settings icon
share icon
கேள்வி

வேதாகமம் பிசாசுகளைக் குறித்து என்னக் கூறுகிறது?

பதில்


வெளிப்படுத்தின விசேஷம் 12:9 குறிப்பிடுகின்றதுபோல, பிசாசுகள் என்பவை விழுந்துபோன தூதர்களாகும்: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலு சர்ப்பம் தள்ளப்பட்டது. அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது. அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்”. சாத்தானுடைய விழுதல் ஏசாயா 14:12-15 மற்றும் எசேக்கியேல் 28:12-15 ஆகிய வேத பாகங்களில் அடையாளமாக விளக்கப்பட்டுள்ளன. சாத்தான் விழுந்தபோது அவன் தன்னுடனே மூன்றில் ஒரு பங்கான தூதர்களையும் எடுத்துக்கொண்டான் என்று வெளிப்படுத்தின விசேஷம் 12:4 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதா 6-வது வசனமும் பாவம் செய்த தூதர்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. ஆகவே வேதாகமத்தின்படி விழுந்துபோன தூதர்கள்தான் பிசாசுகள், அவைகள் சாத்தானோடு சேர்ந்து தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணுதலை தெரிந்துக் கொண்டன.

சில பிசாசுகள் அவைகளுடைய பாவத்திற்கு ஏற்கனவே சிறையிலடைப்பட்டுள்ளன. அதாவது அவைகள் “நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து” வைத்திருக்கப்பட்டுள்ளன (யூதா 6). மற்றவை சுதந்திரமாய் சுற்றித்திரிகின்றன, அவைகளை “இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள்... மற்றும் வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகள்” என்று எபேசியர் 6:12 ல் (கொலோசியர் 2:15) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிசாசுகள் சாத்தானை தலைவனாகக் கொண்டு அவனைப் பின்பற்றி பரிசுத்த தூதர்களுக்கு விரோதமாக யுத்தத்தில் ஈடுபட்டு தேவனுடைய திட்டத்தை தகர்ப்பதிலும், தேவனுடைய ஜனங்களை தடைசெய்வதிலுமே ஈடுபடுகின்றன (தானியேல் 10:13).

பிசாசுகள், ஆவிக்குரிய ஜீவன்களாக இருப்பதால், அவைகள் ஒரு சரீரத்தைப் ஆட்கொள்ளும் / பிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. ஒரு மனிதனின் உடலை முழுமையாக ஒரு பிசாசு ஆளுகை செய்வதன் மூலம் பிசாசு ஒருவனைப் பிடிக்கின்றது / ஆட்கொள்ளுகிறது. இது ஒரு தேவனுடைய பிள்ளைக்கு நடக்காது, ஏனென்றால் ஒரு கிறிஸ்தவ விசுவாசியின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார் (1 யோவான் 4:4).

இயேசு, அவருடைய பூமிக்குரிய ஊழியத்தில் பல பிசாசுகளை எதிர்கொண்டார். ஒரு பிசாசும் அவருடைய வல்லமைக்கு நிகராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது: “அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள், அவர் அந்த ஆவிகளைத் தமது வாரத்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்” (மத்தேயு 8:16). பிசாசுகள் மீது இயேசுவுக்கு இருந்த அதிகாரம் அவர் தேவனுடைய குமாரன் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது (லூக்கா 11:20). இயேசுவை எதிர்கொண்ட பிசாசுகளுக்கு இயேசு எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை தெளிவாக அறிந்திருந்தன; “தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன?” என்று (பிசாசுகள்) கத்திக்கூப்பிட்டன. “காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரே என்று கூப்பிட்டார்கள்” (மத்தேயு8:29). அவைகளுடைய முடிவு ஒரு வேதனையுள்ளதாக இருக்குமென்று பிசாசுகளுக்குத் தெரியும்.

சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் தேவனுடைய கிரியையை அழிக்கவும், முடிகிற எவனையும் வஞ்சிக்க தேடிக்கொண்டிருக்கின்றன (1 பேதுரு 5:8; 2 கொரிந்தியர் 11:14-15). பிசாசுகள் (தீய) அசுத்த ஆவிகள் என்றும் (மத்தேயு 10:1) அசுத்த ஆவிகள் என்றும் (மாற்கு 1:27) பொய்யின் ஆவிகள் என்றும் (1 ராஜாக்கள் 22:23) சாத்தானின் தூதர்கள் என்றும் (வெளிப்படுத்தின் விசேஷம் 12:9) விவரிக்கப்பட்டுள்ளது. சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் உலகத்தை வஞ்சிக்கிறது (2 கொரிந்தியர் 4:4), கள்ள (தவறான) உபதேசங்களைப் பரப்புகின்றன (1 தீமோத்தேயு 4:1), கிறிஸ்தவர்களை தாக்குகின்றன (2 கொரிந்தியர் 12:7; 1 பேதுரு 5:8 ), மற்றும் பரிசுத்த தூதர்களோடு சண்டையிடுகின்றன (வெளிப்படுத்தின விசேஷம் 12:4-9).

பிசாசுகள் / விழுந்துபோன தூதர்கள் தேவனுடைய பகைவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பகைவர்களாகும். கிறிஸ்து “துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துக்கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்” (கொலோசெயர் 2:15). நாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது நாம் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவான் 4:4).

English



முகப்பு பக்கம்

வேதாகமம் பிசாசுகளைக் குறித்து என்னக் கூறுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries