நான்கு ஆவிக்குரிய பிரமாணங்கள்
 
 

ஆவிக்குரிய நான்கு பிரமாணங்கள் என்ன?



கேள்வி: ஆவிக்குரிய நான்கு பிரமாணங்கள் என்ன?

பதில்:
இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக நமக்கு கிடைக்கிறது. இரட்சிப்பிற்கான வழியை இந்த நான்கு பிரமாணங்கள் தருகிறது. முதல் பிரமாணம்:

“தேவன் உன்னை நேசிக்கிறார். அவர் உன் வாழ்க்கைக்கு ஆச்சிரியமான திட்டம் வைத்திருக்கிறார்" யோ. 3:16ல் “தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத்தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்றும் யோ. 10:10ல் “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்." என்றும் தேவனுடைய அன்பைக்குறித்தும், திட்டத்தைக் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. எது தேவனுடைய அன்பிலிருந்து நம்மை தடைசெய்கிறது?

எது தேவன் தருகிற பரிபூரணமான வாழ்க்கையை நம்மிடமிருந்து அகற்றுகிறது? இரண்டாவது பிரமாணம்: பாவத்தினாலே மனித இனம் கரைபட்டுவிட்டது. ஆகவே தேவனிடமிருந்து மனுக்குலம் பிரிக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவாக தேவனுடைய ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இச்செய்தியை ரோ. 3:23 உறுதிப்படுத்துகிறது. "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்". ரோ.6:23 பாவத்தின் விளைவை சொல்லுகிறது. "பாவத்தின் சம்பளம் மரணம்" தேவன் தம்மோடு மனிதன் ஐக்கியப்படும் படி அவனை உண்டாக்கினார். மாறாக மனிதன் பாவத்தை உலகத்துக்கு கொண்டுவந்துவிட்டான். அதினால் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டபின் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்த்த அந்த நல்ல உறவை நாம் எடுத்துக்கொண்டோம். இதற்கு தீர்ப்பு என்ன?

முன்றாவது பிரமாணம்: "நம்முடைய பாவத்திற்காக இயேசுகிறிஸ்து கொடுக்கப்பட்டார். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனோடு உள்ள உறவை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்." ரோ. 5:8ல் "நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." Iகொரி.15:3,4 ல் இரட்சிக்கப்படுவதற்கு எதை அறிந்துகொள்ளவேண்டுமென்றும், எதை விசுவாசிக்கவேண்டுமென்றும் தெரிவிக்கிறது." கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்." இயேசு தாமே இரட்சிப்புக்கு நானே வழியென்று அறிக்கையிடுகிறார். யோ.14:6 ல் "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்@ என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". எப்படி நாம் ஆச்சர்யமான இரட்சிப்பை பெற்றுக்கொள்ளமுடியும்?

நான்காவது பிரமாணம்: இரட்சிப்பின் ஈவைப்பெற்றுக்கொள்வதற்கு இயேசுகிறிஸ்துவே இரட்சகர் என்று விசுவாசிக்க வேண்டும். மற்றும் தேவன் நமக்காக வைத்திருக்கிற அந்த ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்ளவேண்டும். யோ.1:12ல் அவருடைய நாமத்தின் மீது விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுகொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று விவரிக்கிறது. "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்." நாம் தேவனுடைய கிருபையினால் மாத்திரம் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து இயேசுவினாலே இரட்சிக்கப்பட முடியும். (எபே.2:8,9)

இயேசுகிறிஸ்துவே இரட்சகர் என்று விசுவாசிக்கவேண்டுமெனில் பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் தெரியப்படுத்துங்கள். இந்த வார்த்தைகளை சொல்வதினால் இரட்சிப்பு இல்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பதினாலேயே இரட்சிப்பு உண்டாகிறது. இந்த ஜெபமானது, தேவனுக்கு தெரியப்படுத்தவும், தேவனுக்கு உங்கள் விசுவாசத்தை தெரியப்படுத்தவும் தேவன் கொடுத்த இரட்சிப்புக்கு நன்றி சொல்ல மாத்திரமே. "தேவனே நான் பாவம் செய்திருக்கிறேன் என்றும். தண்டனைக்கு பாத்திரவான் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நான் பெறவேண்டிய தண்டனையை இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்டார். ஆகவே விசுவாசத்தின் மூலமாய் என் பாவங்கள் மன்னிக்கப்பட முடியும். நான் பாவத்திலிருந்து மனந்திரும்புகிறேன். என் விசுவாசத்தை உம்மீதே வைக்கிறேன். உமது ஆச்சரியமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் ஈவாகிய நித்திய ஜீவனுக்காகவும் நன்றி சொல்கிறேன். ஆமென்!

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க



ஆவிக்குரிய நான்கு பிரமாணங்கள் என்ன?