆனால் இது ஒரே காலத்தில் நிகழ்கின்ற பல பகுதிகளின் செயல்பாட்டிற்கு அவசியமாய் இருக்கிற அமைப்பின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்க முடியாது. உதாரணமாக மனிதனின் கண் மிக பயனுள்ள அமைப்பாகும். கண்விழி, பார்வை நரம்பு மற்றும் பார்வை புறணி இல்லாமல், நிறந்தரமில்லாத விகாரமடைந்த முழுமையற்ற கண் இனத்தின் வாழ்வுக்கு உண்மையாகவே எதிர் விளைவுண்டாக்கும் ஆகையால் இயற்கைத்தேர்வு செயல் முறை மூலம் அகற்றப்பட முடியும். கண்களின் அனைத்து பகுதிகளும் ஒரே நேரத்தில் ஒழுங்காக செயல்படாவிட்டால் கண்ணானது ஒரு பயனுள்ள அமைப்பில்லாமல் போய்விடும்.

குறிப்பான சிக்கல்கள் என்பது உயிரினங்களில் கண்டுகொள்ள முடிகிற ஒரு குறிப்பிட்ட சிக்கல் வடிவங்களைக் கொண்ட ஒரு கருத்தாக இருக்கிறது, அவைகளின் தோற்றத்திற்கு சில வடிவ வழிகாட்டல்களை கணக்கில்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சிக்கல்கள் விவாதமானது நிரந்தரமில்லாத செயல்பாட்டால் ஒரு சிக்கலான அமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லாதது என்பதாகும். உதாரணத்திற்கு 100 குரங்குகளாலும் 100 கணிணிகளாலும் நிறைந்த ஒரு அறையிலிருந்து ஒரே நேரத்தில் ஒரு சில வார்த்தைகளை அல்லது வாக்கியத்தை உருவாக்க முடியும், ஆனால் அவைகளால் ஒரு போதும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை உருவாக்க முடியாது. ஷேக்ஸ்பியரின் நாடகத்தை விட உயிரியல் வாழ்வு எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது?

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவாக இந்த உலகம் மற்றும் பிரபஞ்சம் சரியாக சீர்படுத்தப்பட்டிருக்கிறது என்று மனிதப் பண்புகளின் கொள்கை சொல்கிறது. பூமியின் காற்றிலுள்ள தனிமத்தின் விகிதம் சிறிதளவு மாற்றப்பட்டால் பல இனங்கள் விரைவில் சுவடு தெரியாமல் அழிந்து போயிருக்கும். பூமியானது சூரியனுக்கு சில மைல்கள் அருகாமையிலோ அல்லது தொலைவிலோ இருந்திருந்தால் பல இனங்கள் சுவடு தெரியாமல் அழிந்திருக்கும். பூமியில் உயிரினங்கள் ஜீவித்திருக்க மற்றும் தெடர்ந்து வாழ பல மாறிகள் சரியான முறையில் சீர்படுத்தப்படடிருக்க வேண்டும். நிலையற்ற மற்றும் ஒற்றுமையில்லாத செயல்பாடுகள் மூலம் தனிமங்கள் வாழ்வடைவது சாத்தியமில்லாதது.

அறிவார்ந்த வடிவமைப்பு கோட்பாடு அறிவுத்திறனுக்கான மூலாதாரத்தை (தேவனாக அல்லது UFOவாக அல்லது வேறு ஏதேனும்) அடையாளம் காண யூகிக்கிறதில்லை, அநேக அறிவுத்திறன் வடிவமைப்பு கோட்பாட்டாளர்கள் தேவ நம்பிக்கை உடையவர்கள் ஆகும். அவர்கள் தேவன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக இருக்கிற உயிரியல் உலகத்தை உட்புகுந்து பரவியிருக்கிற இப்பூமியின் வடிவத்தின் தோற்றத்தை பார்க்கிறார்கள். வடிவத்திற்கான வலுவான ஆதாரத்தை ஒரு சில நாத்திகர்களால் மறுக்க முடிகிறதில்லை. ஆனால் அவர்கள் சிருஷ்டிப்பின் தேவனை ஏற்றுக்கொள்ள விரும்புகிறதில்லை. அவர்கள் காலங்களை ஆதாரமாக கொண்டு பூமியானது வேற்று கிரகவாசிகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று வியாக்கியானிக்கின்றனர். அவர்கள் வேற்று கிரகவாசிகளின் தோற்றத்தை குறித்து எந்த குறிப்பையும் கொடுக்கவில்லை. எனவே அவர்கள் தங்களுடைய தகுந்த பதிலில்லாத சுயமான வாதத்திற்கு திரும்புகின்றனர்.

அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாடு வேதாகம சிருஷ்டிப்பல்ல. இவ்இரண்டு நிலைகளுக்கிடையே முக்கிய வேறுபாடு இருக்கிறது. வேதாகம சிருஷ்டிப்பானது வேதாகமத்தில் சொல்லப்பட்ட சிருஷ்டிப்பை குறித்த பதிவு நம்பகமானது, சரியானது, மற்றும் பூமியில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அறிவுத்திறன் படைத்த தேவனால் வடிவமைக்கப்பட்டது என்கிற தீர்மானத்துடன் ஆரம்பிக்கிறது. இவைகள் இதை நிரூபிக்க இயற்கை உலகினில் இருந்து இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் ஆதாரங்களை தேடுகின்றன. அறிவுத்திறன் வடிவக் கோட்பாடு இயற்கை உலகத்தில் இருந்து ஆரம்பித்து இந்த உலகத்திலுள்ள ஜீவன்கள் எல்லாம் அறிவுத்திறன் படைத்த பிரதிநிதியால் (யாராக இருந்தாலும்) வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற தீர்வை அடைகிறது.

English



முகப்பு பக்கம்

அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாடு என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries